என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வருகிற 6-ந் தேதியுடன் முடிவடைகிறது.
- இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடர் டிசம்பர் 9-ந் தேதி தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவாரா இல்லையா என சந்தேகம் எழுந்த நிலையில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஹர்திக் பாண்ட்யா, ரியான் பராக் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- பேட்டர் தரவரிசையில் ரோகித் முதல் இடத்தில் தொடர்கிறார்.
- பந்து வீச்சு தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 6-வது இடத்தில் உள்ளார்.
ஆடவருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
சுப்மன் கில் ஒரு இடம் பின்தங்கி 5-வது இடத்தில் உள்ளார். இதை தவிர டாப் 10-ல் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ரோகித் முதல் இடத்தில் தொடர்கிறார். கேஎல் ராகுல் 2 இடம் முன்னேறி 14-வது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் பந்து வீச்சு தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தில் உள்ளார். மற்றபடி பந்து வீச்சு தரவரிசையில் பெரிய மாற்றம் இல்லை.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் தோற்றது.
- 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 20-வது முறை டாஸ் தோற்றுள்ளது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்றது. அன்று முதல் தற்போது வரை இந்திய அணி டாஸ் தோல்வி தொடர்ந்து வருகிறது. கடைசியாக 2023 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி டாஸ் வென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா:
ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா.
தென்ஆப்பிரிக்கா:
எய்டன் மார்க்ரம், குயின்டான் டி காக் அல்லது ரையான் ரிக்கெல்டன், பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, டோனி டி ஜோர்ஜி, டிவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென், கார்பின் பாஷ், கேஷவ் மகராஜ், நன்ரே பர்கர், பார்த்மேன்.
- ரோகித் சர்மா இதுவரை 503 போட்டிகளில் விளையாடி 19,959 ரன்களைக் குவித்துள்ளார்.
- இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.
ராய்ப்பூர்:
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே உள்ள பிரம்மாண்ட சாதனைப் பட்டியலில் ரோகித் இணைய அதிக வாய்ப்பு உள்ளது.
ராய்ப்பூரில் இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், அவர் இன்னும் 41 ரன்கள் எடுத்தால் வரலாற்றுச் சாதனை படைப்பார். சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற அதிக வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால் 2025-ம் ஆண்டு ரோகித் சர்மாவுக்கு ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 561 ரன்களைக் குவித்துள்ளார். ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கூட 51 பந்துகளில் 57 ரன்கள் விளாசி நல்ல ஃபார்மில் உள்ளார். அதற்கு முன் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதம் அடித்து இருந்தார். தான் விளையாடிய கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்து இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்தும் சேர்த்து) ரோகித் சர்மா இதுவரை 503 போட்டிகளில் விளையாடி 19,959 ரன்களைக் குவித்துள்ளார். 20,000 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை அடைய அவருக்கு இன்னும் வெறும் 41 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மூன்று வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.
அந்த பட்டியல்:
சச்சின் டெண்டுல்கர் - 34,357 ரன்கள்
விராட் கோலி - 27,808 ரன்கள்
ராகுல் டிராவிட் - 24,064 ரன்கள்
ராய்ப்பூரில் 41 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், இந்த ஜாம்பவான்களுக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா தனது பெயரை வரலாற்றில் பதிவு செய்வார்.
- விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்குகிறது.
- 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை நடக்கிறது.
இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருவரும் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இதனால் தற்சமயம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே தங்களின் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்திய ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாட ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் விராட் கோலி விளையாடுவாரா என்பது குறித்து எந்த தகவலும் வராமல் இருந்தது.
இந்நிலையில் விராட் கோலியும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அவரது மாநில அணியான டெல்லிக்கு விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24-ந் தேதி ஆந்திராவுக்கு எதிராகவும் 26-ந் தேதி குஜராத்துக்கு எதிராகவும் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி ரெயில்வே அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளார்.
இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி விஜய் ஹசாரே தொடரில் விளையாட உள்ளார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தொடரில் தமிழ்நாடு, மும்பை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 32 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்ட போட்டிகளில் பங்கேறவுள்ளன. இதில் மும்பை அணி குரூப் சி பிரிவிலும், டெல்லி அணி குரூப் டி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன் எடுத்து இருந்தது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி மேலும் ரன் எதுவும் எடுக்காமல் 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்டஇண்டீஸ் அணி 10 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து சாய் ஹோப் மற்றும் சந்தர்பால் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. 56 ரன்கள் எடுத்த நிலையில் சாய் ஹோப் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் ரோஸ்டன் சேஸ் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
அதனை தொடர்ந்து சந்தர்பால் 52 ரன்னிலும் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.
- இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.
டெஸ்ட் தொடரை இழந்ததால் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணியினர் ஒரு நாள் தொடரை வெற்றியோடு தொடங்கி பரிகாரம் தேடிக் கொண்டனர். விராட் கோலியின் சதமும், ரோகித் சர்மா, கேப்டன் லோகேஷ் ராகுலின் அரைசதமும் 349 ரன்கள் குவிக்க உதவியதோடு வெற்றிக்கும் வித்திட்டது. பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் கலக்கினர். இன்றைய மோதலிலும் கோலி, ரோகித் சர்மாவின் ரன்வேட்டை தொடருமா? இந்த ஆட்டத்தோடு இந்திய அணி தொடரை சொந்தமாக்கி விடுமா? என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 11 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும் மார்கோ யான்சென் (70 ரன்), மேத்யூ பிரீட்ஸ்கே (72 ரன்), கார்பின் பாஷ் (67 ரன்), ஆகியோரது அதிரடியால் இலக்கை நெருங்கி வந்தது. எக்ஸ்டிரா வகையில் அதிகமான ரன்களை (23) விட்டுக்கொடுத்தது பின்னடைவாக அமைந்தது. இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். உடல்நலக்குறைவால் முதல் ஆட்டத்தில் ஓய்வு எடுத்த கேப்டன் பவுமா அணிக்கு திரும்புகிறார். அவரது வருகை அந்த அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தும்.
'பொதுவாக நான் டாப்-3 வரிசையில் ஆடுவேன். ஆனால் இப்போது எந்த இடம் காலியாக உள்ளதோ அந்த இடத்தில் களம் காணுவேன்' என பவுமா குறிப்பிட்டார். சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. இதனால் சுப்ராயனுக்கு இடமிருக்காது. இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
போட்டி நடக்கும் ராய்ப்பூரில் இதற்கு முன்பு ஒரே ஒரு, ஒரு நாள் ஆட்டம் நடந்துள்ளது. 2023-ம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை 108 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா.
தென்ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம், குயின்டான் டி காக் அல்லது ரையான் ரிக்கெல்டன், பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, டோனி டி ஜோர்ஜி, டிவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென், கார்பின் பாஷ், கேஷவ் மகராஜ், நன்ரே பர்கர், பார்த்மேன்.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் இந்த தொடர் முடிந்தவுடன் இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஹர்திக் பாண்ட்யா, ரியான் பராக் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அணியில் இடம் பிடித்தால் சஞ்சு சாம்சனை வழக்கம் போல கழற்றி விட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அவர் அணியில் இடம் பெறுவதே ஒரு கேள்வி குறியாக உள்ளது.
- மினி ஏலத்தில் மொத்தம் 1,355 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- 1,062 இந்திய வீரர்கள் மற்றும் 293 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த ஏலத்தில் மொத்தம் 1,355 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி 1,062 இந்திய வீரர்கள் மற்றும் 293 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதனை ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வீரர்களுக்கான அடிப்படை விலை குறைந்தபட்சம் ரூ. 30 லட்சம் என்றும் அதிகபட்சம் ரூ. 2 கோடி என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் ஆடிய திறமையான வீரர்கள் பலரும் ரூ.2 கோடி என்ற அடிப்படை விலையில் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் ஆரம்ப விலை ரூ.2 கோடியிலிருந்தே தொடங்கும்.
இந்நிலையில் இந்த மினி ஏலத்தில் அதிகபட்ச தொடக்க விலையான ரூ.2 கோடிக்கு வெங்கடேஷ் ஐயர், ரவி பிஷ்னாய் ஆகிய இரு இந்திய வீரர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மொத்தம் 45 வீரர்கள் இப்பிரிவில் தங்களது பெயர்களை பதிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2026 ஏலத்தில் ரூ.2 கோடி அடிப்படை விலை வீரர்கள்:
ரவி பிஷ்னோய், வெங்கடேஷ் ஐயர், முஜீப் ரஹ்மான், நவீன் உல் ஹக், அபோட், அகர், கோனோலி, ஃப்ரேசர்-மெக்குர்க், கிரீன், இங்கிலிஸ், ஸ்மித், முஸ்தாபிஸூர், அட்கின்சன், பான்டன், கர்ரன், டாசன், டக்கெட், லாரன்ஸ், லிவிங்ஸ்டன், டைமல், ஜேமி ஸ்மித், ஆலன், பிரேஸ்வெல், கான்வே, டப்பி, ஹென்றி, ஜேமிசன், மில்னே, டாரில் மிட்செல், ஓ'ரூர்க், ரச்சின் ரவீந்திரா, கோட்ஸி, டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, நார்ட்ஜே, ரூசோவ், ஷம்சி, வைஸ், ஹசரங்கா, பத்திரனா, தீக்ஷனா, ஹோல்டர், சாய் ஹோப், ஹொசைன் மற்றும் அல்ஸாரி.
- மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை.
சென்னை:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. ஐ.பி.எல். போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் க்ளென் மேக்ஸ்வெல் இந்த ஆண்டு இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் உங்களை மிஸ் செய்யப் போகிறேன் என கடந்த ஆண்டு பஞ்சாப் அணியில் விளையாடிய இந்திய அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். அதில் உங்களை மிஸ் செய்யப் போகிறேன் maxi bro. மகிழ்ச்சி, குறும்புத்தனம், கேலி பேச்சு... நீங்கள் இல்லாமல் டிரெஸிங் ரூம் முன்பு போல் நிச்சயம் இருக்காது என கூறியுள்ளார்.
- இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
- இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ராய்பூரில் நாளை நடக்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் ராய்பூருக்கு சென்றனர்.
இந்நிலையில் நாளை நடக்கும் 2-வது ஒருநாள் போட்டியின் போது டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ஜெர்சி போல பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






