search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamannaah Bhatia"

    • ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு என கவர்ச்சி நடிகைகள் தனியாக இருந்தனர்.
    • ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சமந்தா இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்திய திரை உலகில் ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு என கவர்ச்சி நடிகைகள் தனியாக இருந்தனர். தமிழ் திரை உலகில் அனுராதா, டிஸ்கோ சாந்தி, சில்க் சுமிதா மேலும் சில நடிகைகள் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

    வருடங்கள் செல்ல செல்ல கதாநாயகிகளே ஒரு பாடலுக்கு நடனம் ஆடத் தொடங்கியதால் கவர்ச்சி நடிகைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு, ஒரு பாடலுக்கு என்று தனியாக நடனமாடும் நடிகைகளே திரை உலகில் இப்போது இல்லை.

    அந்த வகையில் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிரபல கதாநாயகிகளே ஒரு பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். இதற்காக அவர்கள் கோடிக்கணக்கில் சம்பளத்தை பெற்று வருகின்றனர். திரை உலகில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சமந்தா இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு நடிகைகள் வாங்கும் சம்பளம் வருமாறு:-

    சமந்தா:- ரூ 5 கோடி.

    தீபிகா படுகோனே:-ரூ.2 முதல் ரூ.3 கோடி.

    கத்ரீனா கைப்:- ரூ.2 முதல் ரூ.3 கோடி

    தமன்னா:- ரூ.3 கோடி

    மலைக்கா அரோரா:-ரூ.1முதல் ரூ.1.5 கோடி.

    சன்னி லியோன்:- ரூ.1 முதல் ரூ. 1.5 கோடி.

    இவ்வாறு ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகைகளின் சம்பள விபரம் வெளியாகி உள்ளது.

    • பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருகிறார்.
    • ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை தமன்னா வித்தியாசமான ஆடை அணிந்து வந்தார்.

    பிரபல நடிகை தமன்னா, தற்பொழுது அதிக அளவில் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை அவர் காதலித்து வருகிறார்.

    ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள இந்த காதல் ஜோடி, அண்மையில் தான், தங்களது இருதலை காதல் குறித்து அறிவித்தனர். அதன்பிறகு அவ்வப்பொழுது இந்த ஜோடி வெளிநாட்டிற்கு டேட்டிங் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. 

    விரைவில் தமன்னாவிற்கும், விஜய் வர்மாவிற்கும் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் தொடர்ச்சியாக நடிகை தமன்னா திரைப்படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் சுந்தர் சி-யின் அரண்மனை திரைப்படத்தின் நான்காம் பாகத்தில் அவர் நடித்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த சூழலில் வித்தியாசமான ஆடை அணிந்து மணமகளைப் போல் காட்சி அளித்தார் நடிகை தமன்னா.

    இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இப்படி சீரிசாக மாறும் என நினைக்கவே இல்லை.
    • இந்தப் படத்தை செய்யலாம் என நான் நினைத்ததே இல்லை.

    அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்கியுள்ள படம் அரண்மனை 4. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சுந்தர் சி, "அரண்மனை இப்போது நான்காம் பாகத்துடன் வந்துள்ளேன், முதல் பாகம் செய்யும் போது, இது இப்படி சீரிசாக மாறும் என நினைக்கவே இல்லை. அரண்மனை 3 படத்திற்கு கிடைத்த வெற்றி தான் இப்படம் உருவாக காரணம்."

     


    "எப்போதும் நான் பணத்திற்காக இந்தப் படத்தை செய்யலாம் என நான் நினைத்ததே இல்லை. ஒரு நல்ல கதை, ஐடியா கிடைத்ததால் மட்டும் தான் படத்தை துவக்கினேன். இப்படத்திற்கும் ஒரு அட்டகாசமான ஐடியா கிடைத்தது."

    "நம் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் வட இந்தியாவைப் பிடித்த அளவு, அசாம் பக்கம் பிரம்மபுத்திராவை தாண்டிப் போகவில்லை. அது ஏன் எனக் கேட்டு ஆராய்ந்தால், பாக் எனும் ஆவிகளின் சக்தி பற்றிய சுவாரஸ்யமான விஷயம் சிக்கியது. அதை வைத்து, மிக சுவாரஸ்யமான கதையை அரண்மனை 4 இல் செய்துள்ளோம்," என்று தெரிவித்தார்.

    அரண்மனை படத்தின் நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திரக்கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் சுந்தர் சி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, கே.ஜி.எஃப். ராம், VTV கணேஷ், சேசு, ஜேபி, டெல்லி கணேஷ், சந்தோஷ் குமார், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி உட்பட பலர் நடித்துள்ளனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவி 2' படத்தின் முன்னோட்டம்.
    ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் `தேவி 2'.

    பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - அயனங்கா போஸ், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - லெவ்லின் அந்தோணி கான்சால்வ்ஸ், சங்கீத் சத்யநாதன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சில்வா, மனோகர் வர்மா, பாடல்கள் - பிரபுதேவா & கார்கி, வசனம் - கிரேஸி மோகன், விஜய், தயாரிப்பு - டாக்டர் ஐசரி கே.கணேஷ் & ரவீந்திரன், எழுத்து, இயக்கம் - விஜய்.



    படம் குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது,

    "நல்ல விஷயங்கள் எப்போதும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நடக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது. அது இப்போது தேவி 2 படத்தில் நடக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தேவி 2 படம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அவர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான். காமெடி, எமோஷன், காதல், இசை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய கூறுகள் படத்தில் உள்ளன. இந்த கோடையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக நிச்சயம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

    படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    தேவி 2 படத்தின் டிரைலர்:

    விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவி 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Devi2 #Prabhudeva
    விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். 

    நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    ஜி.வி.பிலிம்ஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்.சி.எஸ் இசையமைக்க, அயனன்கா போஸ் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Devi2 #Prabhudeva

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான நந்திதா, விஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் தேவி 2 படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடிக்கவிருக்கிறார். #Devi2 #Prabhudeva #Nandita
    `அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நந்திதா. தொடர்ந்து `எதிர்நீச்சல்', `முண்டாசுபட்டி' படங்களில் நடித்தவர் சமீபத்தில் வெளியான `அசுரவதம்' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து இருந்தார்.

    முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடிக்காமல் இருந்த நந்திதா, முதன்முறையாக பிரபுதேவா நடிக்கும் தேவி 2 படத்தில் நடிக்க உள்ளார். நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் நந்திதா மகிழ்ச்சியாக இருக்கிறார். தேவி படத்தின் முதல் பாகத்தில் பிரபுதேவா ஜோடியாக தமன்னா இந்த படத்திலும் தொடர்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நித்யா மேனன் மற்றும் ஏமி ஜாக்சனுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



    சமீபத்தில் `தேவி 2' படத்தின் படப்பிடிப்பு மொரீசியசில் தொடங்கியதாக பிரபுதேவா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பிரபுதேவாவுடன் மூத்த நடிகை கோவை சரளாவும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவி படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகும் இந்த படத்தையும் இயக்குநர் விஜய் இயக்குகிறார். 

    இது தவிர வைபவ்வுக்கு ஜோடியாக `டாணா' என்ற படத்திலும் நந்திதா நடித்து வருகிறார். இது ஒரு பேண்டசி போலீஸ் படமாக உருவாகி வருகிறது. #Devi2 #Prabhudeva #Nandita

    விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவான தேவி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு மொரீசியசில் துவங்கியிருக்கிறது. #Devi2 #Prabhudeva
    விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான `தேவி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு மொரீசியசில் துவங்கியிருக்கிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரபுதேவா, தேவி 2 படப்பிடிப்புக்காக கோவை சரளாவுடன் மொரீசியஸ் செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது தேவி படத்தின் தொடர்ச்சியா அல்லது முற்றிலும் மாறுபட்ட கதையா என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை. மேலும் படத்தில் தமன்னா நடிப்பதும் உறுதியாகவில்லை.

    பிரபுதேவா நடிப்பில் அடுத்ததாக `யங் மங் சங்', `சார்லி சாப்ளின்-2' உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கின்றன. 

    பிரபுதேவா தற்போது பொன் மாணிக்கவேல், தேள், ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தியிலும் பிரபுதேவாவுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் பிரபுதேவா படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வருவதாக கூறப்படுகிறது. #Devi2 #Prabhudeva

    தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவராக வலம் வரும் தமன்னா பிரபலங்களின் வாழ்க்கைப் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். #Tamannaah #SrideviBiopic
    தமிழ் சினிமாவில் தற்போது வாழ்க்கை வரலாறு படங்கள் அதிகமாக உருவாகி வருகின்றன. அந்த வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க நடிகை தமன்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    தமிழ், இந்தி படஉலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அதற்கான நடிகர்-நடிகையர் தேர்வும் நடந்து வருகிறது. ஸ்ரீதேவி கணவர் போனி கபூரும், ஸ்ரீதேவி வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்கிறார்.

    இந்த நிலையில் ஸ்ரீதேவி வாழ்க்கை படத்தில் நடிக்க நடிகை தமன்னா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமன்னா கூறும்போது, 



    “சமீப காலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகி வருகின்றன. அந்த படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. நானும் அதுபோன்ற வாழ்க்கை வரலாற்று படமொன்றில் நடிக்க ஆசைபடுகிறேன். நடிகை ஸ்ரீதேவி, சானியா மிர்சா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது” என்றார்.

    சமீபத்தில் வெளியான ‘நடிகையர் திலகம்’ படத்தில் பழம்பெரும் நடிகை சாவித்ரியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Tamannaah #SrideviBiopic

    ×