திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நிறைவுரூ.2 கோடியே 7லட்சம் வசூல்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது, சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்காபக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
உண்டியல் எண்னும் பணி நிறைவு.
உண்டியல் எண்னும் பணி நிறைவு.
Published on

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது.  இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்க ளும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும், பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இறுதியில்(டிசம்பர் மாதம்) இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற இருப்பதால், கடந்த வாரம் 16-ந் தேதி உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது.

இதில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். வாரம் இரு நாட்கள் என 4 நாட்கள் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. முடிவில், ரூ.2 கோடியே 7 லட்சம் பணமும், 150 கிராம் தங்கம், 1.5 கிலோ வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, உண்டியலில் கிடைக்க ப்பெற்ற காணிக்கை மற்றும் பணம் உரிய பாதுகாப்புடன் கோவில் நிர்வாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com