என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெனிசுலா விவகாரம்"

    • கிரீன்லாந்தை ஒப்படைக்காவிட்டால், ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிக்கும்
    • கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுமா என்ற கேள்விக்கு, No Comments என டிரம்ப் பதில் அளித்தார்.

    ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இதற்கிடையே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக டென் மார்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

    இதற்கிடையே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ், பின்லாந்து ஜெர்மனி உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதலாக 10% வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், கிரீன்லாந்தை ஒப்படைக்காவிட்டால், ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிக்கும் என்றும், இதில் 100% உறுதியாக உள்ளதாகவும் டிரம்ப் மீண்டும் மிரட்டல் வைத்துள்ளார்.

    ராணுவ படையெடுப்பு மூலம் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுமா என்ற கேள்விக்கு, No Comments என டிரம்ப் பதில் அளித்தார்.

    இந்நிலையில், கிரீன்லாந்தில் அமெரிக்க தேசிய கொடியை ஏந்தி நிற்பதுபோல், தனது AI படத்தை Truth Social தளத்தில் டிரம்ப் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தில் 2026 ஆம் ஆண்டு முதல் கிரீன்லாந்து அமெரிக்க பிரதேசமாக நிறுவப்பட்டது" என்று எழுதப்பட்டுள்ளது.

    மேலும், கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா நாட்டை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டும் ஒரு AI படத்தையும் பகிர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கனடா நாட்டை அமெரிக்காவின் 51 ஆவது மகனாக இணைக்கவேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் வெனிசுலா நட்டு அதிபரை கைது செய்து அட்டையும் டிரம்ப் மிரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மூலம் நமது நாட்டு மக்கள் ஈட்டி வந்த லாபம் இனி கிடைக்காது.
    • காங்கிரஸ் தனது இந்திய-எதிர்ப்பு மனநிலையைத் தெளிவுபடுத்துகிறது

    காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவான் வெனிசுலா அதிபர் மதுரோவின் கைது குறித்து தெரிவித்த கருத்து இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், 

    50 சதவீத வரியுடன் வர்த்தகம் செய்வது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. நடைமுறையில், இது இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை, குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு செய்யப்படும் ஏற்றுமதியைத் தடுப்பதற்குச் சமமாகும். முன்பு அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மூலம் நமது நாட்டு மக்கள் ஈட்டி வந்த லாபம் இனி கிடைக்காது. நாம் மாற்றுச் சந்தைகளைத் தேட வேண்டியிருக்கும், அதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன." என தெரிவித்தார்.


    பிரித்விராஜ் சவான்

    தொடர்ந்து மதுரோ கைது குறித்து பேசிய அவர், 

    "அப்படியானால் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுகிறது. வெனிசுலாவில் நடந்தது போன்ற ஒன்று இந்தியாவில் நடக்குமா? திரு. ட்ரம்ப் நமது பிரதமரைக் கடத்திச் செல்வாரா?" என தெரிவித்தார். 

    இவரின் இந்த கருத்துகள் விமர்சனங்களையும், கேலி, கிண்டல்களையும் பெற்றுவருகிறது. சமூக வலைதளத்தில் இவரின் இந்த கருத்துகளை பலரும் நகைச்சுவை செய்தாலும், பாஜகவினர் இந்த கருத்துக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

    "காங்கிரஸ் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கீழ்த்தரமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவான் இந்தியாவின் நிலையை வெனிசுலாவுடன் வெட்கமின்றி ஒப்பிடுகிறார். 'வெனிசுலாவில் நடந்தது இந்தியாவில் நடக்குமா?' என்று கேட்பதன் மூலம், காங்கிரஸ் தனது இந்திய-எதிர்ப்பு மனநிலையைத் தெளிவுபடுத்துகிறது. ராகுல் காந்தி பாரதத்தில் குழப்பத்தை விரும்புகிறார். ராகுல் காந்தி பாரதத்தின் விவகாரங்களில் வெளிநாட்டினரின் தலையீட்டை நாடுகிறார்!" என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    வெனிசுலா நாட்டில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீதான தடையை தளர்த்துவதற்கு, அமெரிக்கா புதிய நிபந்தனையை விதித்துள்ளது. #VenezuelaOilCompany #USSanctions #NickolasMaduro
    வாஷிங்டன்:

    எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், கடந்த மே மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. பிரதான எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், இம்மாதத் தொடக்கத்தில் அவர் இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இதற்கிடையே பாராளுமன்றத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த எதிர்க்கட்சி தலைவரும் சபாநாயகருமான ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து, அதிபராக அங்கீரித்துள்ளன. அத்துடன், அதிபர் நிகோலஸ் மதுரோ அதிகாரத்தை ஜூவான் கெய்டோவிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தி வருகின்றன.

    ஆனால், ஜூவான் கெய்டோவின் நியமனத்தை அதிபர் மதுரோ ஏற்க மறுத்துவிட்டார். அத்துடன் அமெரிக்காவுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாகவும் அறிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ஜூவான் கெய்டோவுக்கோ அமெரிக்க தூதர்களுக்கோ ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்கா பதிலடி தரும் என்றார்.



    இந்நிலையில், அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஸ்டீவன் மனுச்சின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வெனிசுலா அதிபர் மதுரோ, தற்காலிக அதிபராக அறிவித்துள்ள ஜூவான் கெய்டோவிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தும் என்று கூறினார்.

    பிடிவிஎஸ்ஏ நிறுவனம் மீது நேற்று புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது குறிப்பிடத்தக்கது. #VenezuelaOilCompany #USSanctions #NickolasMaduro

    வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிரான மற்றும் ஆதரவு போராட்டங்களின்போது ஏற்பட்ட மோதல்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். #VenezuelaProtests #NicolasMaduro
    காரகாஸ்:

    வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.

    ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. மதுரோவுக்கு எதிரான போராட்டம் மற்றும் ஆதரவு போராட்டங்களால் பல்வேறு பகுதிகளில் மோதல் வெடித்தது.

    அதிபர் மதுரோவுக்கு எதிராக, ராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டதுடன், பொதுமக்களையும் வீதிக்கு வந்து போராடும்படி அழைப்பு விடுத்தனர். அதன்பின்னர், போராட்டம் தீவிரமடைந்து பதற்றம் அதிகரித்துள்ளது.



    நேற்று மதுரோவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இதில் போர்ச்சுகீசா, பரினாஸ், டாச்சிரா, காரகாஸ், அமமேசானஸ் மற்றும் பொலிவார் மாநிலங்களில் நடந்த மோதல்களில் 16 பேர் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக நேற்று பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிபர் மதுரோ பதவி விலகவேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. #VenezuelaProtests #NicolasMaduro

    ×