என் மலர்tooltip icon

    உலகம்

    தனது அமைதிக்கான நோபல் பரிசை டிரம்புக்கு கைமாற்ற விருப்பம் தெரிவித்த மரியா.. நோபல் கமிட்டி கொடுத்த பதில்
    X

    தனது அமைதிக்கான நோபல் பரிசை டிரம்புக்கு கைமாற்ற விருப்பம் தெரிவித்த மரியா.. நோபல் கமிட்டி கொடுத்த பதில்

    • மரியா கொரினா மச்சாடோ வெனிசுலா அதிபர் மதுரோவின் தீவிர எதிர்ப்பு நிலை கொண்டனர்
    • இந்தியா பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன். மேலும் 7 போர்களை நிறுத்தினேன்.

    2025 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசை வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வென்றார். இவர் வெனிசுலா அதிபர் மதுரோவின் தீவிர எதிர்ப்பு நிலை கொண்டனர், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய ஆதரவாளர்.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா வெனிசுலாவுக்குள் அதிரடியாக நுழைந்து, தலைநகர் காரகஸில் உள்ள அதிபர் மாளிகையில் இருந்து மதுரோவையும் அவரது மனைவியையும் கடத்தி அமெரிக்காவுக்கு கொண்டு சென்றது.

    இந்நிலையில் தனக்கு வழங்கப்பட அமைதிக்கான நோபல் பரிசை டொனால்ட் டிரம்ப்புக்கு கைமாற்ற மரியா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து விளக்கம் அளித்துள்ள நோபல் கமிட்டி, "நோபல் பரிசை ஒருமுறை அறிவித்த பிறகு, அதை மாற்றவ, யாருடனும் பகிர்ந்து கொள்ளவோ அல்லது ரத்து செய்யவோஇயலாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    நேற்று முன் தினம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், "இந்தியா பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன். மேலும் 7 போர்களை நிறுத்தினேன்.

    ஒன்றும் செய்யாமல் ஒபாமாவுக்கு நோபல் வழங்கப்பட்டது. ஆனால் அமைதிக்கான நோபல் பரிசுக்கு என்னை விட தகுதியானவர் யாரும் இல்லை" என்று மீண்டும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    வெனிசுலாவின் இடைக்கால அதிபராக துணை அதிபர் சிலியா ரோட்ரிக்ஸ் பதவி ஏற்றுள்ளார். மரியா கொரினா மச்சாடோ, "வெனிசுலா அதிபராக ஆதரவு தருவீர்களா என்ற கேள்வுக்கு பதிலளித்த டிரம்ப், அவருக்கு நோபல் விருதை கொடுத்திருக்கவே கூடாது. அவருக்கு உள்நாட்டில் மக்களிடம் பெரிய செல்வாக்கு இல்லை" என்று தெரிவித்திருந்தார்.

    Next Story
    ×