யுவன் பிறந்த மகிழ்ச்சியில் கம்போஸ் செய்த சினோரீட்டா பாடல்.. கவனம் ஈர்க்கும் இளையராஜா பதிவு..

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா.இவர் யுவன் சங்கர் ராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இளையராஜா
இளையராஜா
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா, இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜா

இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் இளையராஜா இணையத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதி, "ஒரு காலக்கட்டத்தில் வந்து ஆழியாறு டேம் சென்று கம்போஸ் செய்வது கொஞ்ச காலம் பழக்கமாக இருந்தது. நிறைய படங்களுக்கு ஆழியாறு டேம் கெஸ்ட் ஹவுஸில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி, ஒரு நான்கைந்து படங்களுக்கு கம்போஸ் செய்வது என்று முடிவு செய்து செல்வோம்.

அந்த மாதிரி ஒரு கம்போஸிங்கிற்கு இயக்குனர் மகேந்திரனும், கேஆர்ஜியும் என்னை அழைத்துச் சென்றனர். தயாரிப்பாளர் கேஆர்ஜிக்கு கோவையில் வீடு இருப்பதால், அவர் அங்கு சென்று வருவார். அப்படி சென்றவர் மாலையில் வந்து, என்னுடைய மனைவிக்கு பிரசவம் நடந்துள்ளதாகவும், மகன் பிறந்திருப்பதாகவும் சொன்னார். அப்போது சந்தோஷமாக இருந்தது.

இளையராஜா

என்னுடைய மனைவி பிரசவத்தின்போதுகூட கம்போஸிங் செய்வதென்றுதான் இருந்திருக்கேனே தவிர, மனைவியை பக்கத்தில் இருந்து பார்த்துக்கவே இல்லை. எனது மனைவியும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மகன் பிறந்திருப்பதாக வந்து செய்தி சொன்ன நேரத்தில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அன்று கம்போஸ் செய்த பாடல் தான் ரஜினிகாந்த் நடித்த ஜானி படத்தின் சினோரீட்டா என்ற பாடல். யுவன் ஹேப்பி பர்த்டே யுவன்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com