search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "clashes"

    • சுமார் 80 ஆயிரம் பேர் ஐன் எல்-ஹில்வே முகாமில் வாழ்கின்றனர்
    • வன்முறையால் முகாம்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓடிவிட்டனர் என ஐ.நா. தகவல்

    மேற்கு ஆசியாவில் உள்ள நாடு லெபனான்.

    அங்கு 12-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய நாட்டு அகதிகளுக்கான முகாம்கள் இருக்கின்றன. அவற்றில் மிக பெரியது ஐன் எல்-ஹில்வே (Ain el-Hilweh) முகாம்.

    லெபனான் முழுவதும் உள்ள சுமார் 2.5 லட்சம் பாலஸ்தீனிய அகதிகளில் சுமார் 80 ஆயிரம் பேர் ஐன் எல்-ஹில்வே முகாமில் வாழ்கின்றனர். இதில் பதிவு செய்யப்பட்ட அகதிகள் மட்டுமே சுமார் 63 ஆயிரம் பேர் இருப்பார்கள் என ஐ.நா. கூறுகிறது.

    லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள சிடான் நகரத்திற்கருகே இந்த முகாம் உள்ளது. இப்பகுதி லெபனான் பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளதால், அங்குள்ள முகாம்வாசிகளின் பாதுகாப்பை அவர்கள்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும். அங்கு அடிக்கடி மோதல்கள் நடைபெறும்.

    கடந்த ஜூலை 29 முதல் இங்கு இருதரப்பினரிடையே மோதல்கள் தொடங்கியது. இதில், இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிலைமை மோசமடையலாம் என்பதால் சில உலக நாடுகள் தங்கள் நாட்டினர் லெபனானுக்கு செல்ல கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன.

    சவுதி அரேபியா நேற்று லெபனானில் வசிக்கும் தன் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டிருக்கிறது. மேலும் அங்கிருந்து வெளியேறும் வரை ஆயுத மோதல்கள் நடக்கும் பகுதிகளை நெருங்குவதைத் தவிர்க்கவும் தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

    லெபனானில் உள்ள சவுதி தூதரகம் ஒரு அறிக்கையில், லெபனான் நாட்டிற்கு பயணத்தடையை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டிருந்தாலும் எந்தெந்த பகுதிகளைத் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கவில்லை.

    இதேபோல் குவைத், லெபனானில் வசிக்கும் தன் நாட்டு மக்களை அங்கு கவனமுடன் இருக்குமாறும், ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவித்திருக்கிறது. ஆனால், தற்போதுவரை அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடவில்லை.

    பிரிட்டன், தன் நாட்டிலிருந்து லெபனானுக்கு செல்ல விரும்புவர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் லெபனானின் தெற்கின் சில பகுதியான ஐன் எல்-ஹில்வே முகாமுக்கு அருகில் "அத்தியாவசிய பயணம் மட்டுமே" மேற்கொள்ளுமாறும், பிற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

    "இந்த சண்டை தொடரக்கூடாது. இதனால் ஏற்படும் விளைவுகள் முகாமில் வசிப்பவர்களுக்கும், பாலஸ்தீனிய மக்களுக்கும், அனைவருக்கும் மோசமானதாக இருக்கும். மோதலை நிறுத்துங்கள். மோதலை நிறுத்த யாராவது அழுத்தம் கொடுக்க முடியும் என்றால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்" என லெபனான் நாட்டின் ஷியா பிரிவு அரசியல் கட்சியாகவும், ராணுவ குழுவாகவும் திகழும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையத் அசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.

    அங்குள்ள முகாம்களில் நடைபெறும் வன்முறையால் அவற்றில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓடிவிட்டனர் என 4 நாட்களுக்கு முன் ஐ.நா. தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ஆந்திராவில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடி அருகே நடந்த மோதலில் தெலுங்குதேசம் கட்சி தொண்டர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். #LokSabhaElections2019 #TDPWorkerKilled
    அமராவதி:

    மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வேறு வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.



    இந்நிலையில், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தாடிபத்ரி தொகுதிக்குட்பட்ட மீராபுரம் வாக்குச்சாவடி அருகே, ஆளும் தெலுங்குதேசம் கட்சியினரும், ஒய்எஸ்ஆர் காங்கிரசாரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த மோதலில், தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த சித்தா பாஸ்கர் ரெட்டி என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    இதேபோல் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் தொடர்பாக ஆளும் தெலுங்குதேசம் கட்சியினருக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் சிலர் காயமடைந்துள்ளனர். சட்டனபள்ளி தொகுதியில் சட்டசபை சபாநாயகர் கொடிலா சிவப்பிரசாத ராவ் தாக்கப்பட்டார்.

    குண்டக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஜன சேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா, வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்தபோது, கட்சி சின்னம் சரியாக பிரின்ட் செய்யப்படவில்லை என்று கூறி வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #TDPWorkerKilled
    வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிரான மற்றும் ஆதரவு போராட்டங்களின்போது ஏற்பட்ட மோதல்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். #VenezuelaProtests #NicolasMaduro
    காரகாஸ்:

    வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.

    ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. மதுரோவுக்கு எதிரான போராட்டம் மற்றும் ஆதரவு போராட்டங்களால் பல்வேறு பகுதிகளில் மோதல் வெடித்தது.

    அதிபர் மதுரோவுக்கு எதிராக, ராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டதுடன், பொதுமக்களையும் வீதிக்கு வந்து போராடும்படி அழைப்பு விடுத்தனர். அதன்பின்னர், போராட்டம் தீவிரமடைந்து பதற்றம் அதிகரித்துள்ளது.



    நேற்று மதுரோவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இதில் போர்ச்சுகீசா, பரினாஸ், டாச்சிரா, காரகாஸ், அமமேசானஸ் மற்றும் பொலிவார் மாநிலங்களில் நடந்த மோதல்களில் 16 பேர் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக நேற்று பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிபர் மதுரோ பதவி விலகவேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. #VenezuelaProtests #NicolasMaduro

    ஏமன் நாட்டின் ஹொடெய்டா பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்து உள்ளது. #Yemen #Hodeida #Clashes
    ஹொதய்தா:

    ஏமனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றும், செங்கடல் துறைமுக நகருமான ஹொதய்தா கடந்த 4 ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கிறது. இந்த நகரை அவர்களிடம் இருந்து மீட்டெடுக்க அதிபர் ஆதரவு படையினர் கடந்த ஒரு வார காலமாக அங்கு கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.

    இரு தரப்புக்குமான இந்த போரில் அப்பாவி மக்களும் சிக்கி பலியாகி வருகின்றனர். இதில் 24 மணி நேரத்தில் மட்டும் 43 கிளர்ச்சியாளர்களும், அதிபர் ஆதரவு படையினர் 9 பேரும் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

    அங்கு தொடர்ந்து சண்டை நீடித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்து உள்ளது. கடைசியாக கிடைத்த தகவலின்படி 110 கிளர்ச்சியாளர்கள், அதிபர் ஆதரவு படையினர் 32 பேர் மற்றும் அப்பாவி மக்கள் 7 பேர் என 149 பேர் இந்த போரில் பலியானதாக தெரிகிறது. 
    ஏமன் நாட்டின் ஹொடெய்டா பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் 61 பேர் உயிரிழந்தனர். #Yemen #Hodeida #Clashes
    சனா:

    ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரான் அரசின் ஆதரவுடன் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.



    அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடெய்டா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    இந்நிலையில், ஹொடெய்டாவில் ஹவுத்தி போராளிகளுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஹொடைடா மாகாணத்தில் நேற்றிலிருந்து கடந்த 24 மணிநேரமாக நிகழ்ந்த மோதலில் ஹவுத்தி போராளிகளில் 43 பேரும் முன்னாள் அதிபர் அப்துல்லா சாலேவின் ஆதரவாளர்கள் 18 பேரும் உயிரிழந்ததாக ஏமன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  #Yemen #Hodeida #Clashes

    ராமநாதபுரம் அருகே நடந்த கோஷ்டி மோதல் குறித்து 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே பனைக்குளம் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் ராமன் (வயது 21) .இவருக்கும் இதே கிராமத்தை சேர்ந்த தங்கச்சாமி என்பவருக்கும் ஏற்பட்ட தகராறு கோஷ்டி மோதலாக மாறியது.

    இதில் ராமன் தரப்பை சேர்ந்த வேலுச்சாமி, லட்சுமணன், சீதாலட்சுமி, ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ராமனின் தாய் சீதா லட்சுமி அணிந்திருந்த 5 பவுன் நகையையும் திருடிச் சென்று விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக புதுக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த தங்கசாமி, முனியசாமி, முத்துக்குமார், பால முருகன், கோவிந்தராஜ், கண்ணன், மலையரசன், சந்திரகுமார், பெரிய கருப்பன் ,செல்வராஜ், முத்து, தங்கவேல் ஆகிய 12 பேர் மீது தேவிபட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜபிரபு வழக்கு பதிவு செய்தார். இதில் மலையரசன்,சந்திரகுமார் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    தலைமறைவான மற்ற 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
    ×