எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்து விட்டார்கள்- வதந்தியால் கடுப்பான நடிகை திவ்யா ஸ்பந்தனா

எனக்கு திருமணம் நடக்கும்போது நானே அதனை சொல்வேன்.தயவு செய்து அதிகாரப்பூர்வமற்ற தரப்பினரிடம் இருந்து வரும் வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்.
எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்து விட்டார்கள்- வதந்தியால் கடுப்பான நடிகை திவ்யா ஸ்பந்தனா
Published on

பிரபல கன்னட நடிகையான திவ்யா ஸ்பந்தனா தமிழில் ரம்யா என்ற பெயரில் சிம்பு ஜோடியாக குத்து என்ற படத்தில் அறிமுகமானார். தனுசின் பொல்லாதவன், ஜீவாவுடன் சிங்கம்புலி, அர்ஜுனுடன் கிரி, சூர்யாவின் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். கன்னடத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் பதவி வகித்தார்.

இந்த நிலையில் ரம்யாவுக்கு டெல்லியை சேர்ந்த தொழில் அதிபருடன் திருமணம் முடிவாகி இருப்பதாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

இதனால் காட்டமான ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். எத்தனை முறை இதை செய்தனர் என்று தெரியவில்லை.

எனக்கு திருமணம் நடக்கும்போது நானே அதனை சொல்வேன். தயவு செய்து அதிகாரப்பூர்வமற்ற தரப்பினரிடம் இருந்து வரும் வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்'' என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com