என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வெளிநாட்டு மண்ணில் அதிக ரன்கள்: 23 ஆண்டு கால சாதனையை முறியடித்த ஜடேஜா
- இந்தியா 2வது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 2வது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஆகாஷ் தீப், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அரை சதம் கடந்தனர். இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் ஜடேஜா 19 ரன்களை எடுத்தபோது மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
இந்திய அணி வெளிநாடுகளில் ஆடிய ஒரு டெஸ்ட் தொடரில் நம்பர் 6 அல்லது அதற்கு கீழான பேட்டிங் வரிசையில் ஆடிய வீரர்களில் வி.வி.எஸ்.லக்ஷ்மண் 474 ரன்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. 2002-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் விளையாடிய போது விவிஎஸ் லக்ஷ்மண் இந்த சாதனையை படைத்தார்.
தற்போது 23 ஆண்டுக்கு பின் ஜடேஜா இந்த சாதனையை முறியடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் 10 இன்னிங்சில் 5 அரைசதம் மற்றும் ஒரு சதம் உள்பட 516 ரன்களை விளாசி அசத்தி இருக்கிறார்.






