என் மலர்
இந்தியா

இந்துத்துவா கும்பல் அச்சுறுத்தல்.. உணவகத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த காதல் ஜோடி
- இரண்டாவது மாடியில் இருந்த அந்த ஜோடி அங்கிருந்த ஜன்னல் வழியாக திடீரென கீழே குதித்தனர்.
- தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் இந்துத்துவா கும்பலின் அச்சறுத்தலால் பயந்துபோன ஒரு இளம் காதல் ஜோடி மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாஜஹான்பூரில் நேற்று ஒரு pizza கடை உணவகத்தின் இரண்டாவது மாடியில் அந்த இளைஞரும் இளம்பெண்ணும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு இந்துத்துவா கும்பலை சேர்ந்தவர்கள் அந்த ஜோடியைச் சூழ்ந்துகொண்டு கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர்.
அவர்கள் தங்களைத் தாக்குவார்களோ என்ற பயத்தில், இரண்டாவது மாடியில் இருந்த அந்த ஜோடி அங்கிருந்த ஜன்னல் வழியாக திடீரென கீழே குதித்தனர்.
கீழே விழுந்ததில் அந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.






