என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பிக்பாஷ் லீக்: சாம் கர்ரன் அசத்தல் ஆட்டம்- குவாலிபயருக்கு தகுதிபெற்ற சிட்னி சிக்சர்ஸ்
    X

    பிக்பாஷ் லீக்: சாம் கர்ரன் அசத்தல் ஆட்டம்- குவாலிபயருக்கு தகுதிபெற்ற சிட்னி சிக்சர்ஸ்

    • முதலில் பேட் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவரில் 171 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் நாதன் மெக்ஸ்வினி அதிரடியாக ஆடி 69 ரன் எடுத்தார்.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பாஷ் டி20 தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பிரிஸ்பேன் ஹீட், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

    நாதன் மெக்ஸ்வினி அதிரடியாக ஆடி 69 ரன் எடுத்தார். நேசர் அதிரடியாக விளையாடி 35 ரன் எடுத்தார்.

    சிட்னி அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும், சாம் கர்ரன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித்

    54 ரன் எடுத்தார். ஹென்ட்ரிக்ஸ் 24 ரன்னில் வெளியேறினானர்.

    சாம் கர்ரன் அதிரடியாக ஆடி 53 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

    இறுதியில், சிட்னி சிக்சர்ஸ் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி குவாலிபயருக்கு தகுதிபெற்றது.

    Next Story
    ×