என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புல்லட் ரெயில்"

    • புல்லட் ரெயில் இயங்குவதற்கான தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
    • பணிகளை மேற்கொண்டு வரும் புல்லட் ரெயில் இன்ஜினியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

    அகமதாபாத்:

    இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் சேவை திட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை தொடங்கப்பட உள்ளது. இதற்காக 508 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரெயில் இயங்குவதற்கான தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அகமதாபாத், ஆனந்த், வதோதரா, பருச், சூரத், பிலிமோரா, வாபி, பொய்சார், விரார், தானே மற்றும் மும்பை என முக்கிய நகரங்கள் வழியாக இந்த புல்லட் ரெயில் இயக்கப்படவுள்ளது.

    இந்நிலையில், சூரத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் புல்லட் ரெயில் இன்ஜினியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் கேட்டறிந்தார். அதன்பின் பிரதமர் மோடி பேசியதாவது:

    மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் சேவை திட்டம் தொடர்பான அனுபவங்களை, இன்ஜினியர்கள் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு அந்த அனுபவம் உதவியாக இருக்கும்.

    நம் நாடு தொடர்ந்து சோதனை நடத்துவதிலேயே இருக்கக் கூடாது. பணிகளில் கிடைத்த அனுபவங்களை புதிய திட்டங்களில் பிரதிபலிக்க வைக்க வேண்டும். அனுபவங்களை ஆவணப்படுத்துவதன் மூலம் அடுத்து வரும் இளம் தலைமுறையினர் தேச கட்டுமானப் பணிகளில் சிறப்பான பங்களிப்பை தர முடியும். அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ வேண்டும் என தெரிவித்தார்.

    • புல்லட் ரெயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டில் அறிவித்தார்.
    • இந்தத் திட்டத்துக்கு 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    அகமதாபாத்:

    மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே அதிவேகம் கொண்ட புல்லட் ரெயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டில் அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கு 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இவ்விரு நகரங்களுக்கு இடையேயான 508 கி.மீ. தூரத்திற்கு 12 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் தொழில் நுட்பத்தில் அமைக்கப்படும் புல்லட் ரெயில் திட்டத்தின் மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடி.

    இந்நிலையில், நாட்டின் முதல் புல்லட் ரெயில் எப்போது இயக்கப்படும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    குஜராத்தில் கண்பத் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கருத்தரங்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:

    புல்லட் ரெயில் திட்டத்திற்கான அனைத்துப் பணிகளும் அதிவேகமாக நடைபெற்று வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். குஜராத்தில் அதன் பணிகள் திறம்பட நடைபெற்று வருகின்றன.

    ரெயில் தண்டவாள பாதைகள் அமைப்பது, மின்சார வினியோகம் என அனைத்துப் பணிகளும் துரித வேகத்தில் நடக்கிறது.

    சமீபத்தில் ஜப்பான் மந்திரி நகானோ குஜராத்திற்கு வந்திருந்தார். இந்தத் திட்டத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    ஆகஸ்ட், 2027-ம் ஆண்டு புல்லட் ரெயில் சேவையை தொடங்க வேண்டும். மக்கள் சேவைக்கு அதை அளிக்க வேண்டும் என்பது எங்களின் இலக்காக இருக்கிறது என தெரிவித்தார்.

    • தென்னிந்தியாவில் புல்லட் ரெயில் சேவை கொண்டு வரப்படும்.
    • அதற்கான கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.

    விசாகப்பட்டினம்:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய உணவு உற்பத்தி உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு பேசியதாவது:

    தென்னிந்தியாவில் புல்லட் ரெயில் சேவை கொண்டு வரப்படும். அதற்கான கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இது ஐதராபாத், அமராவதி, சென்னை, பெங்களூருவை இணைக்கும் வகையில் அமையும். இந்த சேவையால் 4 நகரங்களைச் சேர்ந்த 5 கோடி மக்கள் பயன்பெறுவர்.

    புல்லட் ரெயில் சேவை தவிர, தென் மாநிலங்கள் தங்களது சாலைகளை பெரிய அளவில் மேம்படுத்த போகிறது. சர்வதேச தரத்துக்கு இணையாக தொலைதூர சாலைகளை கூட சிறப்பாக பராமரிப்பது இதில் அடங்கும். இந்தியாவின் பழங்கள் விளைச்சலில் ஆந்திர பிரதேசம் 25 சதவீதம் பங்களிக்கிறது. விவசாயிகளுக்கான புதிய சர்வதேச சந்தைகளை தேடி வருகிறோம்.

    உணவு பதப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய துறைகளில் நிறுவனங்களை நிறுவ முதலீட்டாளர்களை வலியுறுத்த புதிய முயற்சிகளுக்கான அனுமதிகளை ஆந்திர அரசு விரைவுபடுத்தும். அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கால் ஈர்க்கப்பட்ட ஒரு திட்டமான சிலிகான் வேலி திட்டம் அமராவதியில் நிறுவப்படுவதற்கு, எதிர்கால மேம்பாடு குறித்து பில் கேட்சுடன் ஆந்திரா ஒத்துழைக்கும் என தெரிவித்தார்.

    • ஐதராபாத்தில் இருந்து சென்னை வரை காசிபேட்டை மற்றும் நல்கொண்டா வழியாக 3 பழைய ரெயில் பாதைகள் உள்ளன.
    • புல்லட் ரெயில் இயக்கப்பட்டால் 3 மணி நேரத்தில் அந்தந்த நகரங்களை அடைய முடியும்.

    திருப்பதி:

    ஐதராபாத்தில் இருந்து அண்டை மாநிலங்களில் உள்ள பெருநகரங்களுக்கு புல்லட் ரெயில் வசதிகளை வழங்கும் பணிகள் வேகம் பெற்று வருகின்றன.

    ஏற்கனவே ஐதராபாத், மும்பை அதிவேக பாதையின் விரிவான திட்ட அறிக்கை ரெயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு ஆந்திரா வழியாக 2 தனித்தனி அதிவேக புல்லட் ரெயில் பாதைகள் அமைப்பது தொடர்பாக இறுதி ஆய்வு சீரமைப்பு நடந்து வருகிறது.

    புல்லட் ரெயில் மணிக்கு அதிகபட்சமாக 350 கிலோமீட்டர் வேகத்திலும் சராசரியாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    ஐதராபாத் வழியாக சென்னை மற்றும் பெங்களூரு அதிவேக வழித்தடத்திற்கான இறுதி ஆய்வு பணிகளை மேற்கொண்ட ரெயில்வே துணை நிறுவனமான ரைட்ஸ் முதற்கட்ட சீரமைப்புகளை வகுத்துள்ளது.

    ஐதராபாத்தில் இருந்து சென்னை வரை காசிபேட்டை மற்றும் நல்கொண்டா வழியாக 3 பழைய ரெயில் பாதைகள் உள்ளன. ஐதராபாத் மற்றும் விஜயவாடா இடையே தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

    இந்த 3 வழித்தடங்களில் புல்லட் ரெயில் பாதை அமைக்க ஆரம்பத்தில் விவாதிக்கப்பட்டது. காசிபேட்டை வழியாக இருந்தால் தூரம் அதிகமாக இருக்கும்.

    தேசிய நெடுஞ்சாலை அல்லது நல்கொண்டா வழியாக 2 வழித்தடங்களை ஆய்வு செய்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் உள்ளன.

    தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் அமைச்சர்கள் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவை சந்தித்தபோது. அதிவேக புல்லட் ரெயில் வழித்தடங்கள் குறித்து விவாதித்தனர்.

    மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் பாதை திட்டம் முடிந்ததும் ஐதராபாத்-சென்னை மற்றும் ஐதராபாத்-பெங்களூரு திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    தற்போது ஐதராபாத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு ரெயில் பயண நேரம் 12-13 மணிநேரம் ஆகும். புல்லட் ரெயில் இயக்கப்பட்டால் 3 மணி நேரத்தில் அந்தந்த நகரங்களை அடைய முடியும்.

    புல்லட் ரெயில் பாதை திட்டத்தில் தமிழகத்தில் 61 கிலோமீட்டர், ஆந்திராவில் 464 கிலோமீட்டர், தெலுங்கானாவில் 180 கிலோமீட்டர் பணிகள் நடைபெற உள்ளன.

    • ஜப்பானின் செண்டய் நகரில் பிரதான வழித்தடத்தில் புல்லட் ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.
    • ரெயில்கள் இந்தியா வந்தவுடன் உள்நாட்டு நிலப்பரப்பு மற்றும் காலநிலை நிலைமைகளின் கீழ் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும்.

    புதுடெல்லி:

    ரெயில்வே துறையை நவீனப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் அதிவேக புல்லட் ரெயில்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் முதல் புல்லட் ரெயில் சேவை மும்பை-அகமதாபாத் இடையே அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    இதையடுத்து இந்த வழித்தடத்தில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தியாவின் புல்லட் ரெயில் திட்டத்துக்கு 2 ஷிங்கான்சென் புல்லட் ரெயில்களை ஜப்பான் பரிசளிக்கிறது. இந்தியா-ஜப்பான் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக புல்லட் ரெயில்களை இந்தியாவுக்கு பரிசளிக்க உள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கான புல்லட் ரெயில் கட்டுமான பணி ஜப்பானில் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. ஷிங்கான்சென் ரகத்தைச் சேர்ந்த இ-3, எல்-67 ஆகிய புல்லட் ரெயில்களின் சோதனை ஓட்டம் நடந்தது. இந்தியாவில் நிலவும் வெப்பம், புழுதி போன்ற சூழலுக்கேற்ப ஜப்பானில் இந்தச் சோதனை ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஜப்பானின் செண்டய் நகரில் பிரதான வழித்தடத்தில் புல்லட் ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. செண்டய் நகரில் சோதனை ஓட்டம் முடிவடைந்ததை அடுத்து அங்கிருந்து நைகாடா நகருக்கு புல்லட் ரெயில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    பின்னர் நைகாடா துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இந்தியாவுக்கு புல்லட் ரெயில்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயக்க வடிவமைக்கப்பட்ட இந்த புல்லட் ரெயில்கள் அடுத்த ஆண்டின் தொடக் கத்தில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரெயில்கள் இந்தியா வந்தவுடன் உள்நாட்டு நிலப்பரப்பு மற்றும் காலநிலை நிலைமைகளின் கீழ் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும். குஜராத் மாநிலம் சூரத்-பிலிமோரா இடையே 50 கி.மீ. வேகத்தில் புல்லட் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    குஜராத்தின் அகமதாபாத்-மகாராஷ்டிரா மும்பை இடையே 508 கி.மீ தொலைவுக்கு இயக்கப்படும் இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் பாதையின் அதிகபட்ச வேகம் மணிக்கு 320 கி.மீ. ஆகும். மொத்தமுள்ள 508 கி.மீ. தொலைவில் 348 கி.மீ. குஜராத்திலும், 156 கி.மீ. மகாராஷ்டிரத்திலும் உள்ளது. இதில் 21 கி.மீ. பகுதி நிலத்தடியிலும், 7 கி.மீ. கடல் சுரங்கப் பாதை வழியாகவும், 5 கி.மீ. மலை சுரங்கப்பாதை வழியாகவும் செல்லும். அகமதாபாத்-மும்பை இடையேயான தூரத்தை புல்லட் ரெயில் 2 மணி நேரம் 58 நிமிடங்களில் கடக்கும்.

    • ரெயில் நிலையம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்குள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுடன் புல்லட் ரெயிலில் பயணம் செய்து டோக்கியோ சென்றடைந்தார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர்-ஜப்பான் சென்றுள்ளார்.

    சிங்கப்பூரில் 2 நாட்கள் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தொழில் அதிபர்களை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதன் பிறகு ஜப்பான் நாட்டுக்கு சென்ற அவர் அங்குள்ள ஒசாகா நகரில் தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார்.

    அந்நாட்டு தொழிற்சாலைகளையும் சென்று பார்வையிட்டார். ஜப்பான் தொழில் அதிபர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொண்ட அவர் அங்குள்ள தொழில் அதிபர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வருமாறும் அழைப்பு விடுத்தார்.

    சென்னையின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    ஜப்பானில் வாழும் தமிழர்களையும் சந்தித்து பேசினார். அங்கு நடைபெற்ற கலாசார நிகழ்ச்சி களிலும் பங்கேற்றார்.

    ஒசாகா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டோக்கியோ நகருக்கு செல்ல புல்லட் ரெயிலில் பயணம் மேற்கொண்டார்.


     இதற்காக ரெயில் நிலையம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்குள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுடன் புல்லட் ரெயிலில் பயணம் செய்து டோக்கியோ சென்றடைந்தார்.

    தனது புல்லட் ரெயில் பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறி இருப்பதாவது:- ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரெயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை 2½ மணி நேரத்திற்குள் அடைந்து விடுவோம்.

    உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும், தரத்திலும் புல்லட் ரெயில்களுக்கு இணையான ரெயில் சேவை நமது இந்தியாவிலும் பயன் பாட்டுக்கு வர வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

    • வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    • 50 கிமீ தூரத்தில் உள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் பிரிவு ஆகஸ்ட் 2026ல் நிறைவடைகிறது.

    குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள "சபர்மதி மல்டி மாடல் டிரான்ஸ்போர்ட் ஹப்" என பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் முனையத்தின் வீடியோவை ரெயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று வெளியிட்டார்.

    இந்த முனையம் அதிநவீன அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் பயணிகளுக்கு வசதியான மற்றும் சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் அகமதாபாத் மற்றும் மும்பை இடையே இயக்கப்பட உள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில், வீடியோவை வெளியிட்ட ரெயில்வே அமைச்சர்,"இந்தியாவின் முதல் புல்லட் ரெயிலுக்கான முனையம். சபர்மதி மல்டிமாடல் போக்குவரத்து மையம், அகமதாபாத்," என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ வெளியானதில் இருந்து 565,000க்கும் அதிகமான பார்வைகளையும் 20,000க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் குவித்துள்ளது.

    மேலும், குஜராத்தில் உள்ள பிலிமோரா மற்றும் சூரத் இடையேயான 50 கிமீ தூரத்தில் உள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் பிரிவு ஆகஸ்ட் 2026ல் நிறைவடையும் என்று ரெயில்வே அமைச்சர் அறிவித்திருந்தார்.

    • 16 அடி நீளம் கொண்ட பாம்பு ரெயிலுக்குள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • ஜப்பானில் புல்லட் ரெயில் சேவை தொடங்கிய 60 வருடங்களில் காலதாமதமாக ரெயில் நிலையத்தை வந்தடைவது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜப்பான் நாட்டில் புல்லட் ரெயில் சேவை மக்களுக்கு பெரிதும் பயன்படும் சேவையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் நகோயா மற்றும் டோக்கியோ நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் புல்லட் ரெயிலில் 16 அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்துள்ளது.

    இது தொடர்பான தகவல்கள் வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகோயா- டோக்கியோ இடையே செயல்படும் ஷிங்கன்செயிங் ரெயில் இயக்கத்தில் இருந்த போது ரெயிலுக்குள் பாம்பு இருந்ததை பயணி ஒருவர் கவனித்துள்ளார். உடனடியாக அவர் இதுகுறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் ரெயிலை நிறுத்தத்தில் நிறுத்திய அதிகாரிகள் வனத்துறை உதவியுடன் அந்த பாம்பை அகற்றினர்.

    16 அடி நீளம் கொண்ட அந்த பாம்பு ரெயிலுக்குள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் ரெயில் புறப்பாட்டில் 17 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாகவும், ஜப்பானில் புல்லட் ரெயில் சேவை தொடங்கிய 60 வருடங்களில் காலதாமதமாக ரெயில் நிலையத்தை வந்தடைவது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்தின் மொத்த நீளம் 508 கிமீ ஆகும்.
    • இந்த அதிவேக ரெயில் பாதையில் மொத்தம் 12 ரெயில் நிலையங்கள் இருக்கும்.

    மும்பை-அகமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 14, அன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரால் இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.

    மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்தின் மொத்த நீளம் 508 கிமீ ஆகும். இதில் 348 கிமீ குஜராத்திலும் 156 கிமீ மகாராஷ்டிராவிலும் அடங்கும். மணிக்கு 320 கிமீ வேகத்தில் செயல்படக்கூடிய புல்லட் ரெயில் மும்பை-அகமதாபாத் இடையேயான தூரத்தை வெறும் இரண்டு மணி நேரத்தில் கடக்கும்.

    இந்த அதிவேக ரெயில் பாதையில் மொத்தம் 12 ரெயில் நிலையங்கள் இருக்கும். இந்த 12-ல், 8 ரெயில் நிலையங்கள் குஜராத்திலும், 4 ரெயில் நிலையங்கள் மகாராஷ்டிராவிலும் இருக்கும். இந்த ரெயில் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே வரையறுக்கப்பட்ட நிறுத்தங்களுடன் பயணிக்க தோராயமாக 2.07 மணிநேரம் எடுக்கும், மொத்த நிறுத்தங்களுடன் 2.58 மணிநேரம் ஆகும்.

    புல்லட் ரெயில் நிலையங்கள் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குஜராத்தில் உள்ள 8 ரெயில் நிலையங்களிலும் அடித்தளம் அமைக்கும் பணி முடிவடைந்து, மேல்கட்டமைப்புகள் கட்டும் பணி மேம்பட்ட நிலையில் உள்ளது.

    குஜராத்தில் அமைந்துள்ள வாபி, பிலிமோரா, சூரத், ஆனந்த், அகமதாபாத் ஆகிய 5 புல்லட் ரெயில் நிலையங்களின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன . இந்த புல்லட் ரெயில் நிலையங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


    • தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திற்கு இடையில் உள்ளது.
    • இரண்டு நிலையங்களுக்கு இடையே முடிக்கப்பட்ட மற்றொரு ஆற்றுப் பாலம் மோஹர் நதி ஆகும்.

    குஜராத்தில் மும்பை- அகமதாபாத் அதிவேக ரெயில் பாதைக்கான (MAHSR) பாலம் கேடா மாவட்டத்தில் உள்ள வத்ராக் ஆற்றின் மீது கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று ரெயில்வே அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும் "ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையங்களை இணைக்கும் மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்திற்காக 280 மீட்டர் நீளமுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் தற்போது நிறைவடைந்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளது.

    ரெயில்வே அமைச்சக திட்டத்தில் மொத்தம் 24 ஆற்றுப் பாலங்கள் உள்ளன. குஜராத்தில் 20 மற்றும் மகாராஷ்டிராவில் 4 உள்ளன. தற்போது குஜராத்தில் உள்ள 20 பாலங்களில் 10 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

    "இந்நிலையில் தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திற்கு இடையில் உள்ளது. இரண்டு நிலையங்களுக்கு இடையே முடிக்கப்பட்ட மற்றொரு ஆற்றுப் பாலம் மோஹர் நதி" ஆகும்.

    "இந்த நதி ராஜஸ்தானின் துங்கர்பூர் மலைப்பகுதியில் உருவாகி குஜராத்தில் மேகராஜ் தாலுகாவின் மொய்டி கிராமத்திற்கு அருகில் நுழைகிறது. வத்ராக் ஆறு ஆனந்த் புல்லட் ரெயில் நிலையத்திலிருந்து 25 கி.மீ தொலைவிலும், அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ தொலைவிலும் உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    • மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்தின் மொத்த நீளம் 508 கிமீ ஆகும்.
    • புல்லட் ரெயில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    மும்பை-அகமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 14, அன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரால் இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.

    மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்தின் மொத்த நீளம் 508 கிமீ ஆகும். இதில் 348 கிமீ குஜராத்திலும் 156 கிமீ மகாராஷ்டிராவிலும் அடங்கும். மணிக்கு 320 கிமீ வேகத்தில் செயல்படக்கூடிய புல்லட் ரெயில் மும்பை- அகமதாபாத் இடையேயான தூரத்தை வெறும் இரண்டு மணி நேரத்தில் கடக்கும்.

    இந்த புல்லட் ரெயில் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், குஜராத்தின் ஆனந்த் நகரில் உள்ள மாஹி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒருபகுதி இன்று இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 தொழிலாளர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 


    • இன்டீரியர் நாய்ஸ் மற்றும் பிரேக்கிங் டிஸ்டன்ஸ் ஆகியவற்றில் சர்வதேச அளவில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.
    • சீனாவில் அதிவேக ரெயில் தடம் [HSR] சுமார் 47,000 கி.மீ. தூரத்துக்கு அந்நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.

    சீனாவின் அதிவேக புல்லட் ரெயிலின் மேம்படுத்தப்பட்ட மாதிரி நேற்று [ஞாயிற்றுக்கிழமை] வெளியிடப்பட்டது. இந்த அதிவேக மாதிரி, சோதனை ஓட்டங்களின் போது 450 கிமீ வேகத்தை எட்டியதாகக் அதை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவே உலகின் அதிவேக ரெயில் ஆகும்.

    சீன ரெயில்வே துறையான சைனா ஸ்டேட் ரயில்வே குரூப் கோ கூற்றுப்படி, CR450 ப்ரோட்டோடைப் என அழைக்கப்படும் இந்த புதிய மாடல், பயண நேரத்தை மேலும் குறைத்து ரெயில் இணைப்பை இணைப்பை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

     

    இந்த CR450 மாதிரி மணிக்கு 450 கிலோமீட்டர் [450 kmph] சோதனை வேகத்தை எட்டி, முக்கிய செயல்திறன் இண்டிகேட்டர்களிலும்- செயல்பாட்டு வேகம், எனர்ஜி கன்சம்ஸசன், இன்டீரியர் நாய்ஸ் மற்றும் பிரேக்கிங் டிஸ்டன்ஸ் ஆகியவற்றில் சர்வதேச அளவில் ரெயில்வேயின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    தற்போது சீனாவில் பயன்பாட்டில் உள்ள CR400 Fuxing அதிவேக ரெயில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் சீன அதிவேக ரெயில் தடத்தில் [HSR] இயங்குகிறது.

     

    இந்நிலையில் அதை விடதற்போது அறிமுகப்டுதொட்டுள்ள CR450 மாதிரி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மேலும் சோதனைகளை துரிதப்படுத்தி அதை மேம்படுத்தி வருகிறது. சீனாவில் அதிவேக ரெயில் தடம் [HSR] சுமார் 47,000 கி.மீ. தூரத்துக்கு அந்நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.

    ×