என் மலர்tooltip icon

    OTT

    தமன்னா நடித்த Do You Wanna Partner வெப் தொடரின் ரிலீஸ் அறிவிப்பு!
    X

    தமன்னா நடித்த Do You Wanna Partner வெப் தொடரின் ரிலீஸ் அறிவிப்பு!

    • Do You Wanna Partner தொடரில் தமன்னா மற்றும் டையனா பெண்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    பாலிவுட் நடிகைகள் தமன்னா பாடியா மற்றும் டையனா பெண்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும், அமேசான் பிரைம் வீடியோவின் புதிய வெப் சீரிஸ் "Do You Wanna Partner" ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வெப் தொடர், கரண் ஜோஹர், அதார் பூனாவாலா மற்றும் அபூர்வ மேத்தா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. மேலும் சோமன் மிஸ்ரா மற்றும் ஆர்சித் குமார் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

    இந்த சீரிஸ் உலகளாவிய ரீதியில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இது ஒரு ஹிந்தி காமெடி டிராமா, இரு பெண் நண்பர்கள் – ஆண் ஆதிக்கம் செலுத்தும் பீர் தயாரிக்கும் மதுபான துறையில் தங்களுக்கே உரிய ஸ்டார்ட்அப்பை உருவாக்க முயலும் பயணத்தை மையமாகக் கொண்டது.

    இத்தொடரை உருவாக்கியவர்கள் கோங்கோபாத்யாய் & நிஷாந்த் நாயக் மற்றும் இயக்கியவர் காலின் டி'குன்ஹா

    முக்கிய நடிகர்களானஜாவேத் ஜாஃப்ரி, நகுல் மேத்தா, நீரஜ் கபி, ஷ்வேதா திவாரி, சுஃபி மோட்டிவாலா, ரன்விஜய் சிங்கா இதில் நடித்துள்ளனர்.

    இரண்டு பெண் நண்பிகளின் சுவாரஸ்யமான தொழில் பயணத்தை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளுடன் கலந்த "Do You Wanna Partner" சீரிஸ், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×