என் மலர்

  நீங்கள் தேடியது "Nicolas Maduro"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெனிசுலா விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்துங்கள் என்று அமெரிக்காவுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. #VenezuelaCrisis #VenezuelaBorderClashes #JuanGuaido

  மாஸ்கோ:

  வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் கெய்டோ போட்டி அரசாங்கம் நடத்துகிறார். தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துள்ளார். அவருக்கு அமெரிக்கா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

  அதேநேரத்தில் அதிபர் மதுரோவுக்கு ரஷியா மற்றும் சீனாவும் ஆதரவு அளித்துள்ளன. இதற்கிடையே ரஷியாவின் 2 ராணுவ விமானங்கள் கராகஸ் விமானநிலையத்துக்கு வெளியே ராணுவ வீரர்கள் மற்றும் ஆயுத தள வாடங்களுடன் ஒருவாரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

  இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உடனே ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். அதற்கு ரஷியா-வெனிசுலா இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்ளது.

   


  வெனிசுலாவுக்கு ரஷியா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது ரஷியா ‘எஸ்-300’ என்ற ஏவுகணையை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதனால் இங்கு விமான ராணுவங்களும், வீரர்களும் முகாமிட்டுள்ளதாக தெரிவித்தது.

  இந்தநிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்பால் ரஷியாவுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், வெனிசுலாவில் இருந்து வெளிநாட்டு படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

  அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியா வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் மரியா ‌ஷகாரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில் வெனிசுலாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும், மிரட்டுவதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். பொருளாதார பிரச்சினையை ஏற்படுத்தி உள்நாட்டு போர் உருவாக்குவதையும் நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. #VenezuelaCrisis #VenezuelaBorderClashes #JuanGuaido

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிரான மற்றும் ஆதரவு போராட்டங்களின்போது ஏற்பட்ட மோதல்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். #VenezuelaProtests #NicolasMaduro
  காரகாஸ்:

  வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.

  ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. மதுரோவுக்கு எதிரான போராட்டம் மற்றும் ஆதரவு போராட்டங்களால் பல்வேறு பகுதிகளில் மோதல் வெடித்தது.

  அதிபர் மதுரோவுக்கு எதிராக, ராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டதுடன், பொதுமக்களையும் வீதிக்கு வந்து போராடும்படி அழைப்பு விடுத்தனர். அதன்பின்னர், போராட்டம் தீவிரமடைந்து பதற்றம் அதிகரித்துள்ளது.  நேற்று மதுரோவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இதில் போர்ச்சுகீசா, பரினாஸ், டாச்சிரா, காரகாஸ், அமமேசானஸ் மற்றும் பொலிவார் மாநிலங்களில் நடந்த மோதல்களில் 16 பேர் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

  இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக நேற்று பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிபர் மதுரோ பதவி விலகவேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. #VenezuelaProtests #NicolasMaduro

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தன்னை கொலை செய்யவும், வெனிசூலாவில் ஆட்சியை கவிழ்க்கவும் அமெரிக்கா சதி திட்டம் தீட்டுவதாக நிக்கோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். #Venuzuela #NicolasMaduro
  கராகஸ்:

  தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசூலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

  ஆனால் அங்கு அதிபராக உள்ள நிக்கோலஸ் மதுரோ, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும், மாறாக அவர் சர்வாதிகார ஆட்சியில் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

  இதனை காரணம் காட்டி அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

  இந்த நிலையில், தன்னை கொலை செய்யவும், வெனிசூலாவில் ஆட்சியை கவிழ்க்கவும் அமெரிக்கா சதி திட்டம் தீட்டுவதாக நிக்கோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். அதிபர் மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது:-

  என்னை படுகொலை செய்யவும், வெனிசூலாவில் அயல்நாட்டு படைகளை குவித்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும் அமெரிக்கா சதி திட்டம் தீட்டி வருகிறது. இந்த பொறுப்பு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதனை எதிர்கொள்ள நட்பு நாடுகளின் உதவியோடு வெனிசூலா மக்கள் தாயராக இருக்கிறார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.  #Venuzuela #NicolasMaduro
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெனிசுலா அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் எதிர்க்கட்சி எம்பி மீதான குற்றம் நிரூபணமானால் அவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. #NicolasMaduro #JuanRequesens
  கராகஸ்:

  வெனிசுலா தலைநகர் கராகசில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி ராணுவம் மற்றும் தேசிய படைகளின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் அதிபர் நிகோலஸ் மதுரோ பங்கேற்று உரையாற்றியபோது அவரை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

  வெடிகுண்டுகளுடன் வந்த 2 ஆளில்லா விமானங்கள் வெடித்து சிதறியபோது, பாதுகாப்பு படை வீரர்கள் அதிபரை சூழந்து கொண்டு அவரை பாதுகாத்தனர். இதனால் அதிபர் மதுரோ அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். பல வீரர்கள் காயமடைந்தனர்.

  இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய சபையின் துணைத்தலைவரும், ஜஸ்டிஸ் பர்ஸ்ட் கட்சி எம்பியுமான ஜுவான் ரிகொசன்ஸ் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


  இவ்வழக்கு வரும் 18ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தாய்நாட்டைக் காட்டிக்கொடுத்தல், குற்ற சதி, பயங்கரவாதம் உள்ளிட்ட  6 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் இந்த குற்றங்கள் நிரூபணமானால் ஜுவான் ரிகொசன்சுக்கு அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. இத்தகவலை அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். #Venezuela #NicolasMaduro #JuanRequesens
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமீபத்தில் நடைபெற்ற வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் நிக்கோலஸ் மதுரோ வென்ற நிலையில், வெனிசுலா நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.#trumph #sanctionsagainstVenezuela
  வாஷிங்டன்:

  சமீபத்தில் வெனிசுலாவில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் தில்லு முல்லு நடைபெற்றதாக கூறி முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்த நிலையில், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார்.

  இந்த தேர்தல் தொடர்பாக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறுகையில், ‘வெனிசுலா அதிபர் தேர்தல் போலியான ஒன்று. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை. முறைகேடாக நடைபெற்ற இந்த தேர்தல், வெனிசுலாவின் புனிதமிக்க ஜனநாயக கலாச்சாரத்தை தகர்த்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

  முறைகேடான இந்த தேர்தலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிப்பதாகவும், இந்த தேர்தல் அரசியலமைப்பின் ஒழுங்கை குலைப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

  இதையடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவிலிருந்து வெனிசுலாவுக்கான பொருளாதார பரிவர்த்தனைகள் மற்றும் இதர ஒப்பந்தங்களுக்கும் தடை விதித்து வெனிசுலா நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை விதித்துள்ளார்.

  மேலும், அமெரிக்க நிறுவனங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலான வெனிசுலா அரசின் பங்குகள், விற்பனை, பரிமாற்றங்கள், போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். #trumph #sanctionsagainstVenezuela
  ×