என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rashi Khanna"

    • இப்படி சீரிசாக மாறும் என நினைக்கவே இல்லை.
    • இந்தப் படத்தை செய்யலாம் என நான் நினைத்ததே இல்லை.

    அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்கியுள்ள படம் அரண்மனை 4. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சுந்தர் சி, "அரண்மனை இப்போது நான்காம் பாகத்துடன் வந்துள்ளேன், முதல் பாகம் செய்யும் போது, இது இப்படி சீரிசாக மாறும் என நினைக்கவே இல்லை. அரண்மனை 3 படத்திற்கு கிடைத்த வெற்றி தான் இப்படம் உருவாக காரணம்."

     


    "எப்போதும் நான் பணத்திற்காக இந்தப் படத்தை செய்யலாம் என நான் நினைத்ததே இல்லை. ஒரு நல்ல கதை, ஐடியா கிடைத்ததால் மட்டும் தான் படத்தை துவக்கினேன். இப்படத்திற்கும் ஒரு அட்டகாசமான ஐடியா கிடைத்தது."

    "நம் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் வட இந்தியாவைப் பிடித்த அளவு, அசாம் பக்கம் பிரம்மபுத்திராவை தாண்டிப் போகவில்லை. அது ஏன் எனக் கேட்டு ஆராய்ந்தால், பாக் எனும் ஆவிகளின் சக்தி பற்றிய சுவாரஸ்யமான விஷயம் சிக்கியது. அதை வைத்து, மிக சுவாரஸ்யமான கதையை அரண்மனை 4 இல் செய்துள்ளோம்," என்று தெரிவித்தார்.

    அரண்மனை படத்தின் நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திரக்கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் சுந்தர் சி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, கே.ஜி.எஃப். ராம், VTV கணேஷ், சேசு, ஜேபி, டெல்லி கணேஷ், சந்தோஷ் குமார், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி உட்பட பலர் நடித்துள்ளனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
    • இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

    சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அரண்மனை 4. இந்த படத்தின் முதல் மூன்று பாகங்களை போன்றே இந்த படத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள அரண்மனை 4 திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருந்தது. இதையொட்டி இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், அரண்மனை 4 படம் மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களிலும் மால்களில் உள்ள திரையரங்குகளில் இன்று ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது

    சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அரண்மனை 4. இந்த படத்தின் முதல் மூன்று பாகங்களை போன்றே இந்த படத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பு சார்பில் அவ்னி சினிமாக்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். மே 3 { இன்று} திரையரங்குகளில் வெளியானது. நேற்று திரைப்பிரபலங்களுக்கு திரைமுன்னோட்டம் காட்சியிடப்பட்டது. அதைப் பார்த்த அனைவரும் படம் நன்றாகவுள்ளது என கருத்துக்களை பகிர்ந்தனர்.

    சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களிலும் மால்களில் உள்ள திரையரங்குகளில் இன்று ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் பார்த்த பெரும்பாலானோர் பாசிடிவ் ரிவியுகளை சமூகவலை தளங்களில் பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்களிலும் வேகமாக அரண்மனை 4 படத்திற்கு புக்கிங் பதிவாகி வருகிறது.

    சுந்தர்.சி அவரது மற்ற பாகங்களை போலவே இப்படத்தை எடுத்து இருந்தாலும். இந்த பாகத்தில் விஸ்வல் எஃபக்ட்ஸ்களும், நகைச்சுவை காட்சிகள் மற்றும் திகில் காட்சிகள் நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.

    சமீபத்தில் தமிழ் படங்களில் ரீரிலீஸ் படங்களே அதிகம் திரையரங்குகளில் ஓடுகிறது கில்லி படத்தின் ரீ ரிலீஸ் மக்களிடம் பெரும் ஆதரவு பெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் முன்பு அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான தீனா, பில்லா போன்ற படங்கள் கில்லியைப் போல் வரவேற்பு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மலையாள திரைப்படங்களுக்கு கிடைத்த ஆதரவு கூட சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களுக்கு கிடைக்கவில்லை.இச்சூழ்நிலையில்  தற்பொழுது அரண்மனை 4 வெளியாகியுள்ளது.

    கோடை விடுமுறைக்கு தக்க சமையத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் திரைப்படமாக இது அமைந்துள்ளது அரண்மனை 4. இப்படத்திற்கு மக்களிடையே பெருமாதரவு பெற்று வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுந்தர் சி இயக்கத்தில் மே 3 ஆம் தேதி வெளியாகியது அரண்மனை 4 திரைப்படம்.
    • ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பு சார்பில் அவ்னி சினிமாக்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

    சுந்தர் சி இயக்கத்தில் மே 3 ஆம் தேதி வெளியாகியது அரண்மனை 4 திரைப்படம். இந்த படத்தின் முதல் மூன்று பாகங்களை போன்றே இந்த படத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பு சார்பில் அவ்னி சினிமாக்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் பாடலான அச்சச்சோ மற்றும் அம்மன் பாடல் ஹிட்டாக அமைந்தது.

    யோகி பாபு, கோவை சரளா மற்றும் விடிவி கணேஷ் கமெடி காட்சிகள் மக்களிடையே மிகவும் ரசிக்க கூடியவையாக் இருந்தது. அரண்மனை மற்ற பாகங்களை விட இந்த பாகத்தில் கிராபிக்ஸ் மற்றும் விஃபெக்ஸ் காட்சிகள் மிகவும் மேன்மையாக உருவாக்கப்பட்டு இருந்தது. இதெல்லாம் படத்தின் கூடுதல் பலம்.

    படம் தமிழின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மற்றும் உலகளவில் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி 19 முடிவடைந்த நிலையில் படம் இதுவரை உலகளவில் 100 கோடியை வசூலித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படத்தில் அரண்மனை4 வசூலில் முதல் இடத்தில் உள்ளது. தமிழ் நாடில் வெளியிடப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் வசூலை அரணமனை முறியடித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் ராஷி கன்னா.

    சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் ராஷி கன்னா.

    மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் மகாகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரபல நடிகர், நடிகைகள் அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், இன்று நடிகைகள் ராசி கன்னாவும், வாணி கபூரும் மகாகாலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    இது குறித்தான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், நடிகை வாணி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து, 'ஜெய் மகாகாலேஸ்வரர்' என்று பதிவிட்டுள்ளார்.

    சாமி தரிசனம் செய்த பின்னர் நடிகை ராசி கன்னா கூறுகையில், ஜெய் ஸ்ரீ மகாகாலேஸ்வரர். மகிழ்ச்சியாக உணர்ந்தேன். உண்மையில், நாங்கள் இருவரும் ஒரே மாதிரியாக உணர்ந்தோம். மகாகாலேஸ்வரர் எங்களை மீண்டும் அழைப்பார் என்று நம்புகிறேன், இவ்வாறு கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில், "அகத்தியா" படக்குழு, இரண்டு புதிய அற்புதமான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.
    • திரைப்படம் வரும் ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது.

    தமிழ்த் திரையுலகில் புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில், "அகத்தியா" படக்குழு, இரண்டு புதிய அற்புதமான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் "என் இனிய பொன் நிலாவே." பாடல் என இரண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டத் திரைப்படம் வரும் ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது.

    தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக, திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் அடிப்படையில் ஒரு விளையாட்டு ஆப் (game) உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியாவின் ஏஞ்சல்ஸ் அண்ட் டெவில்ஸ் இடம்பெறும் இந்த கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு படத்தின் கதை மீதும், கதைக்களத்தின் மீதும் ஒரு முழுமையான பார்வையை வழங்கி, படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

    இந்த கேம் ஆப் வடிவமைப்பின் இணை தயாரிப்பாளரும் தொலைநோக்கு பார்வையாளருமான அனீஷ் அர்ஜுன் தேவ் கூறியதாவது..,

    "இந்த கேம் அனைவரும் எளிமையாக விளையாட வேண்டும் என்பதை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் முதல் முறையாக விளையாடுபவர்கள் கூட சிரமமின்றி வெகு எளிதாக இந்த விளையாட்டை அனுபவிக்க முடியும். ஜீவா மற்றும் அர்ஜுன், ஏஞ்சல்ஸ் போன்ற கதாபாத்திரங்கள், மற்றும் எட்வர்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் டெவில்ஸ் போன்ற கதாபாத்திரங்களுடன், இந்த கேம் பார்வையாளர்களைக் கவரும் அதே நேரத்தில், திரைப்படத்தின் தனித்துவமான கதைக்களம் பற்றிய தனித்துவமான பார்வையையும் வழங்கும் என்றார்.

    படத்தின் நாயகன் நடிகர் ஜீவா இது குறித்துக் கூறியதாவது.. "என்னை ஒரு வீடியோ கேமின் ஒரு பகுதியாகப் பார்ப்பது உண்மையில் நம்பமுடியாத அனுபவம். கேமிங் ரசிகனாக இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த முயற்சி அகத்தியா திரைப்படத்தை இளைய தலைமுறையினரிடம் வெகுவாக எடுத்துச் செல்லும். இந்த கேம் திரைப்படம் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் என்றும் நான் நம்புகிறேன்.

     

    படத்தின் முன்னணி நடிகையான ராஷி கண்ணா கூறியதாவது.. ,

    "ஒரு படத்தை விளம்பரப்படுத்த, இது முற்றிலும் புதுமையான வழி. கேமிங் மூலம் மில்லினியல்கள் மற்றும் ஜென் Z ஜி பார்வையாளர்களைக் கவரும் புதிய பொழுதுபோக்கு வழியை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஒரு அருமையான முயற்சியின் அங்கமாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்."

    இந்த பிரமாண்டமான நிகழ்வினில் ஒரு பகுதியாகப் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில், படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. திரை ஆளுமை மேஸ்ட்ரோ இளையராஜாவிடமிருந்து இந்த பாடல் உருவாகியுள்ளது. இளையராஜாவின் இசையில், காலத்தால் அழியாத கிளாசிக் பாடலான "என் இனிய பொன் நிலாவே" பாடலை, லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா வெகு அழகாக மறு உருவாக்கம் செய்துள்ளார்.

     

    வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தலைவரும், தொலைநோக்கு தயாரிப்பாளருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ் கூறியதாவது… "அகத்தியா ஒரு பிரம்மாண்ட ஃபேண்டஸி முயற்சியாகும், இதன் ஒவ்வொரு அம்சமும் உலகளாவிய தரத்துடன் கூடிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக, வடிவமைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டை உருவாக்கும் கருத்தை, எனது நல்ல நண்பரும் கூட்டாளருமான அனீஷ் அர்ஜுன் தேவ் எனக்கு முதலில் முன்மொழிந்தபோது, முதலில் நான் ஆச்சரியப்பட்டேன், அந்த ஐடியாவை முழுமையாகப் புரிந்துகொள்ள ஒரு நாள் தேவைப்பட்டது. இருப்பினும், அதன் புதுமை மற்றும் படத்தைப் பிரபலப்படுத்த அற்புதமான வழி அது தான் என்பதை விரைவாக உணர்ந்தேன், உடனடியாக எனது ஒப்புதலை அளித்தேன். பார்வையாளர்களை மேலும் மகிழ்விப்பதற்காக, குறிப்பாகப் பொங்கல் பண்டிகையின் போது, புதிய தலைமுறைக்காக மறுவடிவமைக்கப்பட்ட "என் இனிய பொன் நிலாவே" என்ற ஐகானிக் பாடலை வெளியிட முடிவு செய்தோம். அகத்தியாவின் மூலம் இந்த சிறப்பான இசைப் பயணத்தைச் சாத்தியமாக்கிய பழம்பெரும் ஆளுமை இசைஞானி இளையராஜா சார் மற்றும் திறமை மிகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உலகத் தரம் வாய்ந்த சினிமா காட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தாமதம், என பட குழுவினர்கள் தெரிவித்துள்ளனர் .
    • பா.விஜய் இயக்கிய அகத்தியா படத்தில் ஜீவா, ராஷி கண்ணா, யோகி பாபு, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஃபேன்டஸி-ஹாரர் த்ரில்லர், திரைப்படம் 'அகத்தியா', ஜனவரி 31 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரும் பிப்ரவரி 28 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்பட குழுவினர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் விரிவான VFX வேலைகளை மேம்படுத்துவதில் தயாரிப்பு குழு கவனம் செலுத்துவதால் தாமதம் ஏற்படுகிறது, இது பார்வையாளர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும், அதுமட்டுமின்றி இது ஒரு புதுவிதமான அனுபவத்தை உறுதி செய்யும். உலகத் தரம் வாய்ந்த சினிமா காட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தாமதம், என பட குழுவினர்கள் தெரிவித்துள்ளனர் .

    பா.விஜய் இயக்கிய அகத்தியா படத்தில் ஜீவா, ராஷி கண்ணா, யோகி பாபு, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும் இப்படம், ஃபேன்டஸி-ஹாரர் விரும்பும் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளது.

    அகத்தியா, ஒரு திரைப்படம், என்பதை விட மேலானது - இது கற்பனை, திகில் மற்றும் ஆழமான, உணர்ச்சிகரமான கதைசொல்லல் ! ஆகியவற்றின் பிடிமான கலவையாகும். கண்கவர் காட்சியமைப்புகள், மனதைக் கவரும் இசையமைப்பு மற்றும் தீவிரமான கதையுடன், அகத்தியா திரைப்படம் சினிமா அனுபவங்களை மறுவரையறை செய்ய தயாராக உள்ளது. பார்வையாளர்கள் புதுவிதமாக மாறுபட்ட கற்பனைக் கூறுதல் மற்றும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அழுத்தமான கதைக்களம் நிரம்பிய ஒரு எட்ஜ்-ஆஃப்-தி-சீட் த்ரில்லரை எதிர்பார்க்கலாம்.

    வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளர் டாக்டர் கே. ஐசரி கணேஷ், மற்றும் WAM India நிறுவனத்தின் தயாரிப்பாளர் அனீஸ் அர்ஜுன் தேவ் தயாரிக்கும் இத்திரைப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்கும் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. காமெடி, திகில் என பல சுவாரசிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பலவிதமான சவால்கள் மற்றும் எல்லைகளை கடந்து திரைப்படத்தின் காட்சி கலைத்திறன் மேலோங்கி நிற்கிறது, அதுமட்டுமின்றி ஒரு லட்சிய ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது. தயாரிப்புக் குழுவினர்களின் உழைப்பால் இப்படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் இணையற்ற பிரம்மாண்டத்தின் காட்சிகளை தங்களுக்கு வழங்க காத்திருக்கிறது.

    ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் மற்றும் உணர்ச்சிகளின் தனித்துவமான கலவையுடன் , பாரம்பரிய வகைகளை தாண்டிய அகத்தியா திரைப்படம் வரும் பிப்ரவரி 28 அன்று திரையிடப்படும் போது மறக்க முடியாத ஒரு அனுபவத்திற்கு தயாராகுங்கள்.

    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அயோக்யா' படத்தின் விமர்சனம்.
    தாய், தந்தையை இழந்த விஷால் தனது சிறுவயதில் ஆனந்த
    ராஜ் சொல்லைக் கேட்டு சிறிய அளவில் திருடி வருகிறார். ஒருமுறை திருட்டு வழக்கில் சிக்கும் விஷாலை, ஆனந்த்ராஜ் வந்து மீட்டுச் செல்கிறார். அதுவரை ஆனந்த்ராஜ் தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருந்த விஷால், காவல் நிலையத்திற்கு சென்று வந்த பிறகு போலீஸாக இருந்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று போலீசாக வேண்டும் என்று நினைக்கிறார்.

    பின்னர் ஆனந்த்ராஜிடம் இருந்து விலகி, படிப்பில் கவனம் செலுத்துகிறார். 10-வது வரை படித்து பின்னர், சில தில்லுமுல்லு செய்து போலீசாகி விடுகிறார். சென்னையில் ரவுடியாக இருக்கும் பார்த்திபன், தனது 4 தம்பிகளை வைத்து கடத்தல் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் இடைஞ்சல் கொடுக்க, பிரச்சனை பண்ணாத போலீஸ் ஒருவரை அனுப்பும்படி பார்த்திபன், மந்திரியான சந்தானபாரதியிடம் கேட்கிறார்.



    இதையடுத்து அந்த பகுதிக்கு போலீஸ் அதிகாரியாக விஷால் செல்கிறார். விஷால், பார்த்திபன் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல், அவர்களிடம் கையூட்டு வாங்கி நலுவுகிறார். இது நேர்மையான போலீஸ் அதிகாரியான கே.எஸ்.ரவிக்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனாலேயே அவர் விஷாலுக்கு மரியாதை கொடுக்க மறுக்கிறார்.

    பார்த்திபன் கொடுத்த ஒரு வீட்டில் தங்கி வரும் விஷாலுக்கு, அவர் வீட்டிற்கு அருகே தங்கியிருக்கும் ராஷி கண்ணாவுடன் காதல் ஏற்படுகிறது. இந்த நிலையில், பூஜா தேவரியா தனது தங்கையை பலாத்காரம் செய்து கொலை செய்த பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார். இதனால் அவரை கடத்தி கொலை செய்ய நினைக்கின்றனர். பூஜா தேவரியாவுக்கு பதில் ராஷி கண்ணாவை பார்த்திபனின் ஆட்கள் கடத்தி செல்கின்றனர்.



    ராஷி கண்ணாவை விஷால் காப்பாற்றுகிறார். பின்னர் பார்த்திபனுக்கும், விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

    கடைசியில், விஷால் தனது போக்கை மாற்றிக் கொண்டு திருந்தினாரா? பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விஷால் படம் முழுக்க காக்கிச்சட்டை அணியாத போலீஸ் அதிகாரியாகவே வலம் வருகிறார். முதல் பாதி முழுவதும் அயோக்யத்தனம் கொண்ட போலீஸ் அதிகாரியாகவும், பின்னர் தனது தவறை உணர்ந்து அவர் செய்யும் தியாகம், அவர் மீதான வெறுப்பை மாற்றும்படியாக அமைகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்க வைத்திருக்கிறார். ராஷி கண்ணா அழகு தேவதையாக வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.



    பார்த்திபன் வில்லத்தனத்திலும், கே.எஸ்.ரவிக்குமார் நேர்மையிலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவரியா, சோனியா அகர்வால், ஆனந்த்ராஜ் அவர்களது கதாபாத்திரங்களை மெருகேற்றியிருக்கின்றனர். யோகி பாபு காமெடியில் ஆங்காங்கு சிரிக்க வைக்கிறார்.

    தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இந்த படம், இளம்பெண் ஒருவருக்கு இளைக்கப்படும் கொடுமையால் தனது அயோக்யதனத்தை மாற்றிக் கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. வெங்கட் மோகன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். படத்தில் இடம்பெறும் வசனங்கள் மட்டும் மிகைப்படுத்தியிருப்பது போல தோன்றுகிறது.

    சாம்.சி.எஸ். இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. விஐ கார்த்திக்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `அயோக்யா' குற்றம் குற்றமே.

    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் இன்று வெளியாக இருந்த `அயோக்யா' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. #Ayogya #Vishal
    ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் `அயோக்யா'. விஷால் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படம் இன்று (மே 10) திரைக்கு வர இருந்தது.

    ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தயாரிப்பாளரின் முந்தைய பட பாக்கியை செலுத்திய பிறகே படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.



    இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், ராதாரவி, ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


    லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை  ஸ்கிரீன் சீன் மீடியோ நிறுவனம் பெற்றுள்ளது. #Ayogya #Vishal #Raashikhanna

    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் `அயோக்யா' படத்தின் முன்னோட்டம். #Ayogya #Vishal #RaashiKhanna
    லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள படம் `அயோக்யா'.

    விஷால் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா நாயகியாக நடித்திருக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவாரியா, சோனியா அகர்வால், சச்சு, அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சனா கான் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

    இசை - சாம்.சி.எஸ்., ஒளிப்பதிவு - வி.ஐ.கார்த்திக், படத்தொகுப்பு - ரூபன், கலை - எஸ்.எஸ்.மூர்த்தி, சண்டைப்பயிற்சி - ராம்-லக்‌ஷ்மன், கதை - வக்கந்தம் வம்சி, ஆடை வடிவமைப்பு - உத்ரா மேனன், பாடல்கள் யுகபாரதி, விவேக், ரோகேஷ், இணை இயக்குநர் - துரை கண்ணன், நடனம் - சோபி, பாஸ்கர், ஒலி - உதயகுமார், நிர்வாக தயாரிப்பு - டி.முருகேசன், தயாரிப்பு மேற்பார்வை - அந்தோணி சேவியர், இணை தயாரிப்பாளர் - பிரவீண் டேனியல், தயாரிப்பு - பி.மது, எழுத்து, இயக்கம் - வெங்கட் மோகன்.



    பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற டெம்பர் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. 

    இதில் விஷால் எதிர்மறை போலீஸ் கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளம்பெண் ஒருவருக்கு இளைக்கப்படும் கொடுமையால் தனது அயோக்யதனத்தை மாற்றிக் கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது.



    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வருகிறது. #Ayogya #Vishal #RaashiKhanna

    அயோக்யா டிரைலர்:

    அயோக்யா படப்பிடிப்பில் முக்கியமான காட்சிக்காக நடிகர் விஷால் தொடர்ந்து 48 மணி நேரம் இடைவிடாமல் நடித்துள்ளார். #Vishal #Ayokya
    லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் மிகப் பிரமாண்ட நீதிமன்றம் செட் ஒன்று போடப்பட்டுள்ளது.  படத்தின் திருப்புமுனையாக அமைய உள்ள மிக முக்கியமான கோர்ட் காட்சியை கடந்த மூன்று நாட்களாக இந்த செட்டில் தொடர் படப்பிடிப்பு நடைபெற்றது.

    நடிகர் ஆர்.பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, நடிகை ராசி கண்ணா, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களோடு, சுமார் 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இணைந்து  நடிக்கும் பிரம்மாண்ட காட்சி படமாக்கப்பட்டது.



    படத்தின் முக்கிய காட்சி என்பதால் இக்காட்சி முழுவதும் நடிகர் விஷால் தொடர்ந்து நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவருடன் இணைந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அவரவர் பகுதியை நடித்துவிட்டு சென்றபோதும், விஷால் மட்டும் சுமார் 48 மணி நேரம் இரவு பகல் பாராமல் நீதிமன்ற காட்சிகள் சிறப்பாக அமைய தொடர் நடிப்பில் ஈடுபட்டார்.

    படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைப்பெற இருக்கிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான ராஷி கண்ணா, அடங்க மறு திரைப்படம் என்னுடைய இமேஜை உடைத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். #RashiKhanna
    இமைக்கா நொடிகள் படத்தில் ஒரு அழகான கதாபாத்திரத்தைத் தொடர்ந்து, தனது இரண்டாவது படமான ஜெயம் ரவியின் 'அடங்க மறு' ரிலீஸுக்கு தயாராகி வருகிறார் ராஷி கண்ணா. தனது ஹீரோ ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் ஆகியோரை பற்றி ராஷி கண்ணா பேசும் போது,

    "நான் ஒரு நடிகையாக விரும்பிய முதல் மற்றும் முன்னணி விஷயம் 'பார்பி கேர்ள்' என்ற இமேஜை உடைத்து, ஒரு நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது தான். அது இந்த படத்தில் நடந்திருக்கிறது. உண்மையில், அடங்க மறுவில் என் கதாபாத்திரம் வெறுமனே வந்து செல்வது போல இல்லாமல், படம் முழுக்க பயணிக்கும் ஒரு முழுமையான, வலுவான கதாபாத்திரம். என்னுடைய முழு திறமைகளை வெளிப்படுத்த உதவிய இந்த படம் எனக்கு மிகவும் திருப்திகரமான அனுபவம். 

    நாயகன் ஜெயம் ரவி பற்றி பேசும்போது, "மிகவும் எளிமையான, அர்ப்பணிப்பு உள்ள மனிதர், கேமரா முன்பாக அவர் அளிக்கும் உருமாற்றம் வியக்கத்தக்கது. இயக்குனர் சொல்லும் விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு, தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தும் அவர், உண்மையில் ஒரு திறமையான, ஆசிர்வதிக்கப்பட்ட நடிகர்" என்றார்.



    இயக்குனர் கார்த்திக் தங்கவேலு பற்றி கூறும்போது, "வழக்கமாக ஆக்‌ஷன் திரில்லர் படங்களில் நாயகன் கதாபாத்திரத்தின் மீது மிகுந்த  அழுத்தத்தை கொண்டிருக்கும். ஆனால் பெண்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரத்தை வழங்குவது தனித்துவமானது. அடங்க மறுவில் என் கதாபாத்திரத்தை மிக அழகாக செய்திருக்கிறார் இயக்குனர் தங்கவேலு" என்றார்.

    திருமதி சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் இந்த அடங்க மறு படத்தை தயாரித்திருக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இந்த அடங்க மறு, டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சாம் சிஎஸ் இசையமைக்க, சத்யன் சூரியன் கேமராவை கையாண்டிருக்கிறார். ரூபன் எடிட்டிங் செய்திருக்கிறார்.
    ×