என் மலர்tooltip icon

    உலகம்

    மீண்டும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்தது அமெரிக்கா
    X

    மீண்டும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்தது அமெரிக்கா

    • போதைப் பொருள் கடத்துவதாகக் கூறி வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
    • கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது.

    வாஷிங்டன்:

    வெனிசுலா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

    இதையடுத்து, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகக்கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டு அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்தது. இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    வெனிசுலாவில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது.

    இந்நிலையில், வெனிசுலாவுடன் தொடர்புடைய மேலும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்தது.

    கரீபியன் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்க படைகள் பறிமுதல் செய்தது. இந்த கச்சா எண்ணெய் கப்பல் வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்களுடன் தொடர்புடையது என தெரிய வந்தது.

    Next Story
    ×