என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    IPL 2026 AUCTION : ஒரு வழியா ஏலம் போன பிரித்வி ஷா
    X

    IPL 2026 AUCTION : ஒரு வழியா ஏலம் போன பிரித்வி ஷா

    • கொல்கத்தா அணி ரூ.64 கோடி பர்ஸ் பணம் வைத்துள்ளது
    • சென்னை அணி ரூ.43 கோடி பர்ஸ் பணம் வைத்துள்ளது

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.

    இந்த ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.

    ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக பணம் வைத்துள்ள கொல்கத்தா அணி ரூ.64 கோடியில் 13 வீரர்களை எடுக்க வேண்டிய நிலையில், குறைந்த பணம் வைத்துள்ள மும்மை ரூ.2.75 கோடியில் 5 வீரர்களை எடுக்க வேண்டும்

    சென்னை அணி ரூ.43 கோடியில் 9 வீரர்களையும் ஐதராபாத் அணி ரூ.25 கோடியில் 10 வீரர்களையும் லக்னோ அணி ரூ.22 கோடியில் 6 வீரர்களையும் டெல்லி அணி ரூ.21 கோடியில் 8 வீரர்களையும் பெங்களூரு அணி ரூ.16 கோடியில் 8 வீரர்களையும் ராஜஸ்தான் அணி ரூ.16 கோடியில் 9 வீரர்களையும் குஜராத் அணி ரூ.12 கோடியில் 5 வீரர்களையும் பஞ்சாப் அணி ரூ.11 கோடியில் 4 வீரர்களையும் எடுக்கவேண்டும்.

    Live Updates

    • 16 Dec 2025 8:03 PM IST

      இந்திய வீரர் சர்பராஸ் கானை ரூ.75 லட்சத்திற்கு சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது.



       


    • 16 Dec 2025 7:26 PM IST

      ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கூப்பர் கோனோலியை ரூ.3 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.



       


    • 16 Dec 2025 7:25 PM IST

      உத்திரபிரதேசத்தை சேர்ந்த ரவி சிங்கை ராஜஸ்தான் அணி ரூ.95 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.

    • 16 Dec 2025 7:19 PM IST

      பஞ்சாப்பை சேர்ந்த சலீல் அரோராவை ரூ.40 லட்சத்திற்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.

    • 16 Dec 2025 7:15 PM IST

      அமன் கானை ரூ.40 லட்சத்திற்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.

    • 16 Dec 2025 7:06 PM IST

      மத்திய பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான மங்கேஷ் யாதவை ரூ.5.20 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலம் எடுத்தது.

       

    • 16 Dec 2025 6:56 PM IST

      முன்னாள் சிஎஸ்கே வீரரான ராகுல் திரிபாதியை ரூ.75 லட்சத்திற்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.

    • 16 Dec 2025 6:52 PM IST

      வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிகுர் ரஹ்மானை ரூ.9.20 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.



       


    • 16 Dec 2025 6:46 PM IST

      ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ ஷார்ட்டை சிஎஸ்கே அணி ரூ.1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது.


    • 16 Dec 2025 6:42 PM IST

      வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டரான ஜேசன் ஹோல்டரை ரூ.7 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்தது.

       

    Next Story
    ×