இனி டாக்டர் யுவன் ஷங்கர் ராஜா.. வாழ்த்தும் ரசிகர்கள்..

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.இவர் கிட்டத்தட்ட 150-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. 1997-ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா

25 ஆண்டுகளை கடந்து சினிமா துறையில் பயணிக்கும் யுவன் ஷங்கர் ராஜா தற்போது 'லத்தி', 'நானே வருவேன்', 'லவ் டுடே' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

யுவன் சங்கர் ராஜா

சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா இன்று (03.09.2022) நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பட்டம் பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com