என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

IPL ரசிகர்கள் கவனத்திற்கு... இன்று மினி ஏலம் - கோடிகளை அள்ளப்போகும் வீரர்கள்
- அதிக பணம் வைத்துள்ள கொல்கத்தா அணி ரூ.64 கோடியில் 13 வீரர்களை எடுக்க வேண்டும்
- குறைந்த பணம் வைத்துள்ள மும்மை ரூ.2.75 கோடியில் 5 வீரர்களை எடுக்க வேண்டும்
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் இன்று (16-ந் தேதி) அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பித்தன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், 10 ஐ.பி.எல் அணி நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பி.சி.சி.ஐ. இந்தப் பட்டியலை வெகுவாகக் குறைத்துள்ளது. அதன்படி 1040 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.
ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக பணம் வைத்துள்ள கொல்கத்தா அணி ரூ.64 கோடியில் 13 வீரர்களை எடுக்க வேண்டிய நிலையில், குறைந்த பணம் வைத்துள்ள மும்மை ரூ.2.75 கோடியில் 5 வீரர்களை எடுக்க வேண்டும்
சென்னை அணி ரூ.43 கோடியில் 9 வீரர்களையும் ஐதராபாத் அணி ரூ.25 கோடியில் 10 வீரர்களையும் லக்னோ அணி ரூ.22 கோடியில் 6 வீரர்களையும் டெல்லி அணி ரூ.21 கோடியில் 8 வீரர்களையும் பெங்களூரு அணி ரூ.16 கோடியில் 8 வீரர்களையும் ராஜஸ்தான் அணி ரூ.16 கோடியில் 9 வீரர்களையும் குஜராத் அணி ரூ.12 கோடியில் 5 வீரர்களையும் பஞ்சாப் அணி ரூ.11 கோடியில் 4 வீரர்களையும் எடுக்கவேண்டும்.
இந்த மினி ஏலத்தில் கேமரூன் கிரீன், லியாம் லிவிங்ஸ்டன் போன்ற வெளிநாட்டு வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






