search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Treveor Bayliss"

    இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான அடில் ரஷித் மனம் மாறினால் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படுவார் என்று பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்துள்ள நிலையில் ஆகஸ்ட் 1-ந்தேதி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. டி20 தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியது. ஆனால் ஒருநாள் தொடரை 1-2 என இழந்தது. ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.

    கடைசியாக இங்கிலாந்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஐந்து ஒருநாள், இந்தியாவிற்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டியுடன் 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் அடில் ரஷித் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். குறிப்பாக தொடரை தீர்மானிக்கும் இந்தியாவிற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியை அசத்தும் வகையில் வீழ்த்தினார். பந்து அதிக அளவில் டர்ன் ஆகி ஸ்டம்பை தாக்கியதை கோலி ஆச்சர்யத்துடன் பார்த்தார்.

    ஒருநாள் போட்டியில் அசத்திய அடில் ரஷித் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பிடித்தால் சிறப்பானதாக இருக்கும் என இங்கிலாந்து பயிற்சியாளர் பெய்லிஸ் நினைக்கிறார். ஆனால், 2016-17-க்குப் பிறகு ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக ரடில் ரஷித் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார். அதேபோல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடுவது வைத்து இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை.



    ஆனால், ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.

    இதனால் அடில் ரஷித் டெஸ்ட் போட்டியில் இடம்பெற பயிற்சியாளர் விரும்புகிறார். ஆனால், அடில் ரஷித் மனம் மாறினால்தான் டெஸ்ட் போட்டியில் இடம்பெற முடியும். இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை வற்புறுத்த வாய்ப்புள்ளது.
    ×