இந்தியன்-2 பட விழாவில் மனிஷா கொய்ராலா

சினிமா பற்றிய அவரது புரிதல் இணையற்றது. புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் கமல்ஹாசன்.
இந்தியன்-2 பட விழாவில் மனிஷா கொய்ராலா
Published on

இந்தியன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் மனிஷா கொய்ராலா. இந்த படத்தின் 2-ம் பாகம் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகி உள்ளது. ஜூலை 12-ந் தேதி திரைக்கு வர இருக்கும் படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை, மும்பை, சிங்கப்பூரில் நடந்த இந்தியன்-2 பட விழாவில் கமல் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். மும்பையில் நடந்த படத்தின் விழாவில் இந்தியன் முதல் பாகத்தில் நடித்த மனிஷா கொய்ராலா கமல்ஹாசனை நேரில் சந்தித்தார்.

இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மனிஷா கொய்ராலா நான் இணைந்து நடித்த புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் கமல்ஹாசன். சினிமா பற்றிய அவரது புரிதல் இணையற்றது.

அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருக்கலாம். அவரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர் தன்னை வியப்பில் ஆழ்த்திக்கொண்டே இருப்பார் என பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com