என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தம்பியின் திருமணத்தில் நடனமாடிய சாரா டெண்டுல்கர் - வீடியோ வைரல்
- அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணம் இன்று மும்பையில் நடைபெற்றது
- அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணத்தில் தோனி - சாக்ஷி தம்பதி கலந்துகொண்டனர்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், பிரபல தொழிலதிபர் ரவிகாயின் பேத்தியும், தொழிலதிபருமான சானியா சந்தோக்கிற்கும் நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் 13, 2025 அன்று மும்பையில் உள்ள ரவி காயின் இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மிகவும் ரகசியமாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அவர்களது திருமணம் இன்று மும்பையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த திருமண விழாவில் சச்சின் மகளான சாரா டெண்டுல்கர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த திருமண விழாவில் கிரிக்கெட் வீரர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Next Story






