என் மலர்
நீங்கள் தேடியது "Divya Spandana"
- தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு கேலிக்கூத்தாக இருந்தது.
- தேர்தல் ஆணையம் உண்மையான பிரச்சினையைப் பற்றி கூட பேசவில்லை.
குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா. கர்நாடகாவை சேர்ந்த ரம்யா முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் குறித்து ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரம்யா, "ராகுல் காந்தி சொல்வது சரியானது. தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு கேலிக்கூத்தாக இருந்தது. அவர்கள் உண்மையான பிரச்சினையைப் பற்றி கூட பேசவில்லை. வாக்காளர் பட்டியலில் ஏன் போலி வாக்காளர்கள் உள்ளனர், அவர்களை நீக்க அவர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் மற்றும் பீகார் SIR சர்ச்சை தொடர்பாக ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்ததுகுறிப்பிடத்தக்கது.
- மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா நியமனம்
- 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெயிட் 2 மற்றும் ஒடேலா 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமன்னா கடைசியாக தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
இந்நிலையில் பிரபல சோப் நிறுவனமான மைசூர் சேண்டல் நடிகை தமன்னாவை அவர்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதற்கு இதை கன்னட மக்கள் கடும் எதிர்த்து தெரிவித்து, " ஏன் கன்னட திரையுலகில் திறமைக்கு பஞ்சமா?உள்ளூர் நடிகையை நியமிக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அம்மாநில அமைச்சர் எம்.பி பாட்டில் " சோப்பை கர்நாடகாவிற்கு அப்பாலும் கொண்டு செல்லவே இந்த முடிவு" என தெரிவித்தார்.
இந்நிலையில், கர்நாடக அரசின் மைசூர் சாண்டல் சோப் பிராண்ட் அம்பாசிடராக ரூ.6.2 கோடிக்கு நடிகை தமன்னா நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் எம்.பியும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திவ்யா ஸ்பந்தனா தனது இன்சாட்க்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "ஒரு பொருள் தரமானதாக இருந்தால் அது தானாகவே விற்பனையாகும். மைசூர் சாண்டல் சோப்பு வளமான பாரம்பரியம் மற்றும் நிலையான தரத்தை கொண்டது.
இந்த சோப்பு ஏற்கனவே வாடிக்கையாளர் மத்தியில் பெரும் புகழையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. ஒரு பொருளை சந்தைப்படுத்த எண்ணிலடங்கா வழிகள் உள்ளன. ஒவ்வொரு கன்னடரும் மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடர் தான்" என்று பதிவிட்டுள்ளார்.
- தர்ஷனுக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக வெளியில் காட்டப்படுகிறது.
- தர்ஷனை கைது செய்த காவல்துறையின் நடவடிக்கைகளை திவ்யா பாராட்டியிருந்தார்
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் வழக்கம் கொண்டவர் என்று பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார்.
மேலும், "தர்ஷனுக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக வெளியில் காட்டப்படுகிறது. ஆனால் அப்படியொன்றும் அவருக்கு செல்வாக்கு இல்லை. அவர் தேர்தலில் பிரசாரம் செய்த வேட்பாளர்கள் தோல்வியைத்தான் தழுவியுள்ளார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக தர்ஷனை கைது செய்த காவல்துறையின் நடவடிக்கைகளை திவ்யா பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தொழிலதிபர் ஒருவருடன் திவ்யாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகின.
- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என திவ்யா ஸ்பந்தனா பதிவிட்டுள்ளார்.
கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் திவ்யா ஸ்பந்தனா. 'சான்டல்வுட் குயின்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட அவர், திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் 2013-ஆம் ஆண்டு மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். பின்னர் அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்.
அண்மையில் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கப்போவதாக அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே இவருக்குத் திருமணம் ஆகப்போகிறது என்று அடிக்கடி தகவல்கள் பரவுவது வழக்கம். அந்தவகையில் தொழிலதிபர் ஒருவருடன் திவ்யாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "ஊடகங்கள் எனக்குப் பலமுறை திருமணம் நடத்தி வைத்துவிட்டன. எத்தனை முறை என்பதை நானே மறந்துவிட்டேன். நான் திருமணம் செய்து கொண்டால், நானே உங்களிடம் தெரிவிப்பேன். தயவுசெய்து, அதிகாரப்பூர்வமற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எனக்கு திருமணம் நடக்கும்போது நானே அதனை சொல்வேன்.
- தயவு செய்து அதிகாரப்பூர்வமற்ற தரப்பினரிடம் இருந்து வரும் வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்.
பிரபல கன்னட நடிகையான திவ்யா ஸ்பந்தனா தமிழில் ரம்யா என்ற பெயரில் சிம்பு ஜோடியாக குத்து என்ற படத்தில் அறிமுகமானார். தனுசின் பொல்லாதவன், ஜீவாவுடன் சிங்கம்புலி, அர்ஜுனுடன் கிரி, சூர்யாவின் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். கன்னடத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் பதவி வகித்தார்.
இந்த நிலையில் ரம்யாவுக்கு டெல்லியை சேர்ந்த தொழில் அதிபருடன் திருமணம் முடிவாகி இருப்பதாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
இதனால் காட்டமான ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். எத்தனை முறை இதை செய்தனர் என்று தெரியவில்லை.
எனக்கு திருமணம் நடக்கும்போது நானே அதனை சொல்வேன். தயவு செய்து அதிகாரப்பூர்வமற்ற தரப்பினரிடம் இருந்து வரும் வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்'' என்று கூறியுள்ளார்.
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவருமான, ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா, கடந்த சில தினங்களுக்கு முன் டுவிட்டர் பதிவில் ஒரு போட்டோஷாப் புகைப்படத்தை பதிவிட்டார்
அதில், ’பிரதமர் மோடி தன் மெழுகு சிலை மீது தானே திருடன்’ என எழுதிக் கொள்வது போல் உள்ளது. இந்த சர்ச்சை புகைப்படத்தை பார்த்த உத்தரப்பிரதேச வழக்கறிஞர் சையது ரிஷ்வான் அகமது என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோமதிநகர் போலீசார் ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில், நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான் ஆகியோர் நடிக்கும், ' தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' என்ற படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்தியாவை ஆட்சி புரிந்த இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக கடற்கொள்ளையர்கள் போர் நடந்தது குறித்து விளக்கும் படம் இதுவாகும்.
இந்த படத்தில் நடிகர் அமீர்கான் அனைவரையும் ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஒரு காட்சியில் அவர் நம்பிக்கை துரோகம் என்பது எனது சுபாவம் என்று கூறுவார். இதனை வைத்து ரம்யா மீண்டும் டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
அமீர்கான் புகைப்படத்தை பதிவிட்டு, ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்கு மோடி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என டுவிட்டரில் விளாசி உள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. #DivyaSpandana #PMModi
PM Modi to Hindustan Aeronautics Limited.#ModiAmbaniRafaleBlockbuster
— Divya Spandana/Ramya (@divyaspandana) September 27, 2018
#ThugsOfHindostanTrailerpic.twitter.com/tSrlrhkSyY






