என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஒரே மேடையில் திரண்ட 30 இயக்குநர்கள் - பறந்து போ பட விழா
    X

    ஒரே மேடையில் திரண்ட 30 இயக்குநர்கள் - பறந்து போ பட விழா

    • பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்பட பலர் நடித்துள்ளனர்.
    • வருகிற ஜூலை 4-ந் தேதி படம் திரைக்கு வருகிறது.

    பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற ஜூலை 4-ந் தேதி படம் திரைக்கு வருகிறது.

    சுதந்திரத்தை விரும்பும் குழந்தை தனது பெற்றோரையும் சுதந்திரத்தை நோக்கி அழைத்து செல்லும் கதைகளத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் சுமார் 30 இயக்குனர்கள் ஒன்று போல் திரண்டு படத்தை வாழ்த்தி பேசினர். விழாவில் பங்கேற்ற அனைவரையும் சூரியகாந்தி பூ கொடுத்து படக்குழுவினர் வரவேற்றனர்.

    இயக்குனர் விக்ரமன், பாலா, வெற்றிமாறன், சுரேஷ் காமாட்சி, நித்திலன், புஸ்கர் காயத்ரி, பாண்டியராஜ், ஏ.எல்.விஜய், பாலாஜி சக்திவேல், யூகி சேது, கஸ்துரி ராஜா, சசி, அழகம் பெருமாள், மீரா கதிரவன், அஸ்வத் மாரிமுத்து, மந்திரமூர்த்தி, ரவிக்குமார், கணேஷ் கே, மைக்கேல் ராஜா, சுரேஷ் மாரி, ரஞ்சித் ஜெயக்கொடி, ஜெயகுமார், விஷால், ராம்குமார், அபிஷன், அருண் ராஜா காமராஜ், இயன் பாரி உள்பட 30-க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் ஒன்றாக விழாவில் அணிவகுத்து வாழ்த்தினர்.

    Next Story
    ×