என் மலர்
இந்தியா

திருமணமாகி 2 மாதத்தில் காதலனுடன் சென்ற மனைவி.. கணவன் தற்கொலை - திருமணம் செய்த வைத்த உறவினரும் தற்கொலை
- கோவிலுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய சரஸ்வதி வீடு திரும்பவில்லை.
- அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்த ருத்ரேஷும் தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம் தாவநகரே மாவட்டத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் 2 மாதங்களுக்கு முன் ஹரிஷ் (30) என்பவரை மணந்தார்.
கடந்த 23 ஆம் தேதி கோவிலுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய சரஸ்வதி வீடு திரும்பவில்லை. புகாரின் பேரின் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சரஸ்வதி தனது காதலன் சிவகுமாருடன் சென்றது தெரியவந்தது.
இதை அறிந்ததும், கணவர் ஹரிஷ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். ஹரிஷின் மரணச் செய்தியைத் தாங்க முடியாமல், அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்த ருத்ரேஷும் (36) தற்கொலை செய்து கொண்டார். ருத்ரேஷ் சரஸ்வதியின் தாய்மாமன்.
காவல்துறை விசாரணையில், சரஸ்வதிக்கு திருமணத்திற்கு முன்பே ஒரு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. சரஸ்வதி மற்றும் அவரது காதலனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
Next Story






