என் மலர்tooltip icon

    இந்தியா

    முப்படைகளும் சேர்ந்து நடத்தும் திரிசூல் ராணுவப் பயிற்சி காட்சிகளை வெளியிட்ட இந்திய ராணுவம்
    X

    முப்படைகளும் சேர்ந்து நடத்தும் 'திரிசூல்' ராணுவப் பயிற்சி காட்சிகளை வெளியிட்ட இந்திய ராணுவம்

    • அக்டோபர் 30ம் தேதி தொடங்கிய இந்த கூட்டு ராணுவப் பயிற்சி நவ.10 வரை நடைபெறுகிறது.
    • குஜராத்தின் கட்ச் பகுதியில் இந்த கூட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது.

    இந்தியாவின் முப்படைகளும் சேர்ந்து நடத்தும் 'திரிசூல்' ராணுவப் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

    பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் அக்டோபர் 30ம் தேதி தொடங்கிய இந்த கூட்டு ராணுவப் பயிற்சி நவ.10 வரை நடைபெறுகிறது.

    குறிப்பாக குஜராத்தின் கட்ச் பகுதியில் இந்த கூட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது. குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக் (Sir Creek) ஆகும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்படும் முக்கிய இடமாக இப்பகுதி உள்ளது. ஆதலால் இந்தியாவின் இந்த கூட்டு பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், முப்படைகளும் சேர்ந்து நடத்தும் 'திரிசூல்' ராணுவப் பயிற்சி காட்சிகளை இந்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×