என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆட்டநாயகன் விருது: ராகுல் டிராவிட் சாதனையை சமன் செய்த ஜடேஜா
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
- வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 146 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது.
அகமதாபாத்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது.
முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல், ஜடேஜா ஆகியோர் சதமடித்து அசத்த 5 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்தியா டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. 104 ரன் மற்றும் 4 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில், டெஸ்ட் அரங்கில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை டிராவிட் (163 போட்டிகளில் 11 முறை) உடன் பகிர்ந்து கொண்டார் ஜடேஜா (86 போட்டிகளில் 11 முறை).
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் சச்சின் (200 போட்டிகளில் 14 தடவை) உள்ளார்.
சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்களில் முதலிடம் பெற்றார் ஜடேஜா இவர் 50 போட்டிகளில் 10 தடவை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.






