என் மலர்
நீங்கள் தேடியது "நடிகை தமன்னா"
- தமிழ், தெலுங்கு சினிமாவில் இருபது ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா பாட்டியா,
- இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் இருபது ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா பாட்டியா, தன் தொடக்க காலத்திலிருந்து ஒப்பந்தங்களில் 'நோ-கிஸ்' என்ற விதிமுறையை கடைபிடித்து வந்தவர். அதாவது அவர் நடிக்கும் எந்த படங்களிலும் முத்த காட்சிகள் இடம் பெற்றிருக்காது. அப்படி இருந்தாலும் அவர் நடிக்க மாட்டேன் என்ற ஒப்பந்துத்துடன் தான் படத்தில் கமிட்டாவார்.
ஆனால், கடந்த 2023 ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸின் லஸ்ட் ஸ்டோரிஸ் வலைத் தொடர் மூலம் அந்த விதிமுறையை முறித்தார்.. அதில் அவர் முத்த மற்றும் நெருக்கமான காட்சிகளில் ஈடுப்பட்டிருப்பார்.
அதை தொடர்ந்து வந்த சில வெப் தொடர்களிலும் தொடர்ச்சியாக செக்ஸியான காட்சிகளில் நடித்தார். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
சமீபத்தில், ஹிந்தி நிகழ்ச்சி லல்லன்டாப் பேசிய தமன்னா, "நான் நடிகையாக சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டதால், சவாலான கதாபாத்திரங்களை, வலுவான படங்களை தவறவிட்டேன் என்ற உணர்வு வந்தது. அந்த காரணத்தால் தான் எனக்கு நான் விதித்துக் கொண்ட 'நோ-கிஸ்'கண்டிஷனை உடைக்க முடிவு செய்தேன்" என்று கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது இப்படிப்பட்ட செக்ஸி மற்றும் அந்தரங்க காட்சிகள் அனைத்தும் 100% போலியானவை, முழுவதும் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை படப்பிடிப்பில் intimacy coach இருப்பார், அவர் நடிகர்களுக்கு எந்த இடங்களைத் தொடக்கூடாது என முன்கூட்டியே விளக்குவார். அவர் கூறியது படி தான் நடிப்போம், நாங்கள் அனைத்தையும் படக்குழுவினர் இடையே ஒரு நடனம் ஆடுவது போல் பயிற்சியாளர் சொன்ன ஸ்டெப்சை பின்பற்றுவோம்" என்று தமன்னா கூறினார்.
இப்போது, தமன்னா தனது ரசிகர்களிடம் "கதையின் தேவைக்கேற்ப, நம்பகத்தன்மையுடன் நடித்தால் தான் உண்மையான நடிகை என நினைக்கிறேன்" எனும் வலுவான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- மும்பையில் உள்ள பாபுல்நாத் சிவன் கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.
- இப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார்.
தமன்னா தற்போது ஒடேலா 2 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ஒடேலா 2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது . இப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரெய்லரில் இடம் பெற்றுள்ள ''நாம் நிற்பதற்கு தேவை பூமிமாதா, நாம் வாழ்வதற்கு தேவை கோமாதா; இதில் நீங்கள் வாழ கோமாதாவை கொல்ல வேண்டும் என்றில்லை, அதன் சிறுநீரை விற்றுகூட வாழலாம்" என்ற வசனம் பேசுபொருளாகியுள்ளது.
ஒடேலா 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு மும்பையில் உள்ள பாபுல்நாத் சிவன் கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.
- தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் பகிர்வு.
- புகைப்படங்களுடன் "ஹர ஹர மகாதேவ்" என அவர் பதிவு.
உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.
இதுதொடர்பான புகைப்படங்களை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுடன் "ஹர ஹர மகாதேவ்" என அவர் பதிவிட்டுள்ளார்.
தமன்னாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் ஹர ஹர மகாதேவ் என பதிவிட்டு வருகின்றனர்.
- விலை உயர்ந்த ஜூகு தாரா பகுதியில் அலுவலகம் அமைந்துள்ளது.
- ரூ,7.84 கோடிக்கு அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த வருடம் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா ஆடிய குத்தாட்டம் ரசிகர்களை கவர்ந்தது.
இந்தியில் பிசியாக நடித்து வரும் தமன்னா தற்போது மும்பையில் 6 ஆயிரத்து 65 சதுர அடி கொண்ட அலுவலகத்தை ரூ,18 லட்சம் மாத வாடகைக்கு எடுத்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு வாடகை ஒப்பந்தம் போட்டு இருக்கிறார். இதற்காக ரூ,75 லட்சம் செக்யூரிட்டி டெபாசிட் செலுத்தி உள்ளார். விலை உயர்ந்த ஜூகு தாரா பகுதியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
அதுமட்டுமன்றி தமன்னா அந்தேரி வீர் தேசாய் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனக்கு சொந்தமான மூன்று வீடுகளை வங்கியில் ரூ.7.84 கோடிக்கு அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கிறார். இதற்காக ரூ,4.70 லட்சத்துக்கு முத்திரை கட்டணமும் செலுத்தி இருக்கிறார்.
தமன்னா தற்போது ஜான் அபிரகாமுடன் வேதா படத்திலும் ஸ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ் ஆகியோருடன் ஸ்த்ரீ 2 படத்திலும் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நான் ஆடிய ஓரு பாடல் அந்த படத்தின் வெற்றிக்கு உதவி செய்தால் மகிழ்ச்சிதான்.
- அதற்காக நான் குத்தாட்ட நடிகை என்ற ரீதியில் தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி என கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் ஆடுகிறார்.
ஜெயிலர் படத்தில் காவாலயா பாடலுக்கு தமன்னா ஆடிய குத்தாட்டம் ரசிகர்களை கவர்ந்தது. அந்த பாடல் சமூக வலைத்தளத்தையும் உலுக்கியது.
இதுபோல் சமீபத்தில் ஸ்த்ரி 2 இந்தி படத்திலும் ஆஜ் கிராத் குத்துப்பாடலில் தமன்னா அற்புதமாக நடனம் ஆடி இருந்தார். இந்த படம் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
தமன்னாவின் குத்தாட்டம் இடம்பெற்றால் அந்த படம் வெற்றி பெறும் என்ற சென்டிமெண்ட் திரையுலகில் பரவி உள்ளது. இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பணப்பெட்டியுடன் தமன்னா வீடு முன்னால் திரண்டு தங்கள் படங்களில் ஆட அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
இதனால் கடுப்பான தமன்னா கூறும்போது, "நான் ஆடிய ஓரு பாடல் அந்த படத்தின் வெற்றிக்கு உதவி செய்தால் மகிழ்ச்சிதான்.
அதற்காக நான் குத்தாட்ட நடிகை என்ற ரீதியில் தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி? ஜெயிலர் ரஜினி படம் என்பதால் குத்தாட்டம் ஆடினேன். ஸ்த்ரீ 2 பட இயக்குனர் அமர் கவுஷிக் எனது நண்பர் என்பதால் அவர் கேட்டதும் மறுக்க முடியாமல் ஆடினேன்.
தொடர்ந்து அதுபோன்று பாடல்களில் ஆட நான் ஒன்றும் குத்தாட்ட நடிகை அல்ல'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கிரிப்டோகரன்சி நிறுவன திறப்பு விழாவில் நடிகை தமன்னா, காஜல் அகர்வால் பங்கேற்றுள்ளனர்.
- அதற்காக தமன்னாவுக்கு ரூ.25 லட்சமும், காஜலுக்கு ரூ.18 லட்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ரூ.50 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் நடிகை தமன்னா மற்றும் காஜல் அகர்வாலுக்கு சம்மன் அனுப்பி விசாரணை அழைக்க புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் சுமார் ரூ.2 கோடியே 40 லட்சம் ரொக்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமா நடிகை தமன்னா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பங்கேற்ற தொடக்க விழாவுடன், கோவையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2022-ம் ஆண்டு இந்த கிரிப்டோ கரன்சி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 3 மாதங்களுக்குப் பிறகு சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால் பங்கேற்றுள்ளார்.
முதலீடு செய்தவர்களின் தொகைக்கு ஏற்ப, நடிகை காஜல் அகர்வாலை வைத்து 100 நபர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியுள்ளனர். அதேபோல, மும்பையில் கப்பலில் மிகப்பெரிய விழாவை நடத்தி, அதன்மூலம் ஆயிரக்கணக்கானோரிடம் பணத்தை திரட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நிதிஷ் ஜெயின்,36, அரவிந்த் குமார்,40, ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கிரிப்டோகரன்சி மோசடிதொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். துவக்க விழா மற்றும் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று விளம்பரப்படுத்தியதால், இருவரும் பங்குதாரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கிரிப்டோகரன்சி நிறுவன திறப்பு விழாவில் பங்கேற்றதற்காக தமன்னாவுக்கு ரூ.25 லட்சமும், காஜலுக்கு ரூ.18 லட்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.






