கவினின் 'ஸ்டார்' பட மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடீயோ வெளியானது

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட உருவாக்கத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியானதுப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
கவினின் 'ஸ்டார்' பட மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடீயோ வெளியானது
Published on

இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் 'ஸ்டார்' பட உருவாக்கத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியானது

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த கவின், லிப்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். கவினின் இரண்டாவது திரைப்படமான டாடா மாபெரும் வெற்றி பெற்றது.

இதையடுத்து கவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஸ்டார். ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ப்ரோமோ வெளியானது.

இந்நிலையில், ஸ்டார் திரைப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடீயோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இத்திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடீயோ மற்றும் பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com