search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sam Curran"

    • சாம் கர்ரன் 47 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • லிவிங்ஸ்டன் 21 பந்தில் 38 விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎல் 2024 சீசன் 2-வது போட்டியில் (இன்றைய முதல் போட்டி) பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.

    பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் தவான் 16 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். பேர்ஸ்டோ 9 ரன்னில் ரன்அவுட்டாகி ஏமாற்றம் அடைந்தார்.

    அடுத்து வந்த பிராப்சிம்ரான் சிங் 17 பந்தில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஜித்தேஷ் சர்மா 9 ரன்னில் வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 11.3 ஓவரில் 100 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

    இதனால் பஞ்சாப் அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் 5-வது விக்கெட்டுக்கு சாம் கர்ரன் உடன் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான விளையாடியது. குறிப்பாக சாம் கர்ரன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். லிவிங்ஸ்டன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கடைசி 2 ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் 3-வது பந்தில் சாம் கர்ரன் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்த பந்தில் ஷஷாங்க் சிங் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஹர்ப்ரீத் பார் கொடுத்த கேட்சை வார்னர் பிடிக்க தவறினார். இதனால் அந்த பந்தில் பஞ்சாப் அணிக்கு இரண்டு ரன் கிடைத்தது.

    இந்த ஓவரில் கலீல் அகமது 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. சுமித் குமார் கடைசி ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் வைடாக வீசினார். 2-வது பந்தை லிவிங்ஸ்டன் சிக்கசருக்கு தூக்க பஞ்சாப் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • ஜோடர்ன், சாம் கரண் ஆகியோர் பிரதமருக்கு பந்து வீசினர்.
    • ஜோடர்ன் பந்து வீச்சில் பிரதமர் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று காலை டி20 உலக சாம்பியன்களான இங்கிலாந்து அணி வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில் ஜோடர்ன், சாம் கரண் ஆகியோர் பிரதமருக்கு பந்து வீசினர். ஜோடர்ன் பந்து வீச்சில் பிரதமர் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனதை ஜோடர்ன் கொண்டாடினார். அதன் பிறகு பிரதமரும் பந்து வீசி மகிழ்ந்தார்.


    மேலும், இங்கிலாந்து அணி தலைவர் ஜாஸ் பட்லர் கோப்பையுடன் பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் புகைப்படத்தையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது குறித்து பலநாட்டு முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களையும் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

    • அபராதத்துடன் கூடுதலாக, அவரது ஒழுங்குமுறை பதிவில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.
    • ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு குறைபாடு புள்ளிகளைப் பெற்றால், அவர்கள் தடையைப் பெறுவார்கள்.

    இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் 2 ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டியின் போது பவுமா விக்கெட்டை கொண்டாடியதற்காக சாம் கரணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

    28-வது ஓவரில் தென்னாப்பிரிக்கா கேப்டனை போல்ட் முறையில் அவுட் செய்த பிறகு டெம்பா பவுமாவின் அருகில் சென்று சாம் கரண் ரொம்ப ஆக்ரோஷமாக கொண்டாடினார்.

    இதனால் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதற்காக சாம் கரணுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அபராதத்துடன் கூடுதலாக, அவரது ஒழுங்குமுறை பதிவில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. 24 மாத காலத்தில் கரணின் முதல் குற்றம் இதுவாகும்.

    கள நடுவர்கள் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், மூன்றாவது நடுவர் பொங்கனி ஜெலே மற்றும் நான்காவது நடுவர் அல்லாஹுதின் பலேகர் ஆகியோரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

    ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு குறைபாடு புள்ளிகளைப் பெற்றால், அவர்கள் தடையைப் பெறுவார்கள்.

    • ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை சாம் கர்ரன், கேமரூன் ஆகியோர் படைத்தனர்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்சை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெற்றுது. இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. இறுதியாக, சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    இதேபோல், ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் அவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.


    ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை போன டாப் 10 வீரர்களின் விவரம் வருமாறு:

    சாம் கர்ரன் - ரூ.18.50 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)

    கேமரூன் கிரீன் - ரூ.17.50 கோடி (மும்பை இந்தியன்ஸ்)

    பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

    நிகோலஸ் பூரன் -ரூ.16 கோடி (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்)

    ஹாரி புரூக்- ரூ.13.25 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)

    மயங்க் அகர்வால் - ரூ.8.25 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)

    ஷிபம் மாவி - ரூ. 6 கோடி ( குஜராத் டைட்டன்ஸ்)

    ஜேசன் ஹோல்டர் - ரூ.5.75 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

    முகேஷ்குமார் - ரூ.5.50 கோடி (டெல்லி கேப்பிடல்ஸ்)

    ஹென்ரிச் கிளாசன் - ரூ.5.25 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)

    சாம் கர்ரன் மற்றும் கேமரூன் ஆகியோர் இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

    • இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரணை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
    • ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. இறுதியாக, சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் அவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    சாம் கர்ரன் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். 

    சாம் கர்ரன் - ரூ.18.50 கோடி (பஞ்சாப் கிங்ஸ்) கோடி

    கேமரூன் கிரீன் - ரூ.17.50 கோடி (மும்பை இந்தியன்ஸ்)

    பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

    ஹாரி புரூக்- ரூ.13.25 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

    ஜேசன் ஹோல்டர் - ரூ.5.75 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

    • உலக கோப்பையை வென்றதை சொல்வதற்கு வார்த்தைகளை கொஞ்சம் இழந்து விட்டேன்.
    • ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரட்டை விருதை பெற்றார்.

    மெல்போர்ன்:

    இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 20 ஓவர் உலக கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியது.

    மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்துக்கு 138 ரன் இலக்காக இருந்தது.

    ஷான் மசூத் 28 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் பாபர் ஆசம் 28 பந்தில் 32 ரன்னும் எடுத்தனர். சாம்கரன் 3 விக்கெட்டும், ஆதில் ரஷீத், கிறிஸ் ஜோர்டன் தலா 2 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது.

    பென் ஸ்டோக்ஸ் 49 பந்தில் 52 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) கேப்டன் பட்லர் 17 பந்தில் 26 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டும், சதாப் கான், முகமது வாசிம் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இங்கிலாந்து அணி 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்பு 2010-ல் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையை 2 முறை வென்ற வெஸ்ட் இண்டீசுடன் (2012, 2016) இங்கிலாந்து இணைந்தது.

    இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இலங்கை (2014), ஆஸ்திரே லியா (2021) ஆகிய நாடுகள் தலா ஒரு முறை 20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளன.

    இங்கிலாந்து உலக கோப்பையை வெல்ல வேகப்பந்து வீரர் சாம்கரன் முக்கிய பங்கு வகித்தார். இறுதி போட்டியில் 12 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய அவர் இந்த தொடரில் மொத்தம் 13 விக்கெட் கைப்பற்றினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரட்டை விருதை பெற்றார். இது குறித்து சாம்கரன் கூறியதாவது:-

    உலக கோப்பையை வென்றதை சொல்வதற்கு வார்த்தைகளை கொஞ்சம் இழந்து விட்டேன். இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடி வருகிறோம். பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் அபாரமாக இருந்தது.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் உதவியாக இருந்தது. அதில் நிறைய கற்றுக் கொண்டேன். பல போட்டிகளில் ஆடிய வீரர்களிடம் இருந்து கற்றுக் கொண்டது அற்புதமான தருணம். நான் எப்போதும் கற்று வருகிறேன்.

    என்னை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறேன். ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் விளையாட வருவேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சாம்கரன் பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக ஐ.பி.எல். போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் டி20 போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
    • சாம் கரனை தோளில் தூக்கிய வீடியோவை வேகப்பந்து வீச்சாளர் டாப்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

    இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் இங்கிலாந்து அணி 234 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் 20 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பேர்ஸ்டோவ் சக வீரர்களில் ஒருவரான சாம் கரனை தோளில் தூக்கி உடற்பயிற்சி செய்தார். இந்த வீடியோவை வேகப்பந்து வீச்சாளர் டாப்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    இங்கிலாந்து அணியை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார் என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 என இழந்தது. முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த டெஸ்டில் 20 வயதே ஆன சாம் குர்ரான் சிறப்பாக பந்து வீசியும், விக்கெட்டை கைப்பற்றியும் இந்திய தோல்விக்கு காரணமானார்.

    சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இந்தியா 60 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த டெஸ்டிலும் முக்கியமான கட்டத்தில் ரன்கள் குவித்தும், விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியும் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.

    இங்கிலாந்து அணிக்கான தொடர் நாயகன் விருதை பெற்ற சாம் குர்ரான், இங்கிலாந்து அணியை விட அதிக அளவில் எங்களை காயப்படுத்தி விட்டார் என்று ரவி ஷாஸ்திரி கூறியுள்ளார்.



    இதுகுறித்து ரவி ஷாஸ்திரி கூறுகையில் ‘‘நாங்கள் மிகவும் மோசமாக தோல்வியடைந்தோம் என்று நான் கட்டாயம் கூறமாட்டேன். ஆனால் நாங்கள் போராடினோம். இங்கிலாந்துக்கான தொடர் நாயகன் விருதை தேர்வு செய்ய எங்களிடம் (நான் மற்றும் விராட் கோலி) கேட்டுக்கொண்டார்கள்.

    இருவருமே சாம் குர்ரானை தேர்வு செய்தோம். இங்கிலாந்தை விட குர்ரான்தான் எங்களை அதிக அளவில் காயப்படுத்திவிட்டார்’’ என்றார்.
    முக்கியமான கட்டத்தில் ரன்கள் குவித்தும், விக்கெட்டுக்களை வீழ்த்தியும் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்ற காரணமாக இருந்தார் சாம் குர்ரான். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முடிவடைந்த 4-வது டெஸ்டில் இங்கிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 எனக்கைப்பற்றியது.

    முதல் டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்திலும், 4-வது டெஸ்டில் 60 ரன்களில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. இந்த இரண்டு போட்டியிலும் இந்தியாவிற்கு அதிகமான வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போட்டவர் 20 வயதே ஆன இளம் ஆல்ரவுண்டர் சாம் குர்ரான். இவர்தான் இந்தியாவிடம் இருந்து தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.



    எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருக்கும்போது சாம் குர்ரான் களம் இறங்கினார். 24 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இங்கிலாந்த 287 ரன்கள் குவித்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 274 ரன்கள் சேர்த்தது. இந்தியா ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சை தாக்குப்பிடித்து 13 ஓவரில் 50 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் சாம் குர்ரான் அபாரமாக பந்து வீசி முரளி விஜய், லோகேஷ் ராகுல், ஷிகர் தவான் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். இதனால் இந்தியா 59 ரன்னுக்குள் 3 விக்கெட்டை விரைவாக இழந்தது. இதனால் 274 ரன்னில் ஆல்அவுட் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது.



    13 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இஷாந்த் ஷர்மா, அஸ்வின் ஆகியோரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து 87 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து. அப்போது சாம் குர்ரான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 65 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 63 ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 180 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    இவரது அரைசதத்தால் இங்கிலாந்து இந்தியாவிற்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஒருவேளை சாம் குர்ரான் 10 ரன்னிற்குள் ஆட்டமிழந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அரைசதம் அடித்து அணிக்கு வலுவான முன்னிலைக் கொடுக்க இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சாம் குர்ரான் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 5 விக்கெட்டுக்கள், 87 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.



    2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மழை ஆட்டநாயகனாக விளங்க இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. சாம் குர்ரான் 1 விக்கெட்டுடன் 40 ரன்கள் சேர்த்தார்.

    கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இருந்ததால் சாம் குர்ரான் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் களம் இறங்கவில்லை. இதில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    3-வது டெஸ்டில் களம் இறக்கப்படாத சாம் குர்ரான் 4-வது டெஸ்டில் களம் இறக்கப்பட்டார். கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டார். சவுத்தாம்ப்டன் 4-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 86 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்து திணறியது. அதன்பின் சாம் குர்ரான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 136 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 78 ரன்கள் குவித்து கடைசி வீரராக ஆட்டமிழந்தார். மொயீன் அலி உடன் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தார். இவரது ஆட்டத்தால் இங்கிலாந்து 246 ரன்கள் குவித்து விட்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா புஜாரா ஆட்டமிழக்காமல் 132 ரன்களும், விராட் கோலி 46 ரன்கள் சேர்த்த போதிலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 273 ரன்கள் மட்டுமே சேர்த்தது. முக்கியமான கட்டத்தில் சாம் குர்ரான் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தினார்.

    பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதிலும் இங்கிலாந்து 178 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. அதன்பின் வந்த சாம் குர்ரான் சிறப்பாக விளையாடி 83 பந்தில் 46 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இவரது ஆட்டத்தால் இங்கிலாந்து 271 ரன்கள் குவித்து விட்டது.



    இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மொயீன் அலி பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா 184 ரன்னில் சுருண்டது. சாம் குர்ரான் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    முக்கியமான இரண்டு டெஸ்டில் அதிக ரன்கள் குவித்ததுடன், விக்கெட் வீழ்த்தியும் இந்தியாவின் தோல்விக்கு சாம் குர்ரான முக்கிய காரணமாக இருந்தார்.

    அவர் மூன்று டெஸ்டிலும் 251 ரன்கள் குவித்ததுடன், 8 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் சராசரி 50.2-ம், பந்து வீச்சில் 23.37-ம் சராசரி ஆகும்.
    245 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 46 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாளில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து புஜாரா களம் இறங்கினார்.



    புஜாராவை 5 ரன்னிலும், ஷிகர் தவானை 17 ரன்னிலும் வெளியேற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதனால் இந்தியா 22 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்தியா 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் அடித்துள்ளது. விராட் கோலி 10 ரன்னுடனும், ரகானே 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 199 ரன்கள் தேவை.
    சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து சாம் குர்ரான் (78) மொயீன் அலி ஆகியோரின் ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    அதன்பின் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. புஜாரா 132 ரன்கள் அடித்து கடைசி வரை நிற்கவும், விராட் கோலி 46 ரன்கள் அடிக்கவும் இந்தியா முதல் இன்னிங்சில் 273 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 27 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜோ ரூட் (48), ஜென்னிங்ஸ் (36), பென் ஸ்டோக்ஸ் (30), பட்லர் (69) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. சாம் குர்ரான் 37 ரன்கள் எடுத்து களத்தில் நின்றிருந்தார். ரஷித் அடில் ஆட்டமிழந்ததும் 3-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.


    முகமது ஷமி

    இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் பந்தை ஸ்டூவர்ட் சந்தித்தார். முகமது ஷமி பந்து வீசினார். பிராட் முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் களம் இறங்கினார். 97-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் சாம் குர்ரான் இரண்டு ரன்கள் எடுக்க முயற்சிக்கையில் ரன்அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து 96.1 ஓவரில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. சாம் குர்ரான் 46 ரன்கள் எடுத்தார்.

    முதல் இன்னிங்சில் 27 ரன்கள் பின்தங்கியிருந்ததால், இங்கிலாந்து 244 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி சார்பில் முகமதுஷமி அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    டிரென்ட் பிரிட்ஜ்-யில் நாளை நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்டிற்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நாளை தொடங்குகிறது. இதில் ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான் ஆகியோரில் இருவருக்குதான் இடம் என்பதால் யார் யார் ஆடம் லெவன் அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.

    பெரும்பாலான முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் மூன்று பேருடன் களம் இறங்க வேண்டும் என்ற வலியுறுத்தினார்கள். இந்நிலையில் நாளைய டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறும் 11 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



    இதில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அறிமுகமாகி ஆட்ட நாயகன் விருது பெற்ற சாம் குர்ரான் நீக்கப்பட்டு பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நாளை இந்தியாவிற்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. ஜோ ரூட், 4. போப், 5. ஜோஸ் பட்லர், 6. பேர் ஸ்டோவ், 7. பென் ஸ்டோக்ஸ், 8. கிறிஸ் வோக்ஸ், 9 அடில் ரஷித், 10. ஜேம்ஸ் ஆண்டர்சன், 11. ஸ்டூவர்ட் பிராட்.
    ×