என் மலர்
உலகம்

Grok AI ChatBot-க்கு தடை விதித்த இந்தோனேசியா
- Grok AI செயலியை முழுமையாகத் தடை செய்த முதல் நாடு.
- ஏஐ செயல்கள் மனித உரிமை மீறல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.
எலோன் மஸ்க்கின் Grok AI ChatBot இந்தோனேசியாவில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.இந்தச் செயலி மூலம் ஆபாசமான மற்றும் தவறான (Deepfake) புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, இந்தோனேசியாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Grok AI மூலம் பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி ஆபாசமாகச் சித்திரிக்க முடியும் என்ற புகார்கள் சமீபகாலமாக உலகளவில் அதிகரித்தன.
இதுதொடர்பாக, இந்தோனேசியாவின் தகவல் மற்றும் டிஜிட்டல் விவகாரங்கள் துறை அமைச்சர் மியுத்யா ஹபீத் (Meutya Hafid), "இந்த வகையான செயல்கள் மனித உரிமை மீறல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்" என்று கூறி இந்தத் தடையை அறிவித்தார்.
Grok AI செயலியை முழுமையாகத் தடை செய்த முதல் நாடு இந்தோனேசியா என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






