என் மலர்

  செய்திகள்

  இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் அதிக விக்கெட்- ரஷித், மொயீன் அலி சாதனை
  X

  இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் அதிக விக்கெட்- ரஷித், மொயீன் அலி சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இருநாடுகளுக்கு இடையிலான தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தி அடில் ரஷித், மொயீன் அலி சாதனைப் படைத்துள்ளனர் #ENGvAUS
  இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்டெக் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ஒரு கட்டத்தில் 6.3 ஓவரில் 60 ரன்கள் என்றிருந்த நிலையில், மொயீன் அலியின் சுழல் பந்தில் சிக்சி 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது. மொயீன் அலி 46 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
  மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.  இந்த தொடரில் இருவரும் தலா 12 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள். இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். இதற்கு முன் ஸ்வான் 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 11 விக்கெட்டுக்களும், 2013-ல் ட்ரெட்வெல் இந்தியாவிற்கு எதிராக 11 விக்கெடடுக்கள் வீழ்த்தியதுமே சாதனையாக இருந்தது.
  Next Story
  ×