search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Michael Vaughans"

    • சமீபத்தில் நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பங்கேற்றார்.
    • திறமைகள் இருந்தும் சரியாக பயன்படுத்தாமல் குறைந்த வெற்றிபெறும் அணியாக இந்தியா திகழ்கிறது என்றார்.

    புதுடெல்லி:

    தனியார் விளையாட்டு சேனல் நடத்திய கேள்வி-பதில் நிகழ்ச்சியில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பங்கேற்றார்.

    அப்போது அவர் கூறுகையில், இந்தியாவின் தென் ஆப்பிரிக்கா பயணம் திட்டமிட்டபடி அமையவில்லை. இந்திய அணி முதல் டெஸ்டில் அதிக வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்காவில் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை அந்த அணி இழந்தது. ஏராளமான திறமைகள் இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் குறைந்த வெற்றிகளை பெறும் அணியாக இந்தியா திகழ்கிறது. சமீபத்திய காலங்களில் இந்திய அணி பங்கேற்ற போட்டிகளில் அதிகம் வெற்றி பெறவில்லை. அவர்கள் மேலே வர தவறுகிறார்கள். திறமைகள் மற்றும் திறன்கள் அனைத்தையும் கொண்டு அவர்கள் இன்னும் அதிகமாக சாதித்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

    வாகனின் இந்தக் கருத்துக்கு முன்னாள் இந்திய வீரர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    சர்வதேச கிரிக்கெட்டில், குறிப்பாக டெஸ்ட் வடிவத்தில் இந்தியா எவ்வளவு சிறப்பாக செயல்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற கருத்து சிரிக்க வைக்கிறது.

    ஆம், நாங்கள் பல ஆண்டுகளாக ஐ.சி.சி. கோப்பையை வென்றதில்லை. விளையாட்டின் பவர் ஹவுஸ் என்று இந்தியாவை குறிப்பிடுகிறோம். இந்திய டெஸ்ட் அணி வெளிநாடுகளில் சிறந்த அணிகளில் ஒன்றாக இருந்துவருகிறது. நாங்கள் பல சிறந்த முடிவுகளைப் பார்த்திருக்கிறோம்.

    விளையாட்டின் நீண்ட வடிவத்தில் வெளிநாடுகளில் இந்திய அணி வியக்கத்தக்க வகையில் செயல்பட்டுள்ளது. நல்ல மன உறுதியும், மனத்திறனும் கொண்ட ஒரு நல்ல கிரிக்கெட் அணி எங்கிருந்தும் மீண்டும் களமிறங்க முடியும் என்பதுதான் உண்மை. நாங்கள் இரு உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் தோற்றோம். நான் அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் ஒரு டெஸ்ட் தொடரின்போது மீண்டும் திரும்புவது எப்போதும் சாத்தியமாகும் என தெரிவித்தார்.

    இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் அணியில் அடில் ரஷித் இடம் பிடித்ததற்கு வாகன் கடும் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு ரஷித் கடும் காட்டமாக பதிலளித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற புதன்கிழமை (ஆகஸ்ட்-1) தொடங்குகிறது. இதற்கு முன் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறப்பாக பந்து வீசிய அடில் ரஷித்துக்கு, இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைத்துள்ளது.

    ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் அடில் ரஷித் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை. அத்துடன் கவுண்டி கிரிக்கெட்டிலும் விளையாடுவதில்லை என்று முடிவு செய்தார்.

    நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டியில் விளையாடாத அடில் ரஷித்தை இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்த்து இருப்பதற்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘டெஸ்ட் அணிக்கு அடில் ரஷித்தை தேர்வு செய்து இருப்பது கேலிக்குரியதாகும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    மைக்கேல் வாகனின் விமர்சனத்துக்கு அடில் ரஷித் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அடில் ரஷித் அளித்த பேட்டியில், ‘மைக்கேல் வாகனின் விமர்சனம் முட்டாள்தனமானது. இதுபோல் மைக்கேல் வாகன் நிறைய பேசி வருகிறார். தன்னுடைய கருத்தை மக்கள் கவனிக்கிறார்கள் என்று நினைத்து அவர் செயல்பட்டு வருகிறார்.



    அவருடைய கருத்தை மக்கள் யாரும் ஆர்வமாக பார்ப்பதில்லை. அவர் எனக்கு எதிராக திட்டம் போட்டு செயல்படுகிறார் என்று நான் நினைக்கவில்லை. நான் அவரது தலைமையின் கீழ் விளையாடி இருக்கிறேன். ஆனால் சில சமயங்களில் முன்னாள் வீரர்கள் இன்னாள் வீரர்கள் பற்றி அர்த்தமற்ற கருத்துகளை கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    களத்தில் சாதிக்க என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். அணிக்காக 100 சதவீத அர்ப்பணிப்புடன் செயல்படுவேன். நன்றாக சென்றால் மகிழ்ச்சி. நன்றாக செல்லாவிட்டாலும் மகிழ்ச்சியே’’ என்று தெரிவித்துள்ளார்.
    ×