என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தனித்துவமான பந்து வீச்சாளர்... ஆட்டநாயகன் விருதுக்கு பும்ரா தகுதியானவர்- சஞ்சு சாம்சன்
- பும்ராவின் அபாரமான பந்துவீச்சு இல்லாமல் நான் இந்த இடத்தில் நின்று இருக்க மாட்டேன்.
- வெற்றி பெறும் முயற்சியில் எனது பங்களிப்பு இருந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
மும்பை:
இந்திய அணி இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு காரணமாக இருந்த வீரர்களில் ஒருவர் சஞ்சு சாம்சன். அவர் 42 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 89 ரன் எடுத்து இந்திய அணி 253 ரன்களை குவிக்க முக்கிய பங்கு வைத்தார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
விருதைப் பெற்ற பிறகு அவர் கூறிய தாவது:-
கடந்த போட்டியில் இருந்து நான் ஓரளவு நல்ல நிலையில் (பார்ம்) இருக்கிறேன் என்பது தெரியும். இதை அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக கூடுதல் நேரம் கொடுத்தேன். எந்த ஸ்கோரும் போதுமானது கிடையாது என்பது எங்களுக்கு தெரியும்.
நானும், இஷான் கிஷனும் பேட்டிங் செய்த விதத்தை பார்த்தால் 250 ரன்கள் சாத்தியம் என்பதை உணர்ந்தோம். இங்கிலாந்து அணி நெருங்கி வந்தது. அவர்கள் நன்றாக விளையாடினார்கள். அரை இறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
அனைத்து பாராட்டுகளும் பும்ராவே சேரும். என்னைவிட அவர்தான் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர். அவருக்கு அந்த விருதை வழங்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அவர் ஒரு தனித்துவமான பந்து வீச்சாளர். அவரது அபாரமான பந்துவீச்சு இல்லாமல் நான் இந்த இடத்தில் நின்று இருக்க மாட்டேன்.
சதம் ஒரு பொருட்டல்ல. வெற்றி பெறும் முயற்சியில் எனது பங்களிப்பு இருந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
ஆட்டத்தின் 18 வது ஓவ ரில் பும்ரா 6 ரன் மட்டுமே கொடுத்தார். இந்த ஓவர் தான் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.
31 வயதான சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 4 ஆட்டத்தில் விளையாடி 2 அரை சதத்துடன் 232 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 77.73 ஆகவும் , ஸ்டிரைக் ரேட் 201.73 ஆகவும் இருக்கிறது.






