search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2¼ கோடி
    X

    கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தபோது எடுத்த படம்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2¼ கோடி

    • உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
    • உண்டியல்களில் மொத்தம் ரூ.2 கோடியே 22 லட்சத்து 75 ஆயிரத்து 893-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். கோவிலில் இந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை முதலாவதாக எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.

    கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமை தாங்கினார். இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர்கள் ராம்தாஸ், செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    உண்டியல்களில் மொத்தம் ரூ.2 கோடியே 22 லட்சத்து 75 ஆயிரத்து 893-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் 1 கிலோ 193 கிராமும், வெள்ளி 15 கிலோவும், 234 வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    Next Story
    ×