என் மலர்
நீங்கள் தேடியது "வாணி கபூர்"
- இந்தி நடிகைகளான வாணி கபூர், சர்வீன் சாவ்லா மற்றும் ஸ்ரீயா பில்கானகார் இணைந்து நடித்துள்ள வெப் தொடர் மண்டலா மர்டர்ஸ்.
- இத்தொடரை YRF எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தி நடிகைகளான வாணி கபூர், சர்வீன் சாவ்லா மற்றும் ஸ்ரீயா பில்கானகார் இணைந்து நடித்துள்ள வெப் தொடர் மண்டலா மர்டர்ஸ். இத்தொடரை YRF எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்க கோபி புத்ரன் இயக்கியுள்ளார். தொடர் வரும் ஜூலை 25 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதனை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடரில் ரகுபிர் யாதவ், குல்லாக் புகழ் வைபஜ் ராஜ் குப்தா மற்றும் ஜமீல் கான் நடித்துள்ளனர்.
இது ஒரு திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
- ஃபவாத் கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடிக்கிறார்.
- பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ஃபவாத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
26 பேரின் உயிரைக் குடித்த காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் மற்றும் இந்தி வாணி கபூர் நடிக்கும் 'அபிர் குலால்' படத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.
இந்தப் படம் மே 9, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 'அபிர் குலால்' இரண்டு நாடுகளின் எல்லைகளைக் கடக்கும் ஒரு காதல் கதையை மையமிட்டு எடுக்கப்பட்ட படம்.
இந்தப் படத்தில் ஃபவாத் கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடிக்கிறார். இது தவிர, சோனி ரஸ்தான், ஃபரிதா ஜலால், லிசா ஹேடன் மற்றும் ராகுல் வோஹ்ரா ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஆர்த்தி எஸ். பக்ரி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் மற்றும் அவரின் 'அபிர் குலால்' படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல்கள் எழுந்துள்ளன.
மேற்கு இந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு மற்றும் இந்திய மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கமும் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ஃபவாத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் ராஷி கன்னா.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் மகாகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரபல நடிகர், நடிகைகள் அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், இன்று நடிகைகள் ராசி கன்னாவும், வாணி கபூரும் மகாகாலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இது குறித்தான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், நடிகை வாணி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து, 'ஜெய் மகாகாலேஸ்வரர்' என்று பதிவிட்டுள்ளார்.
சாமி தரிசனம் செய்த பின்னர் நடிகை ராசி கன்னா கூறுகையில், ஜெய் ஸ்ரீ மகாகாலேஸ்வரர். மகிழ்ச்சியாக உணர்ந்தேன். உண்மையில், நாங்கள் இருவரும் ஒரே மாதிரியாக உணர்ந்தோம். மகாகாலேஸ்வரர் எங்களை மீண்டும் அழைப்பார் என்று நம்புகிறேன், இவ்வாறு கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ், இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் வாணி கபூர்.
- இவர் சண்டிகர் கரே ஆஷிகி படத்தில் திருநங்கையாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
தமிழில் நானி ஜோடியாக 'ஆஹா கல்யாணம்' படத்தில் நடித்து பிரபலமானவர் வாணி கபூர். அதன்பின் வார், பெஃபிக்ரே போன்ற பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

வாணி கபூர்
இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்திருந்தார். சமீபத்தில் இவர் சண்டிகர் கரே ஆஷிகி படத்தில் திருநங்கையாக நடித்து, பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

வாணி கபூர்
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் வாணி கபூர், தற்போது புதிய கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு, நான் வெளியேறுகிறேன்.. கேப்ஷனை நீங்களே போட்டுக்கோங்க குறிப்பிட்டுள்ளார். இந்த கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
*insert caption here .. cuz I'm running outta em * pic.twitter.com/ztVH6XTBsx
— Vaani Kapoor (@Vaaniofficial) July 11, 2022
- தமிழ், இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் வாணி கபூர்.
- இவர் சண்டிகர் கரே ஆஷிகி படத்தில் திருநங்கையாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
தமிழில் நானி ஜோடியாக 'ஆஹா கல்யாணம்' படத்தில் நடித்து பிரபலமானவர் வாணி கபூர். அதன்பின் வார், பெஃபிக்ரே போன்ற பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்திருந்தார். சமீபத்தில் இவர் சண்டிகர் கரே ஆஷிகி படத்தில் திருநங்கையாக நடித்து, பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

வாணி கபூர்
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் வாணி கபூர், தற்போது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.






