வங்கியில் ரூ.7.84 கோடிக்கு 3 வீடுகளை அடமானம் வைத்த தமன்னா

விலை உயர்ந்த ஜூகு தாரா பகுதியில் அலுவலகம் அமைந்துள்ளது.ரூ,7.84 கோடிக்கு அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கிறார்.
வங்கியில் ரூ.7.84 கோடிக்கு 3 வீடுகளை அடமானம் வைத்த தமன்னா
Published on

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த வருடம் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா ஆடிய குத்தாட்டம் ரசிகர்களை கவர்ந்தது.

இந்தியில் பிசியாக நடித்து வரும் தமன்னா தற்போது மும்பையில் 6 ஆயிரத்து 65 சதுர அடி கொண்ட அலுவலகத்தை ரூ,18 லட்சம் மாத வாடகைக்கு எடுத்துள்ளார்.

5 ஆண்டுகளுக்கு வாடகை ஒப்பந்தம் போட்டு இருக்கிறார். இதற்காக ரூ,75 லட்சம் செக்யூரிட்டி டெபாசிட் செலுத்தி உள்ளார். விலை உயர்ந்த ஜூகு தாரா பகுதியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.

அதுமட்டுமன்றி தமன்னா அந்தேரி வீர் தேசாய் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனக்கு சொந்தமான மூன்று வீடுகளை வங்கியில் ரூ.7.84 கோடிக்கு அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கிறார். இதற்காக ரூ,4.70 லட்சத்துக்கு முத்திரை கட்டணமும் செலுத்தி இருக்கிறார்.

தமன்னா தற்போது ஜான் அபிரகாமுடன் வேதா படத்திலும் ஸ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ் ஆகியோருடன் ஸ்த்ரீ 2 படத்திலும் நடித்து வருகிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com