என் மலர்

  சினிமா

  பாகுபலி 3-ஐ உருவாக்கும் ராஜமவுலி
  X

  பாகுபலி 3-ஐ உருவாக்கும் ராஜமவுலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகுபலி இரண்டு பாகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து சிவகாமி, கட்டப்பா கதாபாத்திரங்களின் முன்கதையை இணைய தொடராக பிரமாண்டமாக இயக்கும் முயற்சியில் ராஜமவுலி இறங்கியுள்ளார். #Baahubali3 #Rajamouli
  பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் உலக அளவில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, ராஜமவுலி இயக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜுனியர் என்.டி.ஆரையும் ராம்சரணையும் இணைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.

  அதற்கு முன்பு தற்போது அவர் பாகுபலி படத்தில் இடம்பெற்ற சிவகாமி, கட்டப்பா கதாபாத்திரங்களின் முன்கதையை இணைய தொடராக பிரமாண்டமாக இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

  கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆனந்த் நீலகண்டன் எழுதிய ‘தி ரைஸ் ஆஃப் சிவகாமி’ புத்தகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் புத்தகத்தை தழுவி ராஜமவுலி மூன்று பாகங்களாக தொடரை இயக்க உள்ளார்.  நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள இந்தத் தொடருக்கு, ஒரு எபிசோடு தயாரிக்க 20 மில்லியன் டாலர்கள் வரை செலவாகும். லக்னோவில் நடைபெற்றுவரும் இதன் படப்பிடிப்பில் சஞ்சய் தத், மனிஷா கொய்ராலா இணைந்து நடித்து வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி இணைந்து நடிக்கிறார்கள். #Baahubali3 #Rajamouli

  Next Story
  ×