என் மலர்
நீங்கள் தேடியது "வெனிசுலா அதிபர்"
- வெனிசுலா அதிபர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
- வெனிசுலா அதிபரை பிடித்து கொடுத்தால் ரூ.450 கோடி பரிசு வழங்கப்படும் என்றார் அதிபர் டிரம்ப்.
வாஷிங்டன்:
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் நிகோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக அதிபராக உள்ளார்.
அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் மீது, கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் போதைப்பொருள் தீவிரவாதம் மற்றும் கொக்கைன் கடத்தல் சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அவரைக் கைது செய்ய உதவுவோருக்கு ரூ.131 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. அதன்பின், ஜோ பைடன் நிர்வாகம் அந்தத் தொகையை ரூ.219 கோடியாக உயர்த்தியது.
இந்தத் தொகை சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனைப் பிடிக்க அமெரிக்கா அறிவித்த பரிசுத்தொகைக்கு நிகரானதாகும். இவ்வளவு பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட போதிலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி மதுரோ தனது பதவியில் நீடித்து வருகிறார்.
இந்நிலையில், வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்வதற்கான பரிசுத்தொகையை இரு மடங்காக, அதாவது ரூ.450 கோடியாக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.
மாஸ்கோ:
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் கெய்டோ போட்டி அரசாங்கம் நடத்துகிறார். தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துள்ளார். அவருக்கு அமெரிக்கா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.
அதேநேரத்தில் அதிபர் மதுரோவுக்கு ரஷியா மற்றும் சீனாவும் ஆதரவு அளித்துள்ளன. இதற்கிடையே ரஷியாவின் 2 ராணுவ விமானங்கள் கராகஸ் விமானநிலையத்துக்கு வெளியே ராணுவ வீரர்கள் மற்றும் ஆயுத தள வாடங்களுடன் ஒருவாரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உடனே ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். அதற்கு ரஷியா-வெனிசுலா இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்ளது.

வெனிசுலாவுக்கு ரஷியா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது ரஷியா ‘எஸ்-300’ என்ற ஏவுகணையை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதனால் இங்கு விமான ராணுவங்களும், வீரர்களும் முகாமிட்டுள்ளதாக தெரிவித்தது.
இந்தநிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்பால் ரஷியாவுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், வெனிசுலாவில் இருந்து வெளிநாட்டு படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியா வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் மரியா ஷகாரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில் வெனிசுலாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும், மிரட்டுவதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். பொருளாதார பிரச்சினையை ஏற்படுத்தி உள்நாட்டு போர் உருவாக்குவதையும் நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. #VenezuelaCrisis #VenezuelaBorderClashes #JuanGuaido

வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிக்கிறது. உணவுப் பொருள் உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டதால் அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
ஜூவான் குவைடோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 50 நாடுகள் ஆதரவு தெரிவித்து அங்கீகரித்ததால், அந்த நாடுகளுடன் அதிபர் நிகோலஸ் மதுரோ மோதல் போக்கை கையாண்டு வருகிறார். ஆட்சியைக் கவிழ்க்க அந்த நாடுகள் முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இதற்கிடையில் ஜூவான் குவைடோ கேட்டுக்கொண்டதன் பேரில் அமெரிக்கா போன்ற நாடுகள் வெனிசுலா மக்களுக்கு தேவையான உதவிப் பொருட்களை வழங்க முன்வந்தன. ஆனால் இந்த உதவிகளை மதுரோ ஏற்க மறுத்துவருகிறார். உதவிப் பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் பிரேசில் எல்லையை மூடினார். ஐநா மூலம் வரக்கூடிய உதவிகளை மட்டும் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

தடையை மீறி கொலம்பியாவுக்கு சென்றதால் அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அத்துடன் கொலம்பியாவையும் வெனிசுலாவையும் இணைக்கும் மூன்று பாலங்களையும் தற்காலிகமாக மூட அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக துணை அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் தெரிவித்தார். கொலம்பியா அரசிடம் இருந்து, வெனிசுலாவின் அமைதி மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வருவதால் மூன்று பாலங்களையும் மூடுவதாக அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சியால் திரட்டப்பட்ட உதவிப்பொருட்கள் மற்றும் அமெரிக்காவின் உதவிப் பொருட்களை வெனிசுலாவுக்கு கொண்டு வர உள்ள நிலையில், பாலங்கள் மூடப்படுவதால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. உதவிப் பொருட்கள் மக்களை சென்று சேருவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
வெனிசுலா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசர் ஜான் போல்டன், தனது தென் கொரிய பயணத்தை ரத்து செய்துள்ளார். #VenezuelaCrisis #JuanGuaido #VenezuelaVicePresident
வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மடுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், நிகோலஸ் மடுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.
ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மடுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. மடுரோவுக்கு எதிரான போராட்டம் மற்றும் ஆதரவு போராட்டங்களால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோதல் வெடித்தது.
அதிபர் மடுரோவுக்கு எதிராக, ராணுவத்தில் உள்ள ஒரு குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டதுடன், பொதுமக்களையும் வீதிக்கு வந்து போராடும்படி அழைப்பு விடுத்தனர். அதன்பின்னர், போராட்டம் தீவிரமடைந்து பதற்றம் அதிகரித்துள்ளது.
மடுரோவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இதில் போர்ச்சுகீசா, பரினாஸ், டாச்சிரா, காரகாஸ், அமமேசானஸ் மற்றும் பொலிவார் மாநிலங்களில் நடந்த மோதல்களில் 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

குறிப்பாக, ஜூவான் கெய்டோவை அதிகாரப்பூர்வமான வெனிசுலா அதிபர் என்று அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நிகோலஸ் மடுரோ உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆனால், எனது பதவிக்காலம் 2025-ம் ஆண்டுவரை உள்ளது. அதற்குள் நான் பதவியை விட்டு இறங்க மாட்டேன் என நிகோலஸ் மடுரோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மடுரோவுக்கு ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தனக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ஜூவான் கெய்டோவுக்கு அமெரிக்கா அளித்துவரும் ஆதரவை கண்டு நிகோலஸ் மடுரோ ஆத்திரமடைந்துள்ளார். இதன்விளைவாக, வெனிசுலா நாட்டில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இன்னும் 72 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என நேற்று உத்தரவிடப்பட்டது.
இதேபோல், அமெரிக்காவில் உள்ள வெனிசுலா தூதரகத்தை மூடுமாறு நிகோலஸ் மடுரோ இன்று உத்தரவிட்டுள்ளார். இதனால், வெனிசுலா-அமெரிக்கா இடையிலான விரிசல் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. #Maduro #Venezuelaembassy #UnitedStates






