என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20I World Cup"

    • உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா இதுவரை சோபிக்கவில்லை.
    • பவுலிங்கில் வருண் சக்ரவர்த்தி இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

    சென்னை:

    டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜிம்பாப்வே அணியுடன் மோகிறது.

    லீக் சுற்றில் 3 போட்டியிலும் வென்ற இந்தியா சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் 76 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் அடுத்த 2 போட்டிகளில் கட்டாய வெற்றி தேவை.

    பேட்டிங்கில் அபிஷேக் சர்மா இதுவரை சோபிக்கவில்லை. கேப்டன் சூர்யகுமார் 180, இஷான் கிஷன் 176, ஷிவம் துபே 158 ரன் அடித்துள்ளனர்.

    பவுலிங்கில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், சுழலில் வருண் சக்ரவர்த்தி இடத்தை தக்கவைத்துக் கொள்வர். கடந்த போட்டியில் அக்சர் படேலுக்கு வாய்ப்பு அளிக்காதது தான் தோல்விக்கு காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளதால், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அவர் களம் இறங்கலாம்.

    ஜிம்பாப்வே லீக் சுற்றில் பி பிரிவில் வலுவான ஆஸ்திரேலியா, இலங்கையை வீழ்த்தி முதலிடம் பிடித்து கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.

    சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீசிடம் 107 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் இன்று கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.

    பேட்டிங்கில் பிரையன் பென்னட் 180 ரன் அடித்து முதுகெலும்பாக உள்ளார். கேப்டன் சிக்கந்தர் ராசா, மருமணி, ரியான் பர்ல் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்ப்பர்.

    பவுலிங்கில் முசரபானி 4 போட்டியில் 11 விக்கெட் எடுத்து 2வது இடத்தில் உள்ளார். பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் ஙகரவா, சுழலில் கிரேம் க்ரீமர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கலாம்.

    இன்று யார் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற நிலையில் களம் இறங்குகிறது. இந்திய வீரர்கள் நேற்று சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்தியா-ஜிம்பாப்வே அணியுடனான போட்டிக்கு முன் மாலை 6 மணிக்கு அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பாடல்களை பாடி அவர் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.

    • முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 175 ரன்கள் குவித்தது.
    • இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 40 பந்தில் 77 ரன்கள் குவித்தார்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 40 பந்தில் 77 ரன்கள் குவித்தார்.

    அடுத்து ஆடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 61 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது இஷான் கிஷனுக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்திய அணி தான் ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

    நமீபியா, ஓமன் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் தான் ஆடிய 3 ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறின.

    தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரீசா 8 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். குயின்டன் டி காக் 27 பந்துகளில் 34 ரன்னில் வெளியேறினார்.


    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றின் குரூப் 1 பிரிவில் தற்போது நடைபெறும் வரும் 39-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியும் இங்கிலாந்து அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரீசா 8 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். குயின்டன் டி காக்  27 பந்துகளில் 34 ரன்னில் வெளியேறினார்.

    பின்னர் களமிறங்கிய ராசி வான் டெர் டுசன் - ஐடன் மார்க்ரம் ஜோடி சிறப்பாக ஆடி இருவரும் அரை சதம் அடித்தனர். இதில் ராசி வான் டெர் டுசன் 60 பந்துகளில் 94 ரன்கள் எடுத்துள்ளார்.  அந்த அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது.
    ×