என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே காதலர்கள் மாயம்; வாலிபர் வீடு சூறை, பொருட்கள் சேதம்
    X

    நாங்குநேரி அருகே காதலர்கள் மாயம்; வாலிபர் வீடு சூறை, பொருட்கள் சேதம்

    • அந்தோணி மார்ட்டினும் வெள்ளத்தாயும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர்.
    • பயந்து போன லெட்சுமி, திருச்செந்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பனையன்குளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம்.

    இவரது மகன் சுடலைக்கண்ணு என்ற அந்தோணி மார்ட்டின். இவரும், பாலாமடையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது மகள் வெள்ளத்தாயும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர்.

    இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து ள்ளனர். ஆனால் பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதால் கடந்த மாதம் 28-ந் தேதி 2 பேரும் ஊரை விட்டு வெளியேறி விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த வெள்ளத்தாயின் தந்தை ஸ்ரீதர், அந்தோணி மார்ட்டினின் தாயார் லெட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    பொருட்கள் சூறை

    இதனால் பயந்து போன லெட்சுமி, பனையன்குளத்தில் இருந்து வெளியேறி, திருச்செந்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையே ஸ்ரீதர், அவரது மனைவி சுப்புலெட்சுமி, மகன் சுடலைமுத்து, மருமகன்கள் கால்வாயை சேர்ந்த அருணாச்சலம், ராஜவல்லிபுரத்தை சேர்ந்த சப்பாணி முத்து ஆகிய 5 பேரும் பனையன்குளத்தில் உள்ள அந்தோணி மார்ட்டின் வீட்டுக்கு சென்றுள்ளனர். வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அங்கிருந்த கதவுகள், பீரோ, டி.வி உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டு தப்பி சென்றனர்.

    இதுபற்றி லெட்சுமி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெ க்டர் தாமரைலிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வீட்டை சூறையாடிய ஸ்ரீதர் உள்பட 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×