என் மலர்

  நீங்கள் தேடியது "Adil Rashid"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பை மாட் பார்கின்சன் பெறுகிறார்.
  • டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக ஆதில் ரஷீத் அறிவித்தார்.

  இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 1 டெஸ்ட் மற்றும் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டெஸ்ட் போட்டி ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. அடுத்தப்படியாக டி20 அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

  இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் விலகியுள்ளார்.

  சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷீத் ஒரு மூஸ்லிம் ஆவார். அவர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதால் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார். ரஷீத் விளையாடத நிலையில் மாட் பார்கின்சன் இந்தியாவுக்கு எதிரான ஒயிட்பால் தொடரில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான அடில் ரஷித் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாட யார்க்‌ஷைர் கவுன்ட்டி அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். #AdilRashid
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சுழற்பந்து வீச்சாளரான அடில் ரஷித் அபாரமான பந்து வீச்சை ஏற்படுத்தினார். இதனால் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.

  இங்கிலாந்தில் கவுன்ட்டி போட்டியில் விளையாடினால்தான் தேசிய அணிக்கு தேர்ச்சி பெறமுடியும். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில்லை என்று முடிவெடுத்திருந்தார்.  இந்திலையில் இந்தியாவிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய அடில் ரஷித் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில்லை என்று முடிவு எடுத்திருந்தார். தற்போது அந்த முடிவை மற்றிக்கொண்டு அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விளையாட முடிவு செய்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை லைவ் ஆக வைத்துள்ளது. #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றிக்கு 521 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா. பும்ராவின் அபார பந்து வீச்சால் நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. அடில் ரஷித் 30 ரன்களுடனும், ஆண்டர்சன் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

  ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 96.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு ரஷித்- ஆண்டர்சன் ஜோடி 8.3 ஓவர்கள் விளையாடியதால் இந்தியா நேற்று வெற்றியை ருசிக்க முடியாமல் போனது.  இந்நிலையில் இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தின் 3-வது ஓவரை அஸ்வின் வீசினார். 5-வது பந்தில் ஆண்டர்சன் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 317 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஆகவே இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா 7 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா 6 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

  இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் இரண்டு இன்னிங்சிலும் பந்து வீசவில்லை, பேட்டிங் செய்யவில்லை, கேட்ச் பிடிக்கவில்லை. #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 107 ரன்னில் சுருண்டது. ஆண்டர்சன், பிராட், கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான் ஆகியோர் இந்தியாவை சரித்தனர். இதனால் சுழற்பந்து வீச்சாளரான அடில் ரஷித் பந்து வீசும் சூழ்நிலை ஏற்படவில்லை.

  மேலும் இந்திய வீரர்கள் க்ளீன் போல்டு, எல்பிடபிள்யூ மற்றும் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டானதால் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பும் கிடைக்காமல் போனது. அதன்பின் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் பேட்டிங் பிடிக்கும் வாய்ப்பும் கிடைக்காமல் போனது.  பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதிலும் மேற்கொண்ட அந்த நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே பந்து வீசி இந்தியாவை 130 ரன்னில் சுருட்டினார்கள். இதனால் அடில் ரஷித்திற்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல் கேட்ச் ஏதும் பிடிக்கவில்லை.

  இதனால் லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும், எந்தவித பங்களிப்பும் இல்லாமல் அடில் ரஷித் வெற்றியை சக வீரர்களுடன் கொண்டாடியுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவுக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. மொயீன் அலிக்கு இடமில்லை. #ENGvIND #MoeenAli
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நாளை நடக்கிறது. இது இங்கிலாந்துக்கு 1000-மாவது டெஸ்ட் ஆகும். இந்த டெஸ்டில் விளையாடும் 11 பேர்  கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.  இதில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மொயீன் அலிக்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்கப் பதிலாக ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய அடில் ரஷித்திற்கு இடம் கிடைத்துள்ளது.

  இந்தியாவிற்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள 11 வீரர்கள் விவரம்:-

  அலைஸ்டர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட், மலன், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பட்லர், சாம் குர்ரான், அடில் ரஸித், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.  #ENGvIND #MoeenAli
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் அணியில் அடில் ரஷித் இடம் பிடித்ததற்கு வாகன் கடும் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு ரஷித் கடும் காட்டமாக பதிலளித்துள்ளார். #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற புதன்கிழமை (ஆகஸ்ட்-1) தொடங்குகிறது. இதற்கு முன் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறப்பாக பந்து வீசிய அடில் ரஷித்துக்கு, இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைத்துள்ளது.

  ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் அடில் ரஷித் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை. அத்துடன் கவுண்டி கிரிக்கெட்டிலும் விளையாடுவதில்லை என்று முடிவு செய்தார்.

  நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டியில் விளையாடாத அடில் ரஷித்தை இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்த்து இருப்பதற்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘டெஸ்ட் அணிக்கு அடில் ரஷித்தை தேர்வு செய்து இருப்பது கேலிக்குரியதாகும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

  மைக்கேல் வாகனின் விமர்சனத்துக்கு அடில் ரஷித் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அடில் ரஷித் அளித்த பேட்டியில், ‘மைக்கேல் வாகனின் விமர்சனம் முட்டாள்தனமானது. இதுபோல் மைக்கேல் வாகன் நிறைய பேசி வருகிறார். தன்னுடைய கருத்தை மக்கள் கவனிக்கிறார்கள் என்று நினைத்து அவர் செயல்பட்டு வருகிறார்.  அவருடைய கருத்தை மக்கள் யாரும் ஆர்வமாக பார்ப்பதில்லை. அவர் எனக்கு எதிராக திட்டம் போட்டு செயல்படுகிறார் என்று நான் நினைக்கவில்லை. நான் அவரது தலைமையின் கீழ் விளையாடி இருக்கிறேன். ஆனால் சில சமயங்களில் முன்னாள் வீரர்கள் இன்னாள் வீரர்கள் பற்றி அர்த்தமற்ற கருத்துகளை கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

  களத்தில் சாதிக்க என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். அணிக்காக 100 சதவீத அர்ப்பணிப்புடன் செயல்படுவேன். நன்றாக சென்றால் மகிழ்ச்சி. நன்றாக செல்லாவிட்டாலும் மகிழ்ச்சியே’’ என்று தெரிவித்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆதில்ரஷித் சேர்க்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்து உள்ளார். #ENGvIND #AdilRashid #MichaelVaughan
  லண்டன்:

  இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

  இரு அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.

  இதில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 1½ ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார்.

  இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆதில்ரஷித் சேர்க்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெஸ்ட் அணியில் ஆதில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டது கேலிக் குரியது.

  உள்ளூரில் நடக்கும் 4 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஒருவரை நாம் அணியில் சேர்த்து இருக்கிறோம். அவர் சிறப்பாக செயல்படுவாரா? மாட்டாரா? என்பதை மறந்து விடுவோம். ஆனால் இந்த முடிவை நான் கேலியதாகதான் பார்க்கிறேன்.  ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் ஆதில் ரஷீத் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #AdilRashid #MichaelVaughan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான அடில் ரஷித் மனம் மாறினால் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படுவார் என்று பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்துள்ள நிலையில் ஆகஸ்ட் 1-ந்தேதி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. டி20 தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியது. ஆனால் ஒருநாள் தொடரை 1-2 என இழந்தது. ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.

  கடைசியாக இங்கிலாந்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஐந்து ஒருநாள், இந்தியாவிற்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டியுடன் 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் அடில் ரஷித் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். குறிப்பாக தொடரை தீர்மானிக்கும் இந்தியாவிற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியை அசத்தும் வகையில் வீழ்த்தினார். பந்து அதிக அளவில் டர்ன் ஆகி ஸ்டம்பை தாக்கியதை கோலி ஆச்சர்யத்துடன் பார்த்தார்.

  ஒருநாள் போட்டியில் அசத்திய அடில் ரஷித் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பிடித்தால் சிறப்பானதாக இருக்கும் என இங்கிலாந்து பயிற்சியாளர் பெய்லிஸ் நினைக்கிறார். ஆனால், 2016-17-க்குப் பிறகு ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக ரடில் ரஷித் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார். அதேபோல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடுவது வைத்து இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை.  ஆனால், ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.

  இதனால் அடில் ரஷித் டெஸ்ட் போட்டியில் இடம்பெற பயிற்சியாளர் விரும்புகிறார். ஆனால், அடில் ரஷித் மனம் மாறினால்தான் டெஸ்ட் போட்டியில் இடம்பெற முடியும். இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை வற்புறுத்த வாய்ப்புள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இருநாடுகளுக்கு இடையிலான தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தி அடில் ரஷித், மொயீன் அலி சாதனைப் படைத்துள்ளனர் #ENGvAUS
  இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்டெக் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ஒரு கட்டத்தில் 6.3 ஓவரில் 60 ரன்கள் என்றிருந்த நிலையில், மொயீன் அலியின் சுழல் பந்தில் சிக்சி 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது. மொயீன் அலி 46 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
  மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.  இந்த தொடரில் இருவரும் தலா 12 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள். இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். இதற்கு முன் ஸ்வான் 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 11 விக்கெட்டுக்களும், 2013-ல் ட்ரெட்வெல் இந்தியாவிற்கு எதிராக 11 விக்கெடடுக்கள் வீழ்த்தியதுமே சாதனையாக இருந்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லண்டனில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 214 ரன்னில் சுருண்டது. #ENGvAUS
  இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று லண்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

  ஆரோன் பிஞ்ச் 19 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் 24 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 22 ரன்னிலும் வெளியேறினார்கள்.  அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 64 பந்தில் 62 ரன்களும், சுழற்பந்து வீச்சாளர் அஷ்டோன் அகர் 62 பந்தில் 40 ரன்களும் அடித்தனர். இருவரும் தாக்குப்பிடித்து விளையாடியதால் ஆஸ்திரேலியா 47 ஓவரில் 214 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி 3 விக்கெட்டும், அடில் ரஷித் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

  பின்னர் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் சேய்து வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான உலக லெவன் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். முகமது ஷமி, அடில் ரஷித் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  வெஸ்ட் இண்டீஸ் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 31-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான உலக லெவன் அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்திருந்தார். தற்போது வைரஸ் காய்ச்சல் காரணமாக அவர் அணியில் இருந்து விலகியுள்ளார்.  இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் அடில் ரஷித் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். உலக லெவன் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. மோர்கன் (கேப்டன்), 2. அப்ரிடி, 3. தமிம் இக்பால், 4. தினேஷ் கார்த்திக், 5. ரஷித் கான், 6. சந்தீப் லாமிச்சேன், 7 மெக்கிளேனகன், 8. சோயிப் மாலிக், 9. திசாரா பெரேரா, 10, லூக் ரோஞ்சி, 11. அடில் ரஷித், 12. முகமது ஷமி.
  ×