முஸ்லீம் இளைஞரை காதலித்த தங்கை.. இருவரையும் வெட்டிக் கொலை செய்த அண்ணன்கள்.. உ.பி. பயங்கரம்

இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காஜலின் 3 சகோதரர்கள் இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அர்மான் மற்றும் தங்கை காஜலின் கைகால்களைக் கட்டி வைத்து, அவர்களை வெட்டிக்கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
முஸ்லீம் இளைஞரை காதலித்த தங்கை.. இருவரையும் வெட்டிக் கொலை செய்த அண்ணன்கள்.. உ.பி. பயங்கரம்
Published on

உத்தரப் பிரதேசத்தில் மதம் கடந்து காதலித்ததற்காக முஸ்லிம் இளைஞர் மற்றும் இந்து காதலி கைகால்கள் கட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த அர்மான் (27) சவுதி அரேபியாவில் வேலை பார்த்துவிட்டு 3 மாதங்களுக்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவரும் அதே ஊரை சேர்ந்த காஜல் (22) என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காஜலின் 3 சகோதரர்கள் இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த 3 நாட்களாக இருவரையும் காணவில்லை என்று அர்மானின் தந்தை புகார் அளித்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் காஜலின் சகோதரர்களைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கொலையை ஒப்புக்கொண்டனர்.

அர்மான் மற்றும் தங்கை காஜலின் கைகால்களைக் கட்டி வைத்து, அவர்களை வெட்டிக்கொலை செய்ததாகவும், உடல்களை நதிக்கரையில் குழிதோண்டிப் புதைத்துள்ளதாகவும்அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

அவர்கள் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து போலீசார் புதன்கிழமை மாலை, உடல்களைத் தோண்டி எடுத்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

காஜலின் 3 சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் மத ரீதியான பதற்றம் ஏற்படாமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com