என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    IPL 2026 AUCTION : அதிக விலைக்கு ஏலம் போன UNCAPPED வீரர் - ரூ.14.20 கோடிக்கு தட்டிய தூக்கிய CSK  - Live Uptates
    X
    LIVE

    IPL 2026 AUCTION : அதிக விலைக்கு ஏலம் போன UNCAPPED வீரர் - ரூ.14.20 கோடிக்கு தட்டிய தூக்கிய CSK - Live Uptates

    • கொல்கத்தா அணி ரூ.64 கோடி பர்ஸ் பணம் வைத்துள்ளது
    • சென்னை அணி ரூ.43 கோடி பர்ஸ் பணம் வைத்துள்ளது

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.

    இந்த ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.

    ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக பணம் வைத்துள்ள கொல்கத்தா அணி ரூ.64 கோடியில் 13 வீரர்களை எடுக்க வேண்டிய நிலையில், குறைந்த பணம் வைத்துள்ள மும்மை ரூ.2.75 கோடியில் 5 வீரர்களை எடுக்க வேண்டும்

    சென்னை அணி ரூ.43 கோடியில் 9 வீரர்களையும் ஐதராபாத் அணி ரூ.25 கோடியில் 10 வீரர்களையும் லக்னோ அணி ரூ.22 கோடியில் 6 வீரர்களையும் டெல்லி அணி ரூ.21 கோடியில் 8 வீரர்களையும் பெங்களூரு அணி ரூ.16 கோடியில் 8 வீரர்களையும் ராஜஸ்தான் அணி ரூ.16 கோடியில் 9 வீரர்களையும் குஜராத் அணி ரூ.12 கோடியில் 5 வீரர்களையும் பஞ்சாப் அணி ரூ.11 கோடியில் 4 வீரர்களையும் எடுக்கவேண்டும்.

    Live Updates

    • 16 Dec 2025 4:57 PM IST

      பிரஷாந்த் வீர் (அன்கேப்ட் பிளேயர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரை சிஎஸ்கே அணி வாங்கியது.

       

       

    • 16 Dec 2025 4:49 PM IST

      இந்திய வீரர் ஆகிப் நபி தர் (அன்கேப்ட் ஆல்ரவுண்டர்) அடிப்படை விலை 30 லட்சத்தில் இருந்து ரூ. 8.40 கோடிக்கு ஏலம் போனார். இவரை டெல்லி அணி ஏலம் எடுத்தது. 

    • 16 Dec 2025 4:15 PM IST

      வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகீல் ஹுசைனை சிஎஸ்கே அணி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.


       

    • 16 Dec 2025 4:14 PM IST

      இந்திய வீரர் ரவி பிஷ்னோய்யை ரூ.7 20 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.



       


    • 16 Dec 2025 4:04 PM IST

      ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆன்ரிக் நோர்க்யாவை (Anrich Nortje) ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.



    • 16 Dec 2025 3:59 PM IST

      இலங்கை வேகப்பந்து வீச்சார்ளர் பத்திரனாவை கொல்கத்தா அணி ரூ. 18 கோடிக்கு ஏலம் எடுத்தது.




    • 16 Dec 2025 3:53 PM IST

      நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி, தென் ஆப்பிரிக்கா வீரர் ஜெரால்ட் கோட்ஸி மற்றும் இந்திய வீரர் ஆகாஷ் தீப், சிவம் மாவி, ஆகியோர் ஏலம் போகவில்லை. 



       




       


    • 16 Dec 2025 3:32 PM IST

      தீபக் ஹூடா, லியாம் லிவிங்ஸ்டன், ஜேமி ஸ்மித், ஜானி பேர்ஸ்டோவ், குர்பாஸ், கேஎஸ் பரத் ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. 

    • 16 Dec 2025 3:31 PM IST

      நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பேட்டர் பின் ஆலனை கொல்கத்தா அணி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.



       


    • 16 Dec 2025 3:27 PM IST

      இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்டை டெல்லி அணி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.

    Next Story
    ×