என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
பேட்டிங், பந்து வீச்சு இல்லை, கேட்ச் இல்லை- ஆனால் வெற்றியை கொண்டாடிய அடில் ரஷித்
By
மாலை மலர்13 Aug 2018 11:35 AM GMT (Updated: 13 Aug 2018 11:35 AM GMT)

லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் இரண்டு இன்னிங்சிலும் பந்து வீசவில்லை, பேட்டிங் செய்யவில்லை, கேட்ச் பிடிக்கவில்லை. #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 107 ரன்னில் சுருண்டது. ஆண்டர்சன், பிராட், கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான் ஆகியோர் இந்தியாவை சரித்தனர். இதனால் சுழற்பந்து வீச்சாளரான அடில் ரஷித் பந்து வீசும் சூழ்நிலை ஏற்படவில்லை.
மேலும் இந்திய வீரர்கள் க்ளீன் போல்டு, எல்பிடபிள்யூ மற்றும் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டானதால் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பும் கிடைக்காமல் போனது. அதன்பின் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் பேட்டிங் பிடிக்கும் வாய்ப்பும் கிடைக்காமல் போனது.

பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதிலும் மேற்கொண்ட அந்த நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே பந்து வீசி இந்தியாவை 130 ரன்னில் சுருட்டினார்கள். இதனால் அடில் ரஷித்திற்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல் கேட்ச் ஏதும் பிடிக்கவில்லை.
இதனால் லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும், எந்தவித பங்களிப்பும் இல்லாமல் அடில் ரஷித் வெற்றியை சக வீரர்களுடன் கொண்டாடியுள்ளார்.

Next Story
×