கோமாதாவின் சிறுநீரை விற்றுகூட வாழலாம்... தமன்னாவின் 'ஒடேலா 2' படத்தின் டிரெய்லர் வெளியானது

மும்பையில் உள்ள பாபுல்நாத் சிவன் கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார். இப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோமாதாவின் சிறுநீரை விற்றுகூட வாழலாம்... தமன்னாவின் 'ஒடேலா 2' படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார்.

தமன்னா தற்போது ஒடேலா 2 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ஒடேலா 2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது . இப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரெய்லரில் இடம் பெற்றுள்ள ''நாம் நிற்பதற்கு தேவை பூமிமாதா, நாம் வாழ்வதற்கு தேவை கோமாதா; இதில் நீங்கள் வாழ கோமாதாவை கொல்ல வேண்டும் என்றில்லை, அதன் சிறுநீரை விற்றுகூட வாழலாம்" என்ற வசனம் பேசுபொருளாகியுள்ளது.

ஒடேலா 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு மும்பையில் உள்ள பாபுல்நாத் சிவன் கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com