என் மலர்
இந்தியா

குஜராத் அமைச்சராகும் ஜடேஜாவின் மனைவி.. 26 புதிய அமைச்சர்களை தேர்வு செய்த முதல்வர் பூபேந்திர படேல்
- நேற்று அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
- உள்துறை அமைச்சர் ஹர்ஷா சங்விக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் பூபேந்திரா படேல் தலைமையில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் அமைச்சவரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநில அமைச்சரவையை முழுமையாக மறுசீரமைக்க வசதியாக நேற்று அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்-தை பூபேந்திரா படேல் சந்தித்தார். இந்நிலையில் 26 புதிய அமைச்சர்களை பூபேஷ் படேல் தேர்வு செய்துள்ளார்.
இந்த பட்டியலில் கிரிக்கெட் பிரபலம் ரவீந்தர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 2019 இல் அவர் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய அமைச்சரவையில் மூன்று பேர் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் உள்ள 19 பேரும் புதிய முகங்கள் ஆவர். உள்துறை அமைச்சர் ஹர்ஷா சங்விக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்றே ஆளுநர் தலைமையில் நடைபெற உள்ளது. 2027 இல் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான நகர்வாக இந்த அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.






