யுவன் குரலில் `கஷ்டம் வந்தா' பாடல் வெளியீடு- வீடியோ

'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
யுவன் குரலில் `கஷ்டம் வந்தா' பாடல் வெளியீடு- வீடியோ
Published on

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

இப்படத்திற்கு, யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலான `கஷ்டம் வந்தா' பாடல் இன்று வெளியாகி உள்ளது. இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com