search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yuvan sankar raja"

    • கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட உருவாக்கத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியானது
    • ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

    இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் 'ஸ்டார்' பட உருவாக்கத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியானது

    சின்னத்திரையில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த கவின், லிப்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். கவினின் இரண்டாவது திரைப்படமான டாடா மாபெரும் வெற்றி பெற்றது.

    இதையடுத்து கவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஸ்டார். ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ப்ரோமோ வெளியானது.

    இந்நிலையில், ஸ்டார் திரைப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடீயோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இத்திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடீயோ மற்றும் பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது என்சி22 படத்தை இயக்கி வருகிறார்.
    • இவரின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பா ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.


    என்சி22

    இப்படத்தின் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    பிரேம்ஜி - யுவன் ஷங்கர் ராஜா - வெங்கட் பிரபு

    இந்நிலையில், நடிகர் பிரேம்ஜிக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புதிய மொபைல் போனை பரிசளித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ள பிரேம்ஜி, " எனக்கு பரிசளித்ததற்கு நன்றி என் இசைக்குரு யுவன் ஷங்கர் ராஜா.. லவ் யூ.." என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு, 'அப்போ எனக்கு பரிசு இல்லை' என்று கவலையுடன் பதிவிட்டுள்ளார். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா 'உங்களுக்காக சில இசைகளை குக் செய்து வருகிறேன்' என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • 'லவ் டுடே' படத்தின் மூன்றாவது பாடல் சமீபத்தில் வெளியானது.
    • இது குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    லவ் டுடே

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 'லவ் டுடே' படத்தின் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலான "பச்சை இலை" சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. எனினும் இப்படலின் வரிகள் போதைப் பொருட்களை ஊக்குவிப்பது போல் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.


    யுவன் ஷங்கர் ராஜா

    அதில், "பச்சை இலை பாடலை நீங்கள் அனைவரும் என்ஜாய் பண்ணிருப்பீங்கனு நம்புறேன். இது ஜாலியான தருணத்திற்காக உருவாக்கப்பட்ட ஃபன்னாண பாடல். நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதில் இருந்து விலகி இருங்கள். இது எனது வேண்டுகோள்" என்று குறிப்பிட்டுள்ளார். 


    • இளம் இதயங்களை காப்போம் என்ற பெயரில் குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.
    • இத்திரைப்பட திருவிழாவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தொடங்கி வைத்தார்.

    இதய ஆரோக்கிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக உலக இதய தின அனுசரிப்பு நாளன்று இளம் இதயங்களை காப்போம் என்ற பெயரில் ஒருமாத காலம் நடைபெறும் பரப்புரை திட்டமானது செப்டம்பர் 10-ம் தேதியன்று தொடங்கப்பட்டது. இச்செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்வமுள்ள திரைப்பட படைப்பாளிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்பதற்கு ஒரு குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.


    இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை நடுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு பிரிவினராலும் வழங்கப்படும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.100,000 இரண்டாவது பரிசாக ரூ.50,000 மற்றும் மூன்றாவது பரிசாக ரூ.25,000 பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

    இத்திரைப்பட திருவிழாவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தொடங்கி வைத்தார். திரைப்பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் திரைப்பட எடிட்டர் ஆர்.கே. செல்வா ஆகியோர் இத்தொடக்கவிழா நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.


    இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது, "சிந்தனையை தூண்டிவிடுகின்ற, சிறப்பான குறும்படங்களின் மூலம் ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக வளர்ந்து வரும் திரைப்படைப்பாளிகளின் படைப்புகளைப் பார்க்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன். உங்களது முழு திறனையும், ஆற்றலையும், அறிவையும் சிறப்பாக வெளிப்படுத்துமாறு ஒவ்வொருவரையும் ஊக்குவிக்க நான் விரும்புகிறேன்.

    இளவயதினர் மத்தியில் இதயநோய் பாதிப்பு அச்சுறுத்தும் விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, இளவயதிலேயே இதயநோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட வேண்டும். சமூக விழிப்புணர்விற்கான இந்த சிறப்பான செயல்திட்டத்தை நிஜத்தில் செயல்படுத்த உதவியிருக்கின்ற அனைவருக்கும் எனது நன்றியினை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்," என்று பேசினார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
    • இவர் கிட்டத்தட்ட 150-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. 1997-ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


    யுவன் சங்கர் ராஜா

    25 ஆண்டுகளை கடந்து சினிமா துறையில் பயணிக்கும் யுவன் ஷங்கர் ராஜா தற்போது 'லத்தி', 'நானே வருவேன்', 'லவ் டுடே' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.


    யுவன் சங்கர் ராஜா

    சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா இன்று (03.09.2022) நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பட்டம் பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா.
    • இவர் யுவன் சங்கர் ராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா, இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


    இளையராஜா

    இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் இளையராஜா இணையத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதி, "ஒரு காலக்கட்டத்தில் வந்து ஆழியாறு டேம் சென்று கம்போஸ் செய்வது கொஞ்ச காலம் பழக்கமாக இருந்தது. நிறைய படங்களுக்கு ஆழியாறு டேம் கெஸ்ட் ஹவுஸில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி, ஒரு நான்கைந்து படங்களுக்கு கம்போஸ் செய்வது என்று முடிவு செய்து செல்வோம்.

    அந்த மாதிரி ஒரு கம்போஸிங்கிற்கு இயக்குனர் மகேந்திரனும், கேஆர்ஜியும் என்னை அழைத்துச் சென்றனர். தயாரிப்பாளர் கேஆர்ஜிக்கு கோவையில் வீடு இருப்பதால், அவர் அங்கு சென்று வருவார். அப்படி சென்றவர் மாலையில் வந்து, என்னுடைய மனைவிக்கு பிரசவம் நடந்துள்ளதாகவும், மகன் பிறந்திருப்பதாகவும் சொன்னார். அப்போது சந்தோஷமாக இருந்தது.


    இளையராஜா

    என்னுடைய மனைவி பிரசவத்தின்போதுகூட கம்போஸிங் செய்வதென்றுதான் இருந்திருக்கேனே தவிர, மனைவியை பக்கத்தில் இருந்து பார்த்துக்கவே இல்லை. எனது மனைவியும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    மகன் பிறந்திருப்பதாக வந்து செய்தி சொன்ன நேரத்தில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அன்று கம்போஸ் செய்த பாடல் தான் ரஜினிகாந்த் நடித்த ஜானி படத்தின் சினோரீட்டா என்ற பாடல். யுவன் ஹேப்பி பர்த்டே யுவன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது.
    • காமன்வெல்த் போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கின. 72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவில் 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த போட்களின் முடிவில் ஆஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் (67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம்) முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் (57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம்) இரண்டாவது இடத்தை பிடித்தது. கனடா 92 பதக்கங்களுடன்(26 தங்கம்,32 வெள்ளி, 34 வெண்கலம்) மூன்றாவது இடத்தில் இருந்தது. இந்தியா 61 பதக்கங்களை (22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம்) வென்று நான்காவது இடத்தை கைப்பற்றியது.


    காமன்வெல்த்

    இந்நிலையில் காமன்வெல்த் போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அந்த கலை நிகழ்ச்சியில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான 'அவன் இவன்' படத்தில் இடம்பெற்ற 'டியா டியா டோலே' பாடலுக்கு மூன்று பெண்கள் நடனமாடினர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

    • கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன்.
    • இவரின் அடுத்த படத்திற்கு லவ் டுடே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தனது முதல் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஜெயம் ரவியுடன் இணைந்து யோகிபாபு, காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    லவ் டுடே

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. விஜய் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தின் டைட்டிலை இப்படத்திற்கு சூட்டியுள்ளனர்.

    இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் 'சாசிட்டாலே' வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா குரலில் காதல் பாடலாக உருவாகியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • டெடி படத்தைத் தொடர்ந்து சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகும் படம் கேப்டன்.
    • இந்த படத்தில் டி இமானுடன் பிரபல இசையமைப்பாளர் இணைந்துள்ளார்.

    நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக்டிக்டிக், டெடி போன்ற படங்களை இயக்கிய சக்திசவுந்தர ராஜன் தற்போது இயக்கியுள்ள படம் 'கேப்டன்'. ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், காவ்யா ஷெட்டி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்கிறார். டி. இமான் இசையமைக்கிறார். 'கேப்டன்' திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.


    டி.இமானுடன் யுவன் சங்கர் ராஜா
    டி.இமானுடன் யுவன் சங்கர் ராஜா

    இந்நிலையில்,'கேப்டன்' திரைப்படத்திற்காக மதன் கார்க்கி எழுதியுள்ள மெலோடி பாடல் ஒன்றை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இந்த பாடல் விரைவில் வெளியாகும் என்று டி.இமான் தனது சமுக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    ×