search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சாம் கர்ரன் அரைசதம்: டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்
    X

    சாம் கர்ரன் அரைசதம்: டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்

    • சாம் கர்ரன் 47 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • லிவிங்ஸ்டன் 21 பந்தில் 38 விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎல் 2024 சீசன் 2-வது போட்டியில் (இன்றைய முதல் போட்டி) பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது.

    பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் தவான் 16 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். பேர்ஸ்டோ 9 ரன்னில் ரன்அவுட்டாகி ஏமாற்றம் அடைந்தார்.

    அடுத்து வந்த பிராப்சிம்ரான் சிங் 17 பந்தில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஜித்தேஷ் சர்மா 9 ரன்னில் வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 11.3 ஓவரில் 100 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

    இதனால் பஞ்சாப் அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் 5-வது விக்கெட்டுக்கு சாம் கர்ரன் உடன் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான விளையாடியது. குறிப்பாக சாம் கர்ரன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். லிவிங்ஸ்டன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கடைசி 2 ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் 3-வது பந்தில் சாம் கர்ரன் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்த பந்தில் ஷஷாங்க் சிங் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஹர்ப்ரீத் பார் கொடுத்த கேட்சை வார்னர் பிடிக்க தவறினார். இதனால் அந்த பந்தில் பஞ்சாப் அணிக்கு இரண்டு ரன் கிடைத்தது.

    இந்த ஓவரில் கலீல் அகமது 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. சுமித் குமார் கடைசி ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் வைடாக வீசினார். 2-வது பந்தை லிவிங்ஸ்டன் சிக்கசருக்கு தூக்க பஞ்சாப் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    Next Story
    ×